Sunday, February 16, 2014

தாமிரபரணி தொடரும் நம்பிக்கை பயணம் - புன்னைகாயல் விசிட் அனுபவம்


தாமிரபரணி   நம்பிக்கை பயணம்:  புன்னைகாயல் விசிட்   அனுபவம் 

 
                            பொதிகை மலையில் துவங்கிய அதன் பயணத்தை வங்க கடலோடு தொடரும் அந்த அருமையான இடத்தை கான எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆறும் கடலும் சந்திக்கும் அந்த அற்புத காட்சியை பரவசத்தோடு அனுபவித்தோம். சிறு வயது முதல் தாமிரபரணி ஆற்றோடு எனக்கு மிக நெருங்கி தொடர்பு உண்டு. ஆற்றுப் படுகையில் இருக்கும் எங்க ஊரின் வாழ்விற்க்கும் வளத்திற்க்கு ஒரே காரணம் தாமிரபரணி நதியென்றால் அது மிகையாகாது. குளிப்பது, குடிப்பது, விளையாடுவது, கடைசியில் அடங்கி போவது என எல்லாம் அந்த ஆற்றீன் ஓரத்திலே. ஆயிரம் ஆயிரம் கதைகள் அந்த தண்ணிருக்குள் அழ்ந்து கடக்கிறது, பல ஆயிரம் சந்தோஷங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறது.

         எங்க ஊர் கிரிக்கெட் அணியின் பெயர் தாமிரபரணி கிரிக்கட் அணி. இப்படியாக வாழ்வின் மிக முக்கிய பங்கு வகிக்கும்  எங்கள் தாமிரபரணி நதி கடலில் கலக்கும் இடமான புன்னைகாயலுக்கு முதல் முறையாக சென்றேன். அற்புத அனுபவம்.  
        நதியும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் சங்கு முக பிள்ளையார் கோவில் மற்றும் புனித தோமையார் ஆலையம்   என இரு புகழ் பெற்ற ஆலையங்கள் இருக்கின்றன.  
 
 அனைத்து இந்து கோவிலின் குட முழக்கு திருவிழாவிற்க்கான தீர்த்த நீர் இந்த பிள்ளையார் கோவிலிருந்துதான் எடுத்து செல்கிறார்கள்.  பல ஊர்களிலிருந்து இந்த இடத்திற்க்கு வந்து புனித நீரை எடுத்துச் சென்று தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். தென் மாவட்டம் மட்டுமின்றீ தமிழகத்தின் பல இடங்களுக்கு இங்கிருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. எல்லா திருவிழா கொண்டாட்டங்களும் இந்த புனித நீர் எடுத்து வரும் விழாவில்தான் துவங்கும். பக்தி பரவசத்தோடு கால் நடையாக தீர்த்த யாத்திரை செல்வது என்பது இங்கு உள்ள கோவில்களின் வழக்கம்.
 இப்படியாக இரு கோவில்கள் இந்த நதியின் சங்கம் இடத்தில் இருப்பதை குறீப்பிட்டு சொல்ல வேண்டியுள்ளது.
 தாமிரபரணி கடலில் கலக்கும் முன் பல சிறிய  நதிகளாகிறது இது பல சிறு தீவுகளை உருவாக்குகிறது. இப்படியான ஒரு தீவில் அமைந்திருக்கிறது இந்த இரு அலையங்களும்.
        சிறிய ஆலையமென்றாலும். இந்த கடற்கரை கிராமங்கத்தின் காவல் தெய்மாக கட்சியளிக்கிறார் தோமையார். இங்கு இருக்கும் தோமையார் கையில் வேல் கம்பு அயுதம் கொண்டு இருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முருகனின் வேல் எப்படி தோமையாரிடம்?  எந்த புணிதரும் கையில் ஆயுதம் எந்திய நிலையில் நான் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் இங்குள்ள தோமயாரின் உருவம் மிக வித்தியாசமாக இருக்கிறது.
 

       கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் முன் வணங்கும் ஆலையமாக, புதிய காரியங்களுக்கு தைரியம் கொடுக்கும் ஆலையமாக, திருமனம் செய்த அடுத்த நாள் மன மக்கள் ஆசிர்வாத பெறச் செல்லும் ஆலையமாக, வியாபாரம் துவங்கும் முன்பு தரிசனம் செய்யும் ஆலையமாக விளங்குகிறது இந்த புனித தோமையார் அலையம்.
      இந்து கோவில் வருட திருவிழாக்கள் அம்மன் கோவில் கொடை விழாக்கள் கும்பாபிஷேக விழாக்கள் போன்ற கொண்டாட்டங்களுக்கு புனித நீரை எடுத்துச் செல்லும் இடமாக இருக்கும் சங்குமுக பிள்ளையார் கோவிலின் தீர்த்தம் எடுக்க தீர்த்த யாத்திரையாக வந்து எடுத்துச் செல்கிறார்கள். சங்கு முக பிள்ளையார் கோவில்   புதிய துவக்கத்தின்  நம்பிக்கை சின்னமாக இருக்கிறது.
         கத்தோலிக்க விசுவாசிகளின் எல்லா புதிய துவக்கத்திற்க்கும் அவர்கள் முனைப்பிற்க்கும் உறு துனையாகவும் பாதுகாப்பாகவும் தோமையார் இருப்பார் என்பது புன்னைகாயலை சுற்றி இருக்கும் கத்தோலிக்க கிறுஸ்தவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.  
 

நதியின் முடிகிற இடமென்றாலும் அது ஒரு முடிவின் கதையாக பார்க்காது நம்பிக்கையின் அடையாளப்படுத்தும் இந்த ஆலையங்கள் ஆச்சரியபடுத்துகிறது.  இந்த ஆலையங்கள் மானுட நம்பிக்கைகளை புதிய கோனத்தில் பார்க்க தூண்டுகிறது. பார்க்க கற்று தருகிறது. வாழ்வியலை கொண்டாட்டமாக்குகிறது. இவைகளை நம்பிக்கையின் சின்னங்களாக பார்க்க சொல்கிறது.
   சங்கமத்தை - தொடரும் பயணமாகவே பார்க்க முடிகிறது, ஒரு வித சூழற்சியாக உணர முடிகிறது.  நான் லீனியராக  வாசிக்க சொல்கிறது. எது துவக்கம் எது முடிவு என்கிறதை ஒன்றுக்குள் ஒன்று இனைக்கிறது. மரணத்துக்குள் பிறப்பும் மீட்பும் என்கிறதையும் நினைவுபடுத்துகிறது.


No comments:

Post a Comment