Wednesday, February 22, 2012

காவல் கோட்டம் அப்டேட் 2: நெஞ்சை கொள்ளை கொண்ட களவு !!

காவல் கோட்டம் அப்டேட் 2:  நெஞ்சை கொள்ளை கொண்ட களவு



           களவு ஒரு விசித்திர செய்கை, மீனுக்கும் பறவைக்கும் மட்டுமே தெரிந்த தடமற்ற  பயணத்தின் ரகசிய  நெடு வழி

               முந்தைய பதிவு எழுதும் போது இது சரித்திர குறிப்புகளாய் இருக்கிறது இந்த நாவல், என்ன பெரிய நாவல் என நினைதேன், அடுத்த பகுதியை வாசித்தபின் எனக்கு இந்த நாவலின் ஆசிரியரின் கதை சொல்லும் திறனின் மீது ஒரு நம்பிக்கை வந்துள்ளது. ராஜியத்தின் கதை முடிந்து விட்டது போலும், மாயாண்டியும் சின்னனும் ஒரு சில பக்கங்களில் என்னை கவர்ந்து விட்டார்கள், அருமையான் விவரிப்பு. தாராபுரம் பெரிய கோட்டை விட்டு களவு ,என்ன ஒரு விவரிப்பு, Nice Introduction. இவர்கள்தான் இந்த கதையின் நாயகர்களோ, பாப்போம். அருமை. எழுத்தின் கவர்ச்சி இங்கு டைமிங்கில் வைதுள்ளார். தெளிவான துள்ளியமான களவு விவரிப்பு. I Just felt it happening infront of my Eyes.
                 மாயாண்டி சின்னானை பின்தொடர்கிறான், மாயாண்டி அதை பார்ப்பதுபோல விவரிக்கபடுகிறது, சின்னான் ஒரு விட்டிற்க்குள் சென்றுவிட பிறகும் விவரிப்பு தொடர்கிறது, அது எப்படி சாத்தியம் என சந்தேகம் நமக்குள் எழுவது சகஜம், அடுத்த பாராவை வாசித்து நான் புரிந்தவுடன் சொன்னது WoW. 270 பக்கங்கள் வாசிப்பிற்க்கு பிறகு WOW என சொன்ன தருனம். இது இந்த நாவலின் முதல் WOW.
                தூக்கில் தொங்கும் பெண்ணிடம் திருடாமல் வந்த சின்னான் சொன்ன காரணம், சூப்பர். எதார்த்தம். பாராட்டுகள். நன்றி,  நல்லவேளை மனுதர்மம் / பாவம் /புண்ணியம் பற்றி களவுகாரன் நமக்கு புத்தி சொல்லவில்லை.
            கனவனை தீர்த்துவிட்டு வருவது, அருனாக்கொடி தாலியாவது, முதல் கனவன் தாய் மாமன் ஸ்தானத்தில் இருந்து மறுமணம் செய்து வைப்பது என, இந்த 30 பக்கங்கள் என்னை மேலும் வாசிக்க தூண்டுது.
இதை எழுதும் போது தென்மேற்க்கு பருவ காற்று படதில்லிருந்து ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா எனும் பாடல் தொலைக்காட்சியில். What a Timing Song. 



               நகைச்சுவை இல்லை என எழுதிய முதல்பதிவிற்க்கு மாற்றாய், சிரிந்த தருனமும் இந்த பகுதியில்தான். கொள்ளிகட்டையை அடுக்கும் வெட்டியானிடம் ஆள் சின்னாள்தாப்பா கட்டையை ஒடுக்கி கட்டு என சொல்லிபோவது Black Humor.


  Hope it will go more interesting, let us see.

3 comments:

  1. காவல் கோட்டம் வாங்க வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே நிர்மல்.

    ReplyDelete