Thursday, April 7, 2011

ஜனலோக்பால் மசோதா தெரிய வேண்டிய சில தகவல்

ஜனலோக்பால் மசோதா தெரிய வேண்டிய சில தகவல்
தேர்தல் பரபரப்பில் இருக்கும் தமிழகத்தில் தேர்தல் தவிர மற்ற எல்லா செய்தியும் பெட்டி செய்திதான், இருந்தாலும் இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறக்கு நடக்கும் ஒரு கட்சி சார்பற்ற ஒரு போராட்டம் பற்றி தெரிய வேண்டிய சில தகவல் பற்றி ஒரு சிறு பதிவு.

  1. லோக் பால் மசோதா என்றால் என்ன? லோக்பால் என்றால் மக்களின் பாதுகாவலர் என்று பொருள். இது ஒரு மசோதா அதாவது பாராளுமன்றத்தில் இந்த மசோதா பெருமான்மை பெற்று சட்டம் ஆக ஆக்கபடவேண்டியது. முதலாவது லோக்பால் மசோதா நான்காவது லோக்சபாவில் சமர்பிக்கப்பட்டது அதாவது 1969 ஆம் ஆண்டு ஆனால் அது சட்டமாக்க படவில்லை மீண்டும் இந்த மசோதா 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005 and in 2008, ஆண்டுகளில் முயற்சி செய்தும் இதை சட்டமாக்க முடியவில்லை. தற்போது பல திருத்தங்களோடு இந்த மசோதாவை வரும் கூட்டத்தொடரில் ஆளும் அரசு மீண்டும் அறிமுக படுத்தபோகிறது.
  2. ஜன லோக் பால் மசோதா என்றால் என்ன? நமது தேசத்தின் சில சமுக ஆர்வலர்கள் மேல சொன்ன இந்த லோக்பால் மசோதாவை மேலும் மெருகூட்டி, இன்னும் மிக கடுமையான தண்டனைகளோடு மேலும் அதில் உள்ள ஓட்டைகளை அடைத்து ஒரு புதிய மசோதாவை கொண்டுவந்தர்க்கள் அந்த மசோதாவின் பெயர்தான் ஜன்லோக்பால். இதில் ஊழல் ஒழிப்பு / கண்காணிப்பு ஆணையம் தற்போது உள்ள தேர்தல் ஆணையம் மாதிரி அரசியல் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு சுதந்திர ஆணையம்மாக செயல்படும், மேலும் பிரதமமந்திரி வரை இந்த ஆணையத்திற்கு கட்டுப்படுவார். இந்த ஜனலோக்பால் மசோதாதான் நமது நாட்டில் உள்ள ஊழல் நோயிற்கு நமக்கு தெரிஞ்ச ஒரு தடுப்பு மருந்து.
  3. அண்ணா ஹசாரே என்பவர் யார்? அண்ணா ஹசாரே என்பவர் ஒரு காந்தியவாதி இவர் ஒரு சமுக ஆர்வலர் இவரது முயற்சியினால்தான் இந்த லோக்பால் ஜனலோக்பல் ஆனது, இதற்க்கு இன்னும் பலர் தங்களது பங்களிப்பை அளித்துள்ளார்கள் அதில் முக்கியமானவர் கிரண் பேடியும் ஒருவர்.
  4. எதற்கு இந்த போராட்டம்? இந்த ஜனலோக்பால் மசோதாவை மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று தயாரித்து கொண்டு இருக்கிறது, இந்த குழுவில் உள்ள அமைச்சர்கள் எல்லோரும் ஏற்கனவே எதாவது ஊழலுக்கு உடந்தையாய் இருந்தவர்கள், இப்படி பட்டவர்கள் ஏற்றும் ஊழல் தடுப்பு சட்டம் கண்டிப்பாக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பெரும் பணக்கார தொழில் அதிபர்களுக்கும் சார்பாக இருக்கும் என்பதால் அந்த சட்ட குழுவில் மக்கள் பிரிதிநிதி இருக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் போராட்டம் இந்த ஜந்தர் மாந்தர் போராட்டம். ஜந்தர் மாந்தரில் அண்ணா ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார், இதற்க்கு நாடு எங்கும் உற்சாக அதரவு பெருகிகொண்டுவருகிறது.
  5. நாம் என்ன செய்ய முடியும்? உற்சாகமாய் பங்குபெறலாம், கோவில் கல்லூரி என்று மற்ற பொது இடங்களில் இந்த போராட்டத்தை பற்றி விழிப்புணர்வு உருவாக்கலாம். ட்விட்டர், facebook இல் உங்கள் ஆதரவை சொல்லலாம்.

1 comment:

  1. இந்த நாட்டில் ராசா போன்ற ஊழல் வாதிகளை ஒழிக்க இந்த சட்டம் வர வேண்டும்.

    ReplyDelete