Saturday, January 7, 2012

எக்ஸைல் - My Understanding

எக்ஸைல் -  My Understanding 
                         அஞசலி – உதயா காதல்: ஒரு இளமை கொண்ட்டாட்டம் இந்த காதல் கதை, இவ்வளவுintense அக, சிரத்தையொடு ஒரு காதலா. இருவரும் மிக கொண்ட்டாமாக கொண்டாடுகிறார்கள், இந்த காதல் கொண்டாடட்ம் காமம் சார்ந்து மட்டும் இருப்பது போல உள்ளது. ஒரு புராதன காதல் இது. A Love with Just Instinct. No Rational Thoughts Involved.  இந்த உலகில் இவர்களை தவிர எதுவும் இல்லை என்பது போல ஒரு காதல். இங்கு காதலிற்க்கும் காமதிற்க்கும் அதிக வேறுப்பாட்டை பார்க்க முடிவதில்லை, அதாவது தமிழ் பட காதல் போல இல்லை, A Love with so much Madness and Lust. மத்தியதர்க மதிப்புகளான குடும்பம், கணவன், போன்ற்றவைகள் இந்த காதல் முற்றிலும் நிராகரிக்கிறது, இந்த காதல் இந்த மதிப்புகளை கேலிக்கு உள்ளாக்கிறது. சிறு வயது முதல் பல கொடுமைகளை சந்திக்கிறாள் அஞ்சலி அதுவும் பாலியல் ரிதியான கொடுமைகள், அதுவும் அவளது விட்டிலே இப்படி நடப்பது கவலைக்குரிய செயல்தான், திருமணம் அவளது வாழ்வில் அவள் பார்ப்பதும் இன்னும் அதிகமான கொடுமைகள்தான், அன்பும் காமமும் இல்லா ஒரு மன வாழ்க்கை.  உதயாவிடம் கொண்ட காதலுக்கு பிறகு அவளிடம் எற்ப்படும் மாற்றம், அவளது வாழ்வில் வரும் கொண்ட்டாட்டம், மகிழ்ச்சி, சந்தோசம், புரிப்பு உதயா அவள் மிது கொண்டுள்ள காதலுக்கு சாட்சி. ஒரு Extra Maritial Affair வைத்திருக்கும் ஒரு பெண்ணிடம் கானும் ஒரு Gulit feeling கூட மதியதர்க மதிப்பிடுகள்தானோ? இது எனக்கு ஸாக்கிங் ஆக இருக்கிறது, எற்றுக்கொள்ள முடியாததுமாய் இருக்கிறது. அதே சமயம் நாம் கட்டமைத்த  எந்த ஒரு வடிவவும் அஞசலிக்கு ஒரு நிறைவும் பாதுகாப்பும் அன்பும் தரவில்லைதானே.
·          உலகின் ஆதார்மான ஆண் – பெண் உறவு, அந்த உறவின் ஆணி வேரான காதலுக்கும் / காமத்திர்க்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன? எனும் கேள்வியை முன்வைக்கிறது இந்த நாவல்..
·          ஆண் பெண் உறவு,  நாம் கட்டமைத்த குடும்பம், கணவன், மனைவி போன்ற கட்டமைக்கபட்ட வடிவங்களால் ஆனது இல்லை, அது கட்டுடைக்கமுடியாத புராதன உனர்வுகளாளும் இயல்புணர்ச்சி (Instinct) கொண்டது என புரியவைக்கிறது இந்த நாவல்.
·          மொழிகளால் கட்டமைக்கப்பட்ட வடிவங்களின் ( கணவன், குடும்பம், நட்ப்பு, காதல்) முக்கியத்துவத்தை அதை ஒரு கொன்ட்டாடமாக கொண்டாட அதை வைத்து அரசியல் செய்யாது போலி வர்ணம் பூசாமல் அந்த வடிவங்களை உடைத்து நமக்கு காட்டுகிறது இந்த நாவல்.
             
            
            தனது மனதில் இருப்பது, கதையில் வரும் மற்ற கதாப்பாத்திரம் மனதில் இருப்பது என எல்லா விசியங்களும் ஒரு கடவுள் போல எல்லாம் தெரிந்த மாதிரி ஒரு ஆசிரியர் வாசகருக்கு கதை சொல்லுவது ஒரு விதம். இந்த நாவலின் ஆசிரியர்  உதயா கதையின் முக்கியமான பாத்திரமான தனது கதையை  படர்க்கை நிலையில் இருந்து வாசகரோடு பேசுகிறார். இந்த முறை கதை சொல்லுவதில் பாத்திரங்களின் உனர்வுகளை எண்ணங்களை வாசகருக்கு சொல்லும் வேலை கதை ஆசிரியருக்கு இல்லை, அந்த பாத்திரங்களின் செயல் (Observable Act) மட்டும் சொல்லப்படும், அதாவது பாத்திரங்களின் தன்மையை புரியும் வேலையை வாசகரிடம் விட்டுவிடுகிறார்.  
          இந்த நாவலின் துவக்கத்தில் உதயா இந்த நாவலின் கதையின் அசிரியராய் இருந்து வாசகரோடு பேசுகிறார், பிறகு இந்த நாவலின் முடிவு வரை  உதயாவின் கதை நாவலில் படர்க்கை நிலையில் அவரின் கதையை சொல்வது போல அமைக்கப்பட்டுள்ளது, அஞ்சலி தன்னிலையில் பேசுகிறார், கொக்கரக்கோ கூட தன்னிலையில் பேசுகிறார்? இந்த நாவலை எழுதியது யாரு? குழப்பமாக இருக்கிறது.   நாவலின் 31அம் பக்கதில் இந்த நாவலின் ஆசிரியர் இறந்துவிடுகிறார். The Author Is Dead. கதையின் ஆசிரியரான உதயா 31அம் பக்கத்தில் இருந்து ஒரு பாத்திரம், இந்த உரு மாற்றம் நமக்கு தெரியாமல் நடக்கிறது.  (Author to Character transition). இந்த இடம் நாவலின் மிக முக்கியமான இடம்யென தெரிகிறது, இதன் பின் நான், என், எனது போன்ற வார்த்தைகளை உதயாவிடம் நாம் பார்க்க முடிவதில்லை.     

          கொக்கரக்கோ: எதையும் சந்தேகப்படு, எதையும் தீரவிசாரி, புத்தி கொண்டு செயல் படு, Logic, reasoning, analyzing, comparing, judging, என இருபதாம் நூற்றாண்டு கத்துக்கொடுத்த, நமது அறிவியல் வழி சிந்தனை போக்கு கொண்ட ஒரு practical man. The man of this era, The Man of Logic, The man Of Scientific thinking, the man who is against Psudo sentiments and Emotions. உதயாவின் நன்பன், அவனிடம் அஞ்சலியை பற்றி அவனது அறிவியல் சிந்தனை முலம் அறிவுறுத்துகிறான். உறவின் மிக முக்கியமான அம்சமான “நம்பிக்கை” மீது அறிவு கொண்டு சந்தேக பட வைக்கிறான். விலியதில் இருந்து சொல்வதனால் இவன் ஒரு வெள்ளாடு.
      இந்த கொக்கரக்கோ அதிகமான இடத்தில் என்னை போல ஒரு அறிவியல் சிந்தனை கொண்டவனாக நான் பார்க்கிறேன், இதில் கவணிக்க வேண்டியது, இந்த கொக்கரக்கோ ”உறவு” விசியம் தவிர மத்த விசியதில் ஒரு crazy and madness உள்ள ஆளாக தெரிகிறான்.   “Suspecting everything” is something the modern scientific thinking have programmed in us. This have led to suspect God, Parents, Kids, Relations etc… some of the side effects are “ We have Lost Our Innocence, Madness, Instinct…”. மேலும் கொக்கரக்கோவின் அட்டகாசங்கள் வாசகர்களை அஞசலியின் காதல் மிது சந்தேகபடவைக்கிறது. கொக்கரக்கொவின் அறிவியல் சிந்தனை அறிவுருத்தல், சுழ்ச்சி எதுவும் உதயா – அஞசலி காதலை முறியடிக்கமுடியவில்லை. இதற்க்கு உதயா – அஞசலி யின் காதல்தான் காரணம். சரி தவறு இவர்களிடம் இல்லை, இருப்பது எல்லாம் காதல், காமம், அண்பு (Which are Primitive, Pleasure seeking). உதயா பாத்திரத்திடம்  இருக்கும் Innocence. ஒரு 5 வயது குழந்தைக்கு அதன் தாய் மிது உள்ள பாசதில் இருக்கும் Innocence. ஒரு செம்மறி ஆட்டை போல.
·          பெண்மையை ரசிக்க வாழ்க்கையை கொண்டாட அதை அப்படி எத்துக்கொள்ள இந்த அறிவியல் சிந்தனைதான் காரணமோ? என எதார்த்த, அறிவியல், முற்போக்கு, சிந்தனைகளை, கேள்வி கேட்க்கிறது இந்த நாவல்.

No comments:

Post a Comment