Tuesday, July 12, 2011

பின் நவீனத்துவம் : எனக்கு புரிந்தவை 1

       நவீனத்துவம் மீது சந்தேகமும் அதை மறு ஆய்வு செய்வதும்தான் பின்நவினத்துவம் என்கிறார்கள்.   நவீனத்துவம் = நவீனம் + தத்துவம் . நவீன தத்துவ முறை  காரணமும் / விளைவும் ( Cause and Effect)  வகையை சார்ந்தவை.   இதைதான் நாம் "அறிவியல் முறை சிந்தனை" என்றும் சொல்லுகிறோம்.  அறிவியல் முறை சிந்தனைகளை   சந்தேகமாய்  பார்க்கிறது பின்நவினத்துவம். நவீன முறை விஞ்சானம் வளர்ச்சி அனைத்தையும் சந்தேகிக்கிறது. 
             முதலில் இந்த பின்நவினத்துவம் என்றால்  என்ன என்று வரைபடுத்த கூடாதாம் ஏன்  என்றால் அதுவே பின் நவீனத்திற்கு எதிர் ஆனதாம்,   அதாவது இதுதான், இப்படிதான்,  இதுதான் சரி, இந்த ஆள் இப்படிதான், நான் இப்படிதான், நண்பன் என்றால்  இப்படிதான்,.................  என்ற எந்தொரு வாதத்திற்கும் எதிரானது  பின்நவினத்துவம். அதாவது எதையும் மனிதர்களால் முழுமையாய் அறிந்து விட முடியாது, உண்மை எது  என்பதை முழுமையாய் வரையறை படுத்த முடியாத நிலையை ஏற்ப்பது. உண்மை எது பொய் எது என்று பிரிக்க முடியாத மனிதனின் இயலாமை என்பதை  முன்னிறுத்துவது பின்நவினத்துவம்.  

                   தனிமனித ஒழுக்கம் எனபது தனிமனிதனின் விருப்பம். இங்கு ஒழுக்கம் கட்டுப்பாடு எல்லாம் உண்டு ஆனால் அதை பற்றிய பிரசங்கமோ ஒரு கட்டுப்பாடை நிருவிக்கும் முயற்சியும் தேவையில்லை, கற்ப்பு தேவை ஆனால் கண்ணகி கற்புக்கரசி  என்ற கற்பிற்கு இலக்கணம் கற்பித்தல் தேவை இல்லை. கற்ப்பு, ஒழுக்கம் போன்றவைக்கு இலக்கணம் கற்பித்து அதை ஒரு நடைமுறை படுத்தும் போது எங்கோ சூழ்நிலை நிமித்தமாய் தவறிப்போன மனிதனின் வாழ்வுமுறை கேளிவிகுறி ஆக்கபடுகிறது, அதனால்தான் பின்நவினத்துவம் இந்த ஒழுக்கம் சார்ந்த எந்தோ ஒரு முறைகளையும் எதிர்கிறது. Existence Of A Human Is Important than Institutional codes and standards. நமது ஒழுக்கம் கொண்டு படைக்கும் எந்த ஒரு படைப்பும் ஒழுக்கம் சார்ந்து வாழ முடியாதவர்களின் வாழ்வை தகர்க்க முயற்சிக்கிறது, அது சரி அல்ல என்கிறது பின்நவினத்துவம்.              


                   ஒரு தனிமனிதன் தனது அடையாளம் என்று தனது சாதி , சமையம், கட்சி, தத்துவம், குடும்பம், மொழி  என்று எந்த ஒரு நிறுவன அமைப்பையும் சாராது இருப்பது. இந்த அடையாளம் இன்றி  இருப்பதை கொண்டாடுவது பின்நவினத்துவம்.  அப்படியென்றால் மனிதனுக்கு அடையாளம் என்ன? ஒரு மனிதனின் அடையாளம் எனபது வரையறை படுத்த முடியாதது அது  சூழலுக்கு ஏற்ப அமைவது, மாறும், மாறிக்கொண்டிருக்கும், இந்த அடையாளங்களை ஒரு மனிதன் வாழும் சுழலும் அவனது அனுபவமும் வடிவம் கொடுக்கிறது. அனுபவம் மாற, வடிவமும் மாறும், வடிவம் மாற மனிதனின் அடையாளம் மாறும். தனிமனிதனை கொண்டாடுவது அவனது விருப்பும் வெறுப்பை ஆதரிப்பது அதை அவன் எந்த ஒரு தடையும் இன்றி யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அனுபவிப்பது. இதன் ஒரு ஆதிவாசியை ஆதிவாசியாக வாழ விடும் அவன் விரும்பும்வரை. ஒவ்வரு மனிதனும் தனது தனித்துவத்தை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு செல்கிறது, அவன் தனது சமுகத்தின், சாதியின், மொழியின், குடும்பத்தின் அடையாளம் தாண்டி நிற்க தூண்டுது. 

                    பின்நவினத்துவ பார்வையில் நமது உலகம் ஒரு உடைபட்ட  குழப்பமான, தொடர்பற்ற, நிலையற்ற உலகம். அதாவது இந்த வுலகம் என்றும் ஒரு பெர்பெக்ட் உலகமாய் இருந்ததில்லை இருக்க போவதும் இல்லை. நவீனத்துவம் இந்த குழப்பத்திற்கு அர்த்தம் கற்பிக்க முயன்று  தோற்றது பின்நவினத்துவம் அந்த குழப்பத்தை கொண்டாடுகிறது. நவீனத்துவம் வேறுபாடுகள் இல்லை எல்லோரும் சமம் என்று வற்புறுத்துகிறது ஆனால் பின்நவினத்துவம்  வேறுபாடுகளை கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுகிறது, அந்த வேறுபாடுகளை குறித்த ஆய்வோ அல்லது வேறுபாடுகளை விளக்க முனைவதில் ஆர்வம் காட்டுவதில்லை. " I am What I am". I Exist because I want to, not because I Have to. 

                   பின்நவினத்துவம், அரசியல் முலமாக சமுதாய மாற்றம் அடையும் என்ற நம்பிக்கையயை சந்தேகமாய் பார்க்கிறது.எந்தவொரு அரசியல் சார்ந்த குழுவோ கட்சி தலைவனோ சமுக மாற்றம் கொண்டுவந்துவிடமுடியாது.  அது மார்க்சிசம் முறையை ஆதரிப்பதுபோல இருந்தாலும் அது அதனுள் இருக்கும் மைய அதிகார வடிவத்தை எதிர்கிறது, தனிமனித சுதந்திரத்தை போற்றுகிறது, மார்க்சிசம் கொண்டு அமைக்கபட்ட மைய அதிகார ஆட்சி முறையை முற்றிலும் நிராக்கிறது. இன்று பரவலாய் பேசப்படும் பாரம்பரிய மார்க்சிசத்தை அது ஏற்று  கொள்ளாமல் அதனை இன்னும் திவிரமானதாய் கொள்ளுவதில் முனைப்பாய் இருக்கிறது என சொல்ல்லலாம். பின்நவினத்துவ   அரசியல் சிந்தனை முற்போக்கானது, ஒரு தனி மனிதன் சார்ந்தோ அல்லது ஒரு கோட்பாடு சார்ந்த அரசியலுக்கு மற்றுதலாய் தற்கால சாத்தியகூறு உள்ள மாற்று கருத்துகளை கணக்கில் எடுத்து செயல்படும் அரசியலை முன்வைக்கிறது. அரசியல் அமைப்பு எந்தொரு இசம் அல்லது கோட்பாடு கொண்டதாக இருக்கவேண்டும் ஆனால் அது அந்த நாட்டிற்க்கு தேவையான நிகழ்கால மாற்று கருத்துக்களை  உள்வாங்கி கொண்டு செயல்படவேண்டும் என்பதுதான். பெரும்பான்மையான பின்நவினத்துவ சிந்தனையாளர்கள் மர்க்சிச்டாக இருந்திருகிறார்கள் ஆனால் மார்க்சிசம் கொண்டு நிறுவிய மைய அதிகார அரசியல் அமைப்பியலுக்கும், அதன் தாக்கத்தில் நிறுவப்பட அரசியல் அமைப்பிற்கும், அது தனி மனிதனின் வாழ்வியல் விருப்பு வெறுப்பின் மீது செலுத்திய ஆதிக்கத்தின் எதிவினையாய் எழுந்த சிந்தனையை பின்நவினத்துவம் என்றும் சொல்லலாம்.
 பின்நவினத்துவம் என்றால் ஏதோ யாரோ எழுதிய தத்துவம் அல்ல, மனிதனின் அனுபவ அறிவும் அதன் முலம் எழுந்த நிகழ்கால சிந்தனை வளர்ச்சி / முதிர்ச்சி பின்நவினத்துவம். 


  
      You Can Also Get More Idea From the following Links. 


4 comments:

  1. அருமையான பகிர்வு . சிலர் பின் நவீனத்துவம் என்பது கதையின் ஒரு வடிவம் என நினைக்கிறார்கள் . அது தவறு என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  2. நன்றி பிச்சக்காரன், பின்நவினத்துவம் ஒரு தத்துவவியல் அதை கொண்டு படைக்கும் இலக்கியம் பின்நவினத்துவ இல்லகியம் என்று சொல்லபடுகிறது. இது போல பின்நவினத்துவ ஓவியம், சினிமா, கவிதை, கட்டடம், என்று பல பல பரிணாமம் உள்ளன. பின்நவினத்துவம் பெண்ணியம் மீதும் வித்தியாசமான பார்வை பார்கிறது, கூடிய விரைவில் அதை பற்றி பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.கலைத்தல்தான் பின் நவீனத்துவத்தின் முக்கிய அம்சம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. எளிமையாக சிக்கலில்லாமல் பின் நவீனத்துவம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்...பின்நவீனத்துவம் பற்றி மிகப்பெரிய கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அது கடின வகை இலக்கியம் என்பது போன்று உருவகப்படுத்தி கொண்டு இருந்தேன்..

    ReplyDelete