Tuesday, July 5, 2011

லினியர் / நான்லினியர் எழுத்து

                         நான் லினியர் எழுத்து எனபது ஒரு வகுக்கப்படாத ஒன்று அது கட்டுப்பாடு இன்றி ஓடும், தர்க்க முறை சாராமல் இருக்கும், களம் மாறும், காட்சி மாறும், சுதந்திரமாய் சிதறி தெறிக்கும், எதற்கும் கட்டுப்படாமல் அது ஓடும்.  
                                
                           இப்படி சுதந்திரமாய் கட்டுபாடுகள் பொறுப்பு இன்றிதான் நமது மனதளவில் வாழ ஆசை படுகிறோம். இப்படி வாழ வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கும். இங்கு எதையும் புரியவேண்டும் என்று ஒரு நிர்பந்தம் இல்லை ஆனால் பிடித்திருக்க வேண்டும். பிடித்திருத்தல் இங்கு முக்கியம் அதன் சாத்தியம் முக்கியம் இல்லை. முழு சுதந்திரம் அதன் நீட்சியாக மனமகிழ்வும், அதன் தொடர்ந்து  மனதை மகிழவைத்தலும்.  ஒரு சுழற்சி பாதையில் பயணிக்கும்.  இப்படிதான் நாம் சிந்திக்க பழகிகொள்கிறோம். இப்படித்தான் வாழவேண்டும் இப்படி வாழ்ந்தால் நமக்கு இந்த வாழ்வின் செல்வம், மகிழ்வு, பெருமை, போன்ற எல்லாம் கிடைக்கும், இந்த கட்டுகோப்பான வாழ்வு முறை இன்றைய சுழலில் தரும் முக்கியமான ஒன்று உடனடி பலன். பலன் நமது வாழ்வின் குறிக்கோள். புரிதல் இங்கு மிக அவசியம் அதைவிட முக்கியம் அந்த புரிதலின் சாத்தியம். இங்கு பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்பதற்கு  முக்கியத்துவம் இல்லை, புரிதலுக்கும் சாத்தியதிற்க்கும்தான். புரிதலும் புரியவைத்தலும். நேர் கொட்டில் பயணிக்கும். 
                        
               லினியர் வகை எழுத்துகள் நாம் கற்று கொண்ட பாடமுறையை சார்ந்தது ஒரு கட்டுகோப்பான, முறைபடுத்தப்பட்ட , தெளிவான, புரியக்கூடிய, எளிமையாக, ஒரு தருக்க முறையோடு, அறிவியல் சிந்தனையோடு இருக்கும்.                       

  •  செய்திதாளில் நாம் படிப்பது லினியர் எழுத்து என்று சொல்லலாம்.
  •  இன்டெர் நெட் நான் லினியர்.
  • நமது சிந்தனை முறை தருக்க முறைதான் என்று நாம் நினைக்கலாம். நமது சிந்தனைக்கு ஏது முறை, சிந்திக்கிறோம் அவ்வளவுதான், இதில் எங்கு வந்தது லினியர் அல்லது நான்லினியர்? 
  • லினியர் : தருக்க முறையால் நிகழ்வுகள் இணைக்கப்பட்டிருக்கம், நான்லினியர்: அர்த்தத்தால் இணைக்கப்பட்டிருக்கம் but அர்த்தம் நாம் கொடுக்கவேண்டும்.  அர்த்தம் எனக்குள் உதிக்கும் அது மற்றவர்களின் அர்த்தத்திற்கும் வேறுபடலாம். வேறுபாடு கொண்டாட்டம்தான் அதை ஏற்றபின்.      
  • நான்லினியர் என்ற வார்த்தைக்குள் நான் இருக்கிறது - I am. 

More Information:
http://www.youtube.com/watch?v=6gmP4nk0EOE
http://chuckslamp.com/index.php/2009/04/11/non-linearthinking/
http://www.escapetheivorytower.com/2011/01/in-praise-of-the-non-linear-life/
http://www.rpi.edu/dept/llc/webclass/web/filigree/kotmel/linear.html

1 comment: