Thursday, January 26, 2012

நான் - இந்தியன் - தமிழன் - முறன்

 நான் - இந்தியன் - தமிழன் - முறன்:
                                      ஆழமாக யோசித்து பார்த்தால், நான் இத்தியனும் அல்ல தமிழனும் அல்ல அதையும்  தாண்டி நான் மனிதன், இப்படி சொன்னா உன்மையில் மொக்கையாய் இருக்குல்ல. நாம் நம்மை பற்றி என்னவாக இருக்க முயன்றாலும் நம்மை மத்தவர்க்ள் எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக ஆகிவிட்டது.  என்னை ஒரு அரபி இந்தியானாய் பார்கிறான், மளயாளி தமிழனாய் பார்க்கிறான். எங்கள் ஊரில் என்னை ஒரு சாதியாய் பார்கிறார்கள், மனைவி, தாய், குழ்ந்தைகள் இவர்கள் எல்லோரும் என்னை வேறு வேறு விதம்மாய் பார்க்கிறார்கள். இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த நாளில், இதை பத்தி எழுத தோனுது, நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்பதில் உள்ள அர்தம் என்ன?, அந்த வார்த்தைக்கு நான் என்ன அர்தம் கொடுக்கிறேன் என சிந்திக்க தோனுது.  இல்லை இந்த வார்த்தையில் அர்த்தம் எதுவும் இல்லையோ, வெறும் வெற்று கூச்சல்தானோ எனவும் தோனுது. பாகிஸ்தான் வங்கதேசத்தோடு இருந்த இந்தியாவாக இருந்தாலும் “ நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என கண்டிப்பா சொல்லிருப்பேன், ஒரு பாகிஸ்தானியும் சொல்லிருப்பான் இல்லியா, ஒரு வங்காளியும் சொல்லிருப்பான். ஆக நாம் வாழும் இந்த நாடின் சிறப்பு எத்தகையாய் இருந்தாலும் நாம் சொல்லிருப்போம், சொல்லுவோம். இதில் நான் கொடுக்கும் அர்தம் என்ன? ஒரு நல்ல இந்தியனாய் வாழுவதும், அந்த பன்முக கலாச்சாரத்தை, பல வித மொழி பேசும் இந்தியாவை விறும்பி நேசித்து வாழ்வதன் மூலம் அதற்க்கு அர்த்தம் கொடுக்கிறேனா? இல்லை இன்று  நான் என் சட்டையில் மாட்டியிருக்கும் இந்திய கொடி மூலம் அர்த்த படுத்துகிறேனா?   தேச அன்பை ஒரு கொடி வைத்து அர்த்த்படுத்துவதில் என்ன தவறு? வாழ்வின் கொண்ட்டாட்ங்களை திபாவளி அன்று தீபம் ஏத்தி கொண்டாடவில்லையா. இருந்தும் முல்லை பெரியாறு காவிரி தண்ணிர் என தமிழகம் தனித்தும் ஒதுக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் எனக்கு என்ன இதில் பெருமை, இந்தியனாய்.  ஒரு வேளை தமிழத்தின் ஆற்று ப்ரிச்சனைக்காக் நான் பெருமைபடவில்லை என்ற்றால் எனது பெயர் என்ன? தேச துரோகியா? இல்லை இதை மறுத்து  நான் பெருமைப்பட்டால் தமிழ் இன துரோகியா. புரியல.

                                             இந்தியாவை அதன் பன்முக வாழ்வியலுக்காக் நேசித்து, ஆற்று பிர்ச்சனைக்காக் வெறுத்து வாழ முடியுமா. என்னை இன்னும் இப்படி என்னை வெறுக்க வைப்பதால் என் தேசத்தின் மீது நான் கொண்ட காதலும் பெருமையும் கேள்விகுறியாகிவிடுமா?
                                       நேசம் என்பது ஒத்துபோவது மட்டும்தானா. மறுத்தால் துரோகி, ஒன்னும் சொல்லாமல் இருந்தால் தேசியவாதியா.
                                       இந்தியா என்னும் ஒரு சிந்தனைக்கு அடிபனியாமல் அதை   நேசிக்கவும் அதன் பெயரில் பெருமைபடவும் முடியுமா.

                             <இப்படி முறனாய் சிந்திக்க தோனுது. இந்தியா என்றாலே முறன்தானோ.>
     
      இதை பொறுமையாய் நிங்கள் வாசித்துவிட்டால் முறனை ரசிக்கும் நீங்களும் நானும் இந்தியரகளே, நாம் முறன்களை கொண்ட்டாடுவோம். இந்தியனாய் பெருமை கொள்வோம். 

No comments:

Post a Comment