Thursday, February 9, 2012

அரிக்கேன் விளக்கு


அரிக்கேன் விளக்கு:  
           தெருவில் அரிக்கேன் விளக்கு இருந்தால் அன்னிக்கி வழக்கு இருக்குனு எல்லாத்துக்கும் தெரிச்சிரும், வழக்குனா எதோ கொல வழக்குனு நினைக்ககூடாது, அது கோழி களவு, என்னை கையபிடிச்சி இழுத்தான், ஒரு சான், ஒரு முழம் நிலத்தகராரு, மோள் சந்து பிரச்சனைசாக்கட பிரச்சனை,தேங்காய் களவு, மாங்கா களவு, ஆட்டு களவு, வைக்க படப்புல தீ, பீ துணி, இப்படி எதாவது இருக்கும்.  அந்தோணியார் கோவில் குத்து விளக்குக்கு எண்ணெய், வேத கொவிலுக்கு எண்ணெய் அம்மன் கொவிலுக்கு எண்ணெய் என தீர்ப்பு சொலுவாங்க தப்பு பன்னுனவனுக்கு, எவனாவது இளிச்சவாயன் கெடச்சா கட்டி வச்சி உரிப்பாங்க, பெரும்பாலும் வெளி ஊரில் இருந்து பொழக்க வந்தவன், காசு இல்லாதவன், சொந்தக்கார்ங்க அதிகம் இல்லதவங்க தான் அந்த இளிச்சவாய்கள். அது ஒரு நல்ல டைம் பாஸாய் இருக்கும் பாக்க. எதோ  வழியில் அங்கு பிரச்சனைகள் தீர்க்கப்படும், மனிதர்களும் அதற்க்கு கட்டுப்பட்டு இருதார்கள்தான் என நினைக்கிறேன். இந்த மாதிரி வழக்குள் வாதாடும் நபரின் சாம்ர்தியமும், அவரின் ஆள், பண பலமும் பெரும்பாலும் வெற்றியை திர்மானிக்கும்,
                      இந்த முறை எங்கள் ஊரில் இப்போது இல்லை, அதாவது ஊருக்கு போதுவான வழக்கு தீர்க்கும் இடம் இப்போது இல்லை, அம்மன் கோவில்காரர்கள், அந்தோணியார் வேதக்காரங்க, வேதக்காரங்க அவுங்க அவுங்க  கோவிலில்  திர்த்துக்கொள்கிறார்கள், பலர் பொலிஸ் ஸ்டேசன், நீதி மன்ற்றம் போய் தீர்த்துக்றாங்க.
          இதுவரை எங்க ஊரின் சரித்திரத்தில் நடக்காத ஒரு விசியம் நடந்தது ஒரு நாள். வழக்கு இருப்பதை தெரியபடுத்த தெருவில் வைத்த அரிக்கேன் விளக்கை கானவில்லை, எவனோ ஆட்டய போட்டுடான். அன்னிக்கு விளக்கு கானாமல் போனது போல இந்த முறை வழக்கு விசாரிப்பதும் காணாமல் போச்சி. 


http://en.wikipedia.org/wiki/Sign_(semiotics)#Postmodern_theory

http://homepage.newschool.edu/~quigleyt/vcs/postmodernism.pdf


No comments:

Post a Comment