நம் திருமணங்கள் பல சடங்குகள் முறைகளை கொண்டதாக இருக்கிறது, இந்த சடங்குகள் மரபு சார்ந்ததாய் இருப்பதை பார்கலாம். இந்த மரபு மீது அதிகபடியான பற்றுதலும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் கட்டாயம் இருப்பததாய் சொல்லிகொள்கிறோம்.
நான் சமீபதில் சென்ற திருமணம் ஒன்ற்றில் ஒரு சடங்கு முறை நடந்து கொண்டு இருந்தது, அதில் கலந்துகொள்ள வேண்டிய அந்த உறவுக்காரர் இல்லை அதற்க்கு பதில் வேறோருவர் இருந்தார், எனக்கு தெரிந்து அந்த உறவுக்காரர் உயிரோடுதான் இருக்கிறார். என்ன என விசாரித்ததில் உறவுக்காரர் சண்டையாம் அதனால் திருமணத்திற்க்கு அழைக்கவில்லையாம்.
இது போல பல உதாரணங்கள் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
மரபு வழி சடங்குமுறைகளை நடத்த நாம் படும் சிரத்தை அந்த உறவுகளை கெட்டிகாக்க காட்டுவதில்லை. இப்படி மிக சமத்தாய் இந்த கட்டுரையை முடிக்காமல், இன்னும் ஒரு இரு வரிகளை எழுத தோனுது.
உறவுகளை துறந்து மரபுகளை மறக்காமல் சடங்குகளை கடைபிடிக்கும் சமுகமாய்தான் இன்று நாம் இருக்கிறோம், இப்படி மறபுகளுக்கும் உறவுகளுக்கும் உள்ள தொடர்பு மெல்ல மெல்ல அகன்றுவருகிறது என விரக்தியாய் தோனினாலும், இந்த மரபுகளயும் உறவுகளையும் சேர்த்து நாம் கொண்டுபோக முடியாத இயலாமைதான் காரனம் என தொனுகிறது. அதாவது வாழும் வாழ்விற்க்கு எற்ப்ப மாற்ற வேண்டிய கட்டாயாம் இருப்பதை நாம் எப்படிதான் மறுத்தாலும் அதுதான் உன்மை என படுகிறது.
ஒரு வேளை உறவுகளுக்கு எதிரானதாய் இருக்கிறதோ எனது சிந்தனை என உங்களுக்கு பட்டால், சாரி, அதுவல்ல என் நோக்கம், உறவுகள் மிக முக்கியம், ஆனால் நடக்கும் நிகழ்காலம், உறவுகளை வெறுக்கவும் அதை அரவனைத்து கொண்டு செல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பும், இன்றைய வாழ்வியல் முறை நமது உறவுகளிடம் எற்ப்படுத்திய விரிசலும் மிக வேதனையான விசியம் என்றாலும், அதை நம்மால் நாம் வாழ்வதற்க்கு எற்ப்ப மாற்ற முடிகிறது, உறவுகளை துறந்து வாழ முடிகிறது என ஒரு புரிதலை எனக்குள் தோனுகிறது என்பதை மறைக்க முடியவில்லை. We unconsciously believe that Existence is important but we never accept it even with ourselves.
இதில் உல்ல ஒரு Paradox என்னா உறவுகளை மிக சாதாரனாமாக தூக்கி எறியும் நபர்கள், அதை சேர்த்து கொண்டு செல்ல சிரத்தை காட்டாதவர்கள், மறபின் மிதும் சடங்குள் மிதும் காட்டும் அதித பிடிப்பும், கடமை உனர்சியும் என்னை வியக்க வைக்கிறது.
No comments:
Post a Comment