Wednesday, March 16, 2011

I dont care ..- short story

I dont care

அப்படினா நடந்த சம்பவத்திற்கும் உங்களுக்கும் எந்த சம்பதமும் இல்லை அப்படிதானே - இப்படி கேட்டது போலீஸ் கிரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டர் விக்ரம். இடம் எங்கள் ஊர் காவல் நிலையம்.

சார் சம்பவம் சம்பவம் என்று சொல்றிங்களே அப்படி என்ன சம்பவம் சார் நடந்துச்சி.
இந்த போட்டோவை பாருங்க என்று என் முன்பாக சில போட்டோக்களை காண்பித்தார், ஆமாம் இது தாராசுரத்தில் உள்ள சிற்பங்கள், ஒரு ஒரு படமாய் பார்த்துகொண்டுவந்தவன் உறைந்து விட்டேன், அந்த ஒரு பெண் முகம் நான்கு ஜோடி கால்கள் சிற்பம் பெயர்க்கபட்டிருந்தது, அந்த இடத்தில MRINZO என்று அழகாய் பெயன்ட்டால் எழுதபட்டிருந்தது.
அது எப்படி mrinzo நீங்க அந்த தாராசுரம் பத்தி எழுதின பிறகுதான் இந்த சம்பவம் நடந்திருக்கு. so உங்களுக்கும் இதற்கும் ஏதோ சம்பதம் இருக்கணும்.
சார் எவனோ சின்ன பசங்க பண்ணின குசும்பு சார் என்றேன்.
அப்படியா என்று என்னுமொரு போட்டோவை காண்பித்தார். லப் டப் லப் டப் லப் டப் லப் டப் என்று இயங்கிகொண்டிருந்த எனது இதயம் லப்ப்ப்ப்ப்ப்ப்ப் .................... டப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் என்று அடிக்க ஆரம்பித்தது.
போட்டோவிலிருந்து என் கண்களை உடனடியாக விலக்கி விக்ரமை பார்த்தேன்.
அது வேறுயாரும் இல்லை ஒரு மேல் சாதி கட்சி தலைவர்தான், அவரை கொலை செய்து நீங்க எழுதின தராசுரம் கோவிலில் போட்டு இருக்காங்க.
சார் நான் எப்படி சார், நான் இந்தியாவில் இல்லை சார்.
எங்களுக்கு தெரியும் - என்று தனது இருக்கை விட்டு எழும்பினார் விக்ரம்.
எனது அருகில் வந்து எனது கண்களை நோக்கி பேச ஆரம்பித்தார் விக்ரம்.
அவரது perfume கண்டிப்பா Calvin Klein CKவாகதான் இருக்கணும் என்று நினைத்து கொண்டேன்.
mrinzo உங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான், பின்ன எதுக்கு அவன் mrinzo என்று அந்த இடத்தில எழுதிவைக்கணும் சொல்லுங்க. - மறுபடியும் விக்ரம்.

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க........................சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க........................
தெரியல சார் - நான் சொன்னேன்.
மறுபடியும் சொல்லுங்க என்றார் அதிகார குரலில்.
அப்புறம்தான் புரிந்தது எனக்கு தொண்டை வற்றி குரல் வராமல் பேசிருகிறேன். தண்ணி என்று செய்கை செய்தேன்.
அந்த நேரம் விக்ரமின் செல் போன் கனைத்தது. ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு அவரது அறையை விட்டு வெளியே சென்றார். கொஞ்ச நேரத்தில் ஒரு constable தண்ணிர் பாட்டிலோடு வந்து, சார் நீங்க MRINZO தான பார்வையாளன் வேண்டுகோளுக்கு இணங்க கிரைம் சப்ஜெக்ட் தேடி போலீஸ் ஸ்டேஷன்னுக்கு வந்திடிங்க்லே, சூப்பர் சார் என்றார். நல்லா ரிசர்ச் பண்ணுங்க சார் என்று சொல்லிவிட்டு போனார்.

ஓகே சார் எப்படியாவது கண்டுபிடிசிடுவோம் சார், ஒன் அவர் கழிச்சி உங்களுக்கு அப்டேட் கொடுக்கிறேன் என்று நுழைந்தார் விக்ரம்.
இந்த கொலை மற்றும் இல்லை Mrinzo, எல்லா சாதி கட்சி தலைவர்களை கடத்திட்டு போயிட்டாங்க அவங்களை கொலை பணிடுவேன்னு மிரட்டல் வந்திருக்கு என்று இன்னும்மொரு சுனாமி அலையை என் மீது மோத வைத்தார் விக்ரம். எனக்கு ஒன்னும் புரியலை சார், யாரோ ஒருத்தன் தேர்தல் சமயத்தில் எல்லா சாதி கட்சி தலைவர்களை கடத்திட்டு கொலை பணிடுவேன்னு மிரட்டல் விட்டா அதற்க்கு நான் என்ன சார் பண்ணுவேன் சொல்லுங்க.
தண்ணீர் குடித்தால் தொண்டை இயல்பாகிவிட்டது போல ஆனால் அது தெரியாமல் பேசியதில் என் வார்த்தைகள் கொஞ்சம் அதிகமான சப்தத்தோடு வந்து விழுந்துவிட்டது. தண்ணி குடிச்சதுகூட தப்பா போச்சோ.....
விக்ரமுக்கு அந்த தொனி பிடிக்கவில்லை போலும், முறைத்தார். யாருக்குத்தான் பிடிக்கும். .
மன்னிச்சிடுங்க என்று சமாளித்தேன்.
எனது வேலை, வடிவேலு ஜோக்கு, நல்லா சாப்பாடு, கொஞ்சம் சரக்கு, நேரம் கிடைக்கும் போது ப்ளாகில் எழுதுவதுமாய் இருந்த என்னை சிற்பம், கொலை, கடத்தல் என்றால் என்னவாகும். குழம்பிகிடந்தேன்......
விக்ரமிற்கு ஒரு போன் வந்தது. ஒ அப்பிடியா, நல்லா confirm பண்ணிடிங்களா , ஒ sure. ஓகே சார். என்று போனை துண்டித்தார் விக்ரம்.
mrinzo நீங்க போகலாம், இந்த MRINZO என்கிறது ஒரு புதிய குளிர்பான கம்பனியாம், அவிங்க குளிர்பானத்தோட
பெயரை ஊரு முழுக்க எழுதிருக்காணுவ இப்பதான் கும்பகோணத்தில் இருந்து போன் வந்தது.
அப்புறம் அந்த கொலை என்றேன் படபடப்பு நீங்காமல்
அது கொலை இல்லையாம், சரக்கு ஓவர் அதுதான் மரணம் என்று போஸ்ட்மார்டம் ரிபோர்ட்ல சொல்லிட்டாங்க என்றார்.
அப்புறம் அந்த சாதி கட்சி தலைவர்கள் என்று தொடர்ந்தார் ....
சார் I dont care என்று, thank you சொல்லிவிட்டு கிளம்பினேன்.

No comments:

Post a Comment