Wednesday, February 15, 2012

யாமம் - வாசிப்பு அனுபவம்

யாமம்
               எஸ்ராவின் புதினம், 18அம் நூற்றாண்டு சென்னைதான் கதை களம், அந்த காலத்து சிறு சிறு விபரங்களை சேகரித்து நாவலின் முழுவதும் கதையோடு தந்துருக்கிறார் கதையாசிரியர், அந்த கடின உழைப்புக்கு ஒரு சிறப்பு நன்றிகள். பல தகவல்கள் கிடைக்கும் இந்த நாவலில்.
               கதைசொல்லும் விதம் மிக பாரம்பரிய முறை, அதாவது ஆசிரியர் நமக்கு கதை சொல்கிறார், அவருக்கு எல்லாம் தெரிந்துருக்கிறது, எல்லா இடங்களிலும் எல்லாரின் மனதின் ஒட்டமும் தெரிந்துருக்கிறது, சொல்வதை எளிதாய் சொல்வதால் மிக எளிதாய் புரிந்து கதையோடு செல்லமுடிகிறது. கதை மிக மெதுவாக சொல்லபட்டுருக்கிறது இருந்தும் Boring இல்லை. கதையின் சுவராசியம் ஆசிரியரின் எளிமையான நடயிலும், கொட்டிக்கிடக்கும் சென்ற நூற்றாண்டு விபரங்களிலும் இருக்கிறது. நேர்கோட்டில் பயனிக்கும் கதை, கதை சொல்லும் ஆசிரியருக்கும் கதைக்கும் எந்த சமபந்தமும் இல்லை, வாசகருக்கு புரியவைக்கும் வேலைமட்டும்தான் அவருக்கு. இந்த மாதிரி கதைசொல்லும் விதம் ஒரு எனக்கு அலுப்பை தருகிறது.
                          நாவலை வாசிக்க துவங்கியதும் அப்படி உள்ளே இழுத்து செல்லவில்லை எழுத்து, நம்மை வாசிக்க கட்டுப்படுத்தாது, பிரச்சணை இல்லாத எழுத்து இந்த நாவலின் எழுத்து. பெருமான்மையினரின் உல மதிப்பிடை தாண்டி செல்லவில்லை. எளிமையான எழுத்து அதுவே இந்த எழுத்தின் ஒரே ஒரு கவர்ச்சி. நாவலை வாசிக்கும் போது   நம்மை புரட்டிபோடாது, மனது வலிக்காது, எந்த ஒரு எஸ்ட்ரிம் ரியாக்ஸனும் நம்மிடம் எற்படுத்தாது, ஒரு வகையில் தயிர் சாதம், அதுவும் உறுகாய் இல்லாத தயிர் சாதத்தை சாப்பிடுவது போல. தயிர் சாதமும் சுவைதானே. அந்த வகயில் நான் இடுபடாமல் தினறாமல் வாசித்தேன்.
                                     கதையில் வரும் பாத்திரங்கள் எல்லாம் மிக நேர்மையாய் ஒழுக்கமாய் இருக்கிறது, அப்படி ஒழுக்கம் தவறிபோன பாத்திரங்களின் முடிவு பாதகமாக முடிவை அமைத்து, நல்லது வெல்லும், ஒழுக்க நெறியில் இருந்து விலகுபவர்கள் வாழ்வில் வாழ வழில்லை எனும் அறத்தை நிலை நிறுத்தியுள்ளார்.   சிரிக்க ஒரு சிறு இடம்கூட இல்லை. செக்சுவல் வரன்னை இல்லை, எல்லா கதாப்பாத்திரங்களின் கருத்தோடு நாம் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்புல்லை. எந்த பாத்திரத்திமும் மிதும் அதிக இடுபாடு வரவில்லை. தமிழ் கலாச்சாரத்தை கெடுக்காது பொறுப்போடு எழுதப்பட்டது. இதைல்லாம் தாண்டி பேசனும் ஒரு நாவல் என்கிறது எனது கருத்து.
                   இரவுதான் கரு, இரவை கவித்துவமாக பார்க்க முனைதல்தான் இந்த நாவல், இரவை சுகந்த நறுமனத்தோடு ஒன்ற்றினைத்து இரவை ரசிக்க வைக்கிறார் கதையின் ஆசிரியர். யாமம் என்ற அத்த்ரின் நறுமனம் ரகசியமாய் இருக்கும் அதன்  தாயரிப்பு முறையில் இருப்பதுபோல இரவின் நறுமனமும் அதோடு நாம் தைரியமாக பகிரும் வாழ்வின் ரகசியங்களும், புரிப்புகளும், துக்கங்களும்தான். இப்படி இரவின் கவித்துவத்தை சொல்கிறது யாமம். 


 இருள் ஒரு சுகந்தம் அது தரும் அரவனைப்பு அளக்க முடியாததாய் இருக்கிறது. இரவில் நடக்கும் குற்றங்களுக்கும் அதுதரும் அந்த பாதுகாப்பு என்கிற சுகந்தம்தானோ? இரவின் கொடுமையயும் மனிதர்களின் கோர முகங்களும், இரவின் கொண்டாட்டமும், இரவின் குற்றங்கள் என பிற விசியத்தையும் கவித்துவமாக பதிவு செய்ய்திருக்கலாம்.
     நான் ரசித்த  வாக்கியங்களில் சில:

  • ·          ‘புலன்களை நம்பி பயனில்லை. நாம் புலன்களுக்கு வெளியில் நடமாட தெரிந்தால் மட்டிமே உலகை புரிந்துகொள்ள் முடியும்”
  • ·          இரவின் நீளமும் ஆழமும் எவ்வளவு பெரியது காசிம்? மனதிலிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு ஆழத்தில் கிடக்கிறதோ அவ்வளவு ஆழமுடையதும், சொல்லப்பட்டுவிட்ட வார்த்தைகள் ஒன்று சேர்த்தால் எவ்வளவு நீளமிருக்குமோ அத்தனை நீளமுமானது
  • ·         இரவு என்பது அள்ளி எடுக்க முடியாத ஒரு திரவம் அது எல்லா திசைகளிலும் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது.
  • ·          ”இரவைத் தவிரத் தன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள யார் இருக்கிறார்கள் என்ற நெருக்கத்தோடு தன் கைகளால் இருளை தனக்குள் சேர்த்துக்கொண்டான். யாவரின் சுக துக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியய் போல முடிவற்று எல்லா பக்கங்களிலும் ஒடிக்கொண்டேயிருந்தது. அதன் சுகந்தம் எப்போதும் போல உலமெங்கும் நிரம்பியிருந்தது”
  • ·         மீர்காசிமும் பகிரின் உரையாடல் மேலும் எலிசப்பத்தின் கதை.
 
ஒரு படைப்பு வாசகனுக்கு சாவால் விடுவதாய் இருக்கனும், அவன் கொண்டுள்ள மதிப்பிடுகள் மீது மறுபருசிலனை செய்ய தூண்டுவதாய் இருக்கனும் அப்படி இருந்தால் எனக்கு பிடிக்கிறது. அந்த வகையை செர்ந்தது இல்லை யாமம், இருந்தாலும் இரவை பற்றிய ஞானம் புகட்டியது யாமம். இரவை பற்றி எல்லாம் சொல்லவில்லை என்னும் குறை இருக்கிறது. இரவின் எல்லா முகத்தயும் சொல்லிவிடமுடியுமா இலக்கியத்தில், அப்படி சொல்லிவிட்டால் இரவு சுகந்தமாய் இருக்குமா எனும் கேள்வியோடு முடிக்கிறேன்.          

2 comments:

  1. இந்த இரவில் யாமம் உங்களுக்கு கை கூடியுள்ளது..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மதுரை சரவணன் மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்த்துகளுக்கு. உங்களின் கருத்தையும் பதிவு செய்யுங்கள். Your comments are valuable and encouraging.

    Thank You

    ReplyDelete