Thursday, February 13, 2014

ஊற்றுத் தண்ணீரே!!

   ஊற்றுத் தண்ணீரே!!

 எங்க ஊர்ல ஊற்று  தண்ணீர் எடுப்பது என்பது என்றாட வழக்கம். ஆற்று படுகையில்  இருக்கும் ஆற்று மணலை சிறிது தோண்டினால் ஊற்று   நீர் வரும். முதலில் கலங்கலாக வரும் நீரை இறைத்து வெளியே ஊற்றிக் கொண்டிருந்தால் மிக தெளிவான சுவையான ஊற்று தண்ணீர் கிடைக்கும்.

     மாலையில் பெண்களின் டைம் பாஸுக்கும் ஊர் கதைகள் பேசவும் இந்த ஊற்றி தண்ணீர் எடுக்கும் இடம் பயன்படும். பெண்கள் வரும் இடமென்பதால் பல காதலர்கள் சந்திக்கும் இடமும் இதுவே.

  ஊற்றுத் தண்ணீர் எடுப்பது  ஒருவிதமான கொண்டாட்டமாக இருக்கும். ஊற்று தோண்டுவது அதை பராமரிப்பது அது உடையாது நீர் எடுப்பது என்பது கலையாக கருதப்பட்டது. புதியதாக வரும் மருமகள்களுக்கு இந்த முறை கையை வரப் பெற நாளாகும். இதை வைத்து புது பெண்களை கேலியும் கிண்டலுமாக ஓடுகிற இடம் இந்த ஊற்றாங்க்கரை.

    சாடிலைட் டிவியின் ஆதிக்கத்தாலும்  ஆற்று மணல் கணக்கிலாமல் நோன்டியதாலும் இந்த ஊற்று தண்ணீர் எடுக்கும் முறை குறைந்துவிட்டது, சில வீடுகளில் நீரை சுத்திகரிக்கும் கருவிகளை பொருத்திக் கொண்டாலும்  சமைக்கவும் பருகவும் இந்த நீரை தவிர வேறு எந்த நீரையும் பயன்படுத்தாதவர்கள் இன்னும் அதிகம்தான்.

    இருந்தாலும் ஊற்றாங்கரையில் பெண்கள் அதிக நேரம் இப்பொழுது செலவழிப்பதில்லை, இளம் பெண்கள் அதிகம் வருவதில்லை, வெடுக்கென வந்து வெடுக்குன்னு சென்று விடுகிறார்கள். படிப்பு , வேலை , டிவி சிரியல் மிஸ் ஆகிடும் மற்றும் பசங்களின் தொல்லை போன்றவற்றால்  ஊற்று தண்ணீர் எடுப்பது  ஒரு வித கடமையாக செய்யப்படுகிறது.

 பழைய கொண்டாட்டம் இல்லாமல் ஒரு கடமையாக தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்  இப்பொழுது .

     இப்படி எடுக்கப்பட்ட ஊற்று தண்ணீருக்கு வீட்டில் சிறப்பு இடமும்   உண்டு.  மிக ஜாக்கிரதையாக செலவு செய்வார்கள், கை கழுவ முகம் கழுவ போன்ற காரியங்களுக்கு பயன்படுத்தி காலி செய்திட மாட்டார்கள். வீட்டுக்கு வந்த சிறப்பு  விருந்தாளிகளுக்கு மட்டும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு குழாய் தண்ணீர்தான்.

  ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே, ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா  - என்கிற விவிலிய வாசகம் நினைவில் வரும். ஊற்றில் தண்ணீர் எடுக்க எடுக்க தண்ணீர் ஊறுவதை பார்ப்பது பரவசமாக இருக்கும்.

   வெறும் 100 மீடர் பரப்பளவுக்கு மட்டுமே ஆற்று மணல் எங்கள் ஊரில் இப்பொழுது இருக்கிறது அதுவும் இன்னும் சிறிது காலத்தில் மறைந்து போகலாம் ஊற்று தண்ணீர் கூட கானல்   நீராகலாம். தாமிரபரணியில் வெள்ளம் வரும்  அதில் கொண்டுவரும் மணல் எங்கள் ஆற்றுப்படுகையை நிரப்பும் எங்கள் மக்களுக்கு என்றும் என்றும் ஊற்றுத் தண்ணீர ஜீவ நதியாக வரும் அங்கு எங்கள் ஊர் பெண்கள் என்றும் என்றும் ஆற்று மணலை தோண்டினால் தண்ணீர் எடுக்கும் இந்த எளிய முறையை அனுபவிப்பார்கள்  என்கிற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது.

      
 

  

1 comment:

  1. வணக்கம்
    உண்மையில் இப்படியான நிகழ்வுகளை எப்படி மறக்கமுடியும்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete