Monday, February 13, 2012

பெண்கள் மகிழ்ச்சியாக இல்லை – ஒரு அதிர்ச்சி கருத்துக்கணிப்பு முடிவு:

பெண்கள் மகிழ்ச்சியாக இல்லை – ஒரு அதிர்ச்சி கருத்துக்கணிப்பு முடிவு:

கடந்த 25 ஆண்டுகளில் ஆண்களை காட்டிலும் பெண்கள் மிக குறைவாக மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம், இது ஒரு கருத்துக்கணிப்பு முடிவு. ஆச்சரியமாக இருக்குதுல!!!!! ஆண்களுக்கு நிகராய் அனைத்து துறைகளிலும் சரிக்கு சமமாக இயங்கி கொண்டுருக்கும் பெண்கள், வரலாற்றில் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவவும் இருக்கிற   நேரத்தில் இப்படி ஒரு கருத்துக்கனிப்பு முடிவு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. வீடு, அலுவலகம், விண்வெளி, கனிதம், விளையாட்டு, அரசியல், அதிகாரம் என பெண்கள் தொடாத இடம் இல்லை. இருந்தும் இப்படி ஒரு கருத்துக்கணிப்பு முடிவு.

   முதலில் மகிழ்ச்சி என்பது Subjective அதாவது தனிமனிதரின் விறுப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டது என்றாலும்  இப்படி ஒட்டுமொத்த பெண்களும் மகிழ்ச்சி இல்லாது இருப்பது பற்றி எனது கருத்தை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். அலுவலக வேலைப்பளுவா, குடுப்பத்தினரிடம் அதிகமான குவாலிட்டி நேரத்தை செலவளிக்க  முடியாததா, ஆன்களா, திருமணமா, இருக்கலாம் தெரியல,

       பெண்களின் உலகம் பல புதிரான சிக்கலான முடிச்சுகளை உடையது போலத்தான் தோனுது,   நேத்திக்கு பிடித்து வாங்கிய பொருள் இன்றும் வாங்கி கொடுத்தால் மகிழ்ச்சி இல்லை, கேட்க்காமல் வாங்கி கொடுத்தால் சில சமயம் மகிழ்ச்சி சில சமயம் இல்லை, சில சமயம் உடை, சில சமயம் உறவு, சில சமயம் தனிமை. சில சமயம் சண்டை என விரிந்து பரந்து கொண்டு போய்கொண்டுருக்கிறது பெண்களின் மகிழ்ச்சிக்கூறுகள், அதுவும் முடிவில்லாமல், எல்லைற்று யாருக்கும் புரிந்தும்  புரியாமல், இருக்கிறது. , சில சமயம் மூட் அவுட்டாகி இருப்பது கூட பெண்களுக்கு மகிழ்ச்சியை தரும் போல. அதாவது ஆணின் மகிழ்ச்சி ஒரு கட்டுக்குள்ளும் துவங்கி முடிந்து விடுகிறது போல அல்ல பெண்ணின் மகிழ்ச்சி.
     பகுத்து ஆய்ந்து லாஜிக்கில் அகப்படாததுமாய் இருக்கிறது பெண்களின் உலகு. இந்த லாஜிக் உலகில் எப்படி பெண்கள் மகிழ்ச்சியாய் இருக்கமுடியும், அதை புரியமுடியும். அது ஒரு மேஜிக் போல மாயவித்தைகளை காட்டிக்கொண்டு இருக்கிறது நாம் கற்ற விஞ்சான அறிவுடன் அதை ரசிக்கமுடியுமா என இன்றய அறிவாற்றலுக்கு சாவல் விடுகிறது. கண்டிப்பாக அதை ரசிக்க தெரிந்தவனும் அதை புரியதெரிந்தவனும் இப்படி பகுத்துபார்த்து அதை ஒரு கட்டுரை வடிவல் வடிக்க தெரியாதவனாய் இருந்திருப்பான்.
          லாஜிக் இல்லா ஒரு விசியத்தை எந்த அளவுக்கு நம்மால் ரசிக்க முடிகிறது, அப்படி ரசிக்கமுடிகிறது என்றாலும் அந்த லாஜிக் தாண்டி கவிதுவம் நிறைந்த பெண்களின் உலகில் வாழ நமது படிப்பும் சிந்தனையும்  நம்மை வளர்க்கும் பெற்றோர் ஆசிரியர் என யாரும் கத்துகொடுக்க முடியவில்லை, அப்படி வாழ்ந்தால் வாழ்வில் தோற்றுவிடுவோம் என்கிற தீற்மான நிதர்சனமான் உன்மை   நிகழ்காலத்தில் இருக்கும் போது எப்படி கற்றுகொடுப்பர்கள்.

          Yes/No, 0/1, On/Off, Good/Bad, Man/Woman, என binaryகளாய் பார்த்தும், பகுத்தும் லாஜிக் கொண்டு வாழும் தற்க்கால உலகில் பெண்கள் மகிழ்ச்சி
இல்லாது இருப்பது ஒன்னும் ஆச்சரியமாக இல்லை என சொல்லிவிடலாமோ?

No comments:

Post a Comment