Monday, March 21, 2011

கண்களின் உண்மை

கண்களின் உண்மை

காலை வெயில் சன்னல் வழியாக தன் கதிர்களை செலுத்தி அவள் முகத்தை செல்லமாக தட்டி எழுப்பியது . அவள் கண் விழித்தாள்,

எப்படி இவ்வளவு நேரம் துங்கினேன் என்று வீட்டின் பின்புறம் சென்று பல்லை விளக்கிக்கொண்டு, வீட்டில் முன்பு கட்டப்பட்டிருந்த அவளது இரண்டு ஆடுகளை அவிழ்த்துவிட்டாள்,

பஞ்சாரத்தை எடுத்து வீட்டின் மூலையில் வைத்தாள் .கோழிக்காக அதன் குஞ்சுகள் நீண்ட நேரம் எதிர்பார்த்தது போல வெளியே வந்தன., இரவில் பெய்த மழையில் அங்கும் இங்குமாய் சிறு குட்டைகளாய் இருந்தது அவள் வீடு இருந்த தெரு. தெரு மூலையில் உள்ள வைக்கோல் படப்பில் இருந்து வெப்பமான புகை வந்துகொண்டிருந்தது,

அடுப்பு மூட்டி காபி குடித்தாள், தனிமை துயரம்தான். என்ன செய்வது சீக்கிரம் அது மாறிபோகும் என்று தனது வயிற்றை பார்த்து கொண்டாள். சரியான வேளைக்கு சாப்பிடனுமாம் கமலாக்கா சொன்னாங்க என்று தனக்குள் பேசிக்கொண்டு காப்பியை குடித்து முடித்தாள். மீண்டும் தனது வயிற்றை தொட்டு ஒரு உற்சாகம் வந்ததுபோல அவளது வேலையை ஆரம்பித்தாள்.

பாண்டியனார் தோட்டத்தில் இருந்து கட்டு கட்டி நேற்றைக்கு மழையோடு மழையாய் அவள் தலையில் சுமந்து வந்த அந்த தென்னை ஓலைகளை பார்த்தாள், அம்மாடி என்ன மழை… சும்மாடு கூட நனைந்துவிட்டது என்று தென்னை ஓலை கட்டை அவிழ்த்து ஒரு ஓலையை எடுத்தாள். கையில் இருந்த பாளை அரிவாளை கொண்டு அதைநெடுக்குவாட்டில் பிளந்தாள், எல்லா ஓலைகளையும் பிளந்தபிறகு அவற்றை தனது கைகளுக்கு எட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, கப்ரியல் அண்ணாச்சி கடையில் கேட்டு வாங்கிவந்த சாக்கை விரித்து அதன் மேல் அமர்ந்தாள், இன்னொரு சாக்கை அவளது மடியின் மீது போட்டு, நெடுவாக பிளந்த ஒரு பச்சை நிற தென்னை ஓலையை எடுத்து கிடுகு பின்ன துவங்கினாள்.

தென்னை ஓலையின் தடித்த பகுதியில் இருந்து தொடங்கினாள். கீற்று பின்னும் போது அவளது இளமை பருவத்து நினைவுகள் வராமல் இருந்தது இல்லை, பொதிகை மலையின் அடிவாரத்தில் காட்டினுள் உள்ள மலை கிராமம்தான் அவளது, துள்ளும் தாமிரபரணியின் ஆற்றின் ஓட்டத்தை போல இருந்தது அவளது இளமை, கூத்தும் கொண்டாட்டமும் என்று, சொந்தம் பந்தம் என்று எப்போதும் ஒன்றாய் சாப்பிட்டு விளையாடி தூங்குவது என்று உற்சாகமான கழிந்த நாட்கள் அவை, கிடுகு பின்னும்போது முதல் இரண்டு கீற்றை விடுத்து மூன்றாம் கீற்றை ஒடித்து மடக்கினாள், அப்படி மடக்கும் போது கீற்றுகள் கிழிந்து விடாமல் மடக்கினாள், கீற்று கிழிந்தால் பலமற்று போகும்.

நாசுக்காய் அந்த முன்றாவது கீற்றை மடக்கினாள். தேர்ந்த அவளது விரல்கள் அந்த தென்னை கிற்றுகளை ஒருங்கிணைத்து கிடுகாய் மாற்றியது,

காட்டின் வாசனையும் அந்த வெகுளி மனிதர்களின் நேசமும் அவள் நேசித்த மரங்களையும் அவள் விட்டு விட்டு இந்த கிரமத்திற்கு வந்து ஒரு வருடம் ஆகிறது, எப்படி நடந்தது என்று தெரியவில்லை

அன்பிற்கு அடிபணிந்து சங்கர பாண்டியனோடு காட்டை விட்டு ஓடிவந்துவிட்டாள், ஓடிவந்து இந்த கிராமத்தில் ஒரு வீடு பார்த்து சங்கர பாண்டியனோடு குடும்பம் பண்ண ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. சங்கர பாண்டியனுக்கு, அருகில் உள்ள நகரத்தில் லாரி ஓட்டும் வேலை, மாசத்திற்கு ஒரு வாரம் அல்லது பத்து நாள் அவளோடு இருப்பான் மற்ற நாட்களில் கேரளா லோடுக்கு போனேன் , ஆந்திரா லோடுக்கு போனேன் என்பான். விட்டு வந்த காட்டின் நினைவு அவளை வதைப்பதை விட இந்த கிராமத்து தனிமை அதிகம் வதைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நினைவுகளோடு அவளது விரல்களின் விளையாட்டால் ஒன்றின் பின் ஒன்றாய் அந்த தென்னை ஓலைகள் கிடுகாய் மாறின.

அப்போதுதான் அவள் பார்த்தாள், அவளது ஆடுகளும் அவளது கோழியும் ( தனது குஞ்சுகளோடு )அவளது அருகில் வந்து நின்று கொண்டு இருந்தன.

என்ன இரை தேட போவலியா என்று , துரத்தினாள், கொஞ்சம் தூரம் சென்று விட்டு மீண்டும் அவள் அருகில் வந்து நின்றன, அவைகள் இவளது முகத்தை ஏறிட்டு பார்ப்பது போல இருந்தது, இதுகளுக்கு என்னவாச்சி என்று மடியில் கிடந்த சாக்கை எடுத்து அருகில் வைத்து விட்டு எழும்ப முயற்சித்தாள்,

அவள் எதிர்பார்க்கும் முன்பு நான்கு பேர் தட தட என வீட்டிற்குள் நுழைந்தார்கள், யார் என்று முகத்தை பார்ப்பதற்குள் உட்கார்த்திருந்த அவளின் வலது தோள் பட்டையில் சரியான ஒரு மிதி மிதித்து ஒரு கால், எம்மோய் என்று கத்தியவாறு அந்த கருத்த நான்கு உருவங்களை பார்த்தாள்..

பார்த்த சிறுது நேரத்தில் இன்னுமொரு உருவம் தே** மு** என்று அவளது தொடைகளை மிதித்தது, மீண்டும் ஆத்தா என்று அலறியபடி தனது கைகளை தனது தொடையை நோக்கி கொண்டு சென்றாள்

, அவளது கண்களும் அவளது கைகளை தொடர்ந்தன, தொடை நோக்கி இருந்த அவளது மண்டையின் பின்புறத்து மயிரை கொத்தாக பிடித்து தூக்கினான் ஒருவன், வின் வின் என்று வலிக்கும் தோளும் அவளது தொடையும் அவளை நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் செய்தன, நழுவிருந்த முந்தானையை சரிசெய்ய அவளது கைகளும் கண்களும் அதை தேடி அதை நோக்கி கொண்டு செல்லும்போது அவளது இரு கைகளும் முறுக்கப்பட்டு அவளது முந்தானையால் பின்புறத்தில் கட்டப்பட்டன. கண்கள் இருண்டன

சோர்ந்து தரையில் விழ பார்த்தாள், மயங்கினாள், உடல் எங்கும் அட்டைகள், வந்த உருவங்கள் அவர்களுக்கு சொல்லப்பட்ட காரியத்தை செய்துகொண்டிருந்தன்

, உடல் முழுவதும் காட்டு காத்து உரசி சென்றது. நிற்க நேரம் இல்லை உதவிக்கு யாரும் இல்லை ஓடு ஓடு ஓடு என்றது மனம், தனது பலம் கொண்டு திமிறி அவரகளது பிடியில் இருந்து ஓடினாள், வீட்டுக்கு வெளியில் ஓடி கொண்டிருந்தாள், சிறு சிறு குட்டைகளை கால்களால் மிதித்து கட்டுப்பாடு இன்றி அந்த வைக்கோல் படப்பை சென்று அடைத்தாள், வைக்கோல் படைப்பின் வெப்பம் அவளது நிலையை அவளுக்கு உணர்த்தியது. ஓஓஓஓஒ என்று சப்தம் போட்டாள் பிணம் போல விழுந்தாள்.

னது அனுபவத்தில் பல குற்றங்களுக்கு தீர்ப்பு சொல்லி இருக்கிறார், இருந்தாலும் இந்த கேஸ்தான் அவர் சொல்லபோகும் கடைசி தீர்ப்பு. இந்த கேஸ் ஆரம்பித்த முதல் பார்த்து கொண்டு இருக்கிறார் அரசு வக்கில் வேண்டும் என்று சொதப்புகிறார், சரியான நேரத்தில் சாட்சிகள் கோர்டிற்கு கொண்டு வராமல் வாய்தா வாங்குவதும், தேவை இல்லாமல் கேசை திசை திருப்பி கொண்டும் இருக்கிறார்.

எல்லா சாட்சிகளும் பல்டி அடித்தன, சங்கர பாண்டியன் மட்டும் தனக்கும் அந்த பெண்ணிற்கும் உறவு உண்டு என்றும் அவளது வயற்றில் வளரும் குழந்தை அவனோடுதுதான் ஆனால், சம்பவத்தை நேரில் பார்கவில்லை என்று கூறினான். அந்த ஊர் SI எழுதிய FIR படி அந்த பெண்ணிற்கும் உயர் சாதியை சேர்ந்த சங்கர பாண்டியன் என்பவர்க்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதை கேள்விப்பட்டு உயர் சாதி கும்பல் அந்த பெண்ணை நிர்வாணபடுத்தி அந்த ஊரின் வீதிகளில் நடக்க விட்டதாகவும் அதற்காக நான்கு பேரை கைது செய்ததாகவும் எழுதிருந்தார். இதை தவிர்த்து எந்த ஒரு கள ஆய்வோ, பார்த்த சாட்சிகளை பற்றி எந்த குறிப்புமோ இல்லை. FIR அந்த பெண்ணின் வாக்குமுலம் என்பதால் அதை வைத்து எந்த ஒரு தீர்ப்பும் எழுதிவிடமுடியாது என்று சட்டம் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்ததுதான். மிக வலிமை குறைந்து போன இந்த கேஸில் அந்த பெண்ணின் கண்கள் மட்டும் மிகவும் நேர்மையாக கனிவோடு உண்மையாய் இருந்தன, ஆனால் கண்களின் உண்மையாய் வைத்து எப்படி தீர்ப்பு எழுதுவது?

மலை வாழ் பழங்குடியினரை பற்றி படிக்க ஆரம்பித்தார், சந்தல் படுகொலை, அசாமில் போடோ இன படுகொலை என்று இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் நடந்த படுகொலைகளை பற்றி படித்தார். எப்படி பழங்குடினரின் காளி, அம்மன், மாரியம்மா கோவில்கள் சிவதலமாய், வைணவ கிருஸ்துவ தலமாய் ஆக்கப்பட்டன என்று படித்தார்.

தான் வணக்கும் சிதம்பர நடராசர் கோவில் கூட ஒரு காலத்தில் தில்லை காளியின் கோவிலாகத்தான் இருந்திருக்க வேண்டும், பழங்குடி தெய்வமான தில்லை வன காளியை நாட்டியம் என்ற பெயரில் வென்று காளியை ஊருக்கு வெளியே தள்ளிய அந்த சூது அவருக்கு புரிந்தது. எல்லா சிவதலங்களை காட்டிலும் மாறுபட்ட அமைப்பில் இருக்கும் அவரது சிதம்பர நடராஜரின் கோவில் ஒரு ஆண் ஆதிக்க மேல் சாதியனரின் அராஜகம் குறியீடுதான் என்பதை புரிந்து கொண்டார். ஒரு வேளை இதுதான் சிதம்பர ரகசியமோ என்று நினைக்கும் போது எல்லாம் அவரது உடல் புல்லரித்ததை அவரால் தடுக்க முடியவில்லை.

உலக தத்துவத்தின் நாடு இது என்றும், அஹிம்சையின் பிறப்பிடம் என்றும் முழங்கும் நாம் இந்த நாட்டின் பூர்வ குடிமக்களை எப்படி நடத்துகிறோம்? இந்த நாடு எனது என்று மார்தட்டும் நாம் எல்லாம் வெளியில் இருந்து வந்தவர்கள்தான் ஆரியர்களுக்கு முன்பு திராவிடர்கள்.

தொழில் புரட்சிக்கு பின்பு எப்படி வட அமெரிக்காவிற்கு உலகமெங்கும் இருந்து மக்கள் குடி புகுந்தார்களோ அப்படித்தானே பல கூட்டம் இந்த இந்தியா என்ற நாட்டை அடைந்திருப்பார்கள் உணவு தேடி. இந்த குடி புகுந்த சந்ததிகள்தான் இந்த நாட்டின் 92% சத விகிதம் மக்கள், இந்த நாட்டின் பூர்வ குடிகளை வெறும் 8 சத விகிதம் ஆக்கிய பெருமை நாம் எல்லோருக்கும் உண்டு.

தெளிவாய் ஒரு தீர்ப்பு எழுதினார்.

************************************************

அவர் தீர்ப்பு இருக்கட்டும்… இதை படிக்கும்

நீங்களும் அந்த நான்கு பேருக்கும் ,உங்களுக்கும். எனக்கும் தீர்ப்பை இங்கே எழுதுங்க. மன சாட்சியோடு .

நமது தாத்தாவிற்கும், பாட்டனுக்கும், நம் பிள்ளைகளுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் சேர்த்து எழுதுங்கள் .........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

யா, காளி கோவிலுக்கு போய்ட்டு வரேன் என்றாள். போ போ அவள் உனக்கு ஆறுதல் தருகிறளா இல்லை நீ அவளுக்கு ஆறுதல் சொல்லபோறியா என்று பார்போம் என்றார் ஒய்வு பெற்ற நீதிபதி. You both are sailing in the same boat.

அவள் இந்த Judge ஐயா என்ன சொல்லுறார்? ஒண்ண்ம் புரியல என்று கோவிலை நோக்கி தனது கை குழந்தையோடு சென்று கொண்டுருந்தாள். நம்பிக்கையோடு.

____( கதை முடிந்தது.. இது போன்ற சம்பவங்கள் முடியவில்லை ) ____________________________________

______________________________________________-


நந்தபாய் என்ற 25 வயது மலை வாழ் பெண்ணின் மீது உயர் சாதியினரின் வன்முறை வழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கொண்டு எழுதிய ஒரு சிறு கதை முயற்சி. If you want to read the Supreme Court Judgement

http://www.hinduonnet.com/thehindu/nic/scfulltext110111.pdf

No comments:

Post a Comment