வாழ்த்துகள், தங்களை மீண்டும் முதலமைச்சராய் ஆக்கிய தமிழர்களின் சார்பில் எனது வாழ்த்துகள். எத்தனை அமைதியான புரட்சி தமிழன் செய்துவிட்டான், இந்தியாவே வியக்கும் வண்ணம் இந்த தேர்தலை சரியாக பயன்ப்படுதிவிட்டான் தமிழன். இந்த தருணத்தில் எனது சிந்தனையை உங்களுக்கு கடிதம் முலம் பகிர்ந்துகொள்ளலாம் என்று இருக்கிறேன்.
உங்கள் மீது தமிழனின் நம்பிக்கை இன்னும் இருக்கிறது, அதுவும் ஒரு மிக பெரிய வெற்றியை உங்கள் கையில் தந்து உள்ளார்கள். திமுக கட்சியினர் மற்றும் கருணாநிதி குடும்பத்தினரின் ஊழலுக்கு மற்றும் ஆராஜகத்திர்க்கும் எதிரான மக்களின் பதில்தான் இன்று நீங்கள் கொண்டாடும் இந்த வெற்றி. உங்களுக்கு தெரியும் இதற்க்கு முன்பாக உங்களது தோல்விக்கு காரணமும் உங்களது கட்சியினர் மற்றும் உங்கள் நண்பர்கள் குடும்பத்தினரின் ஊழல் மற்றும் அராஜாகம்தான். மீண்டும் மீண்டும் இந்த ஊழல் சுழற்சியில் இருந்து தமிழக அரசியலை விடுவிக்கத்தான் இந்த வாய்ப்பை தந்து இருக்கிறார்கள்.
அதிகாரத்தோடு சேர்ந்து வருவதுதான் ஊழலும் அராஜகமும், இதை ஒழிப்பதோ அழிப்பதோ முடியாது அனால் அதை சரியாக நிர்வாகம் செய்யலாம். பொதுவாக இந்திய அரசியலில் ஒரு முறையான நிர்வாகத்திற்கு உள்கட்சி பூசல், ஒரு குறிபிட்ட சமுகம் அல்லது நபரை திருப்திபடுத்தவேண்டிய கட்டாயம், கூட்டணி அரசியல் கட்சியினரின் கேவல அரசியல், ஆளும் தலைவர்களின் குடும்பம் என்று பல தடைகள் இருக்கும். இந்த தடைகளை சரியான முறையில் நீக்குவதற்கு சிரமங்கள் எல்லா அரசியல் தலைவர்களுக்கு உண்டு ஆனால் உங்களது தலைமை ஒரு சக்திவாய்ந்த தலைமை உங்கள் கட்சியில் நீங்கள் சொல்வதுதான் சட்டம் உங்களை மீறி எந்த ஒரு தலைவரும் ஒன்றும் செய்துவிட முடியாது, மேலும் எதிர் கட்சியினர் தொந்தரவும் சில நேரம் சிரமமமாக இருக்கும் அந்த தடயையும் தனது தேர்தல் வாக்கினால் நீக்கிவிட்டு இந்த இமாலைய வெற்றயை தந்திருக்கிறான் தமிழன்.
உங்களது நிர்வாக சிறப்பாக நடப்பதற்கு நீங்கள் கண்டிப்பாக சில மாற்றங்கள் செய்யவேண்டும் கண்டிப்பாக அது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த மாற்றங்கள் உங்களுக்கு ஒரு சவால்தான். உங்களக்கு என்று குடும்பம் இல்லை என்றாலும் உங்களது நண்பரும் அவரது குடும்பத்தினரும் செய்த ஆராஜகம் உங்களுக்கு கண்டிப்பா இந்த முறை ஒரு சவால்தான். உங்களது அடுத்த நண்பர் மொடிஜி அவர்கள் எங்கள் வயற்றில் புளி கரைக்கிறார், அவரது குஜராத்தைவிட எந்த வகையிலும் தமிழகம் குறைந்ததில்லை எனபது உங்களுக்கு தெரியும், பொருளாதார வளர்ச்சி, விவசாயா வளர்ச்சி , வறுமை ஒழிப்பு, சட்டம், மேலும் பல துறைகளில் தமிழகம் குஜராத்தை விடவும் அல்லது அதற்க்கு சமமானதாக இருக்கிறது எனபது உங்களுக்கு தெரிந்திருக்கும், நீங்களும் கருணாநிதியும் ஆட்சி செய்தே இவ்வளவு வளர்ச்சி என்றால் இந்த மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உகித்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர் மொடிஜியிடம் இருந்து அவரது வளர்ச்சி நோக்கிய நிர்வாகத்தை மட்டும் எடுத்து கொள்ளுங்கள், அவரின் ஹிந்துத்வா உங்களுக்கு வேண்டாம் ஏனென்றால் உங்களின் தேர்தல் வெற்றிக்கு அது தேவை இல்லை, அங்கு அவருக்கு அது தேவை படுகிறது தயவு செய்து கடந்த முறை போல குழம்பிவிடவேண்டாம்.
உங்களுக்கு முன்னோடிகள் காமராஜ் மற்றும் MGR என்ன செய்தார்கள் என்று புரட்டிபாருங்கள் உங்களுக்கு தெரிந்துவிடும். வளர்ச்சி நோக்கிய உங்கள் நிர்வாகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், அதரவு அற்றர்வர்கள், சிறுபான்மையோர், பெண்கள் என்று அனைவரையும் அதில் சேர்த்துகொள்ளுங்கள்.
இந்த வெற்றி ஊழலுக்கும் ஆராஜகத்திர்க்கும் மக்கள் காட்டிய எதிர்ப்புதான். வரும் ஐந்து ஆண்டுகளில் இந்த இரண்டையும் உங்கள் கட்சினர், உங்கள் நண்பர்கள் மற்றும் நீங்கள் எப்படி சிரமப்பட நிர்வகிக்க போகிறிர்கள் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை நீங்கள் சரி வர செய்துவிட்டால் உங்களை இந்தியாவிற்கு தலைமை ஏற்கும் வரை இந்த தமிழகம் உங்கள் பின்னால நிற்கும். மாயாவதியும், உங்கள் நண்பர் மோடிஜியை விடவும் உங்களுக்கு தகுதியும் திறமையும் இருக்கிறது என்பதை இந்த ஐந்து ஆண்டுகளில் உண்மை ஆக்குகள்.
No comments:
Post a Comment