Friday, January 13, 2012

நாவல் வாசிக்க சில டிப்ஸ் 1: கதாப்பாத்திரங்களை அறிவது எப்படி:



  
      கதாப்பாத்திரங்களை அறிவதும் ரசிப்பது எப்படி:
                    புத்தகத்தை கண்டிப்பா நமது விருப்படி வாசிக்கலாம். ஆனாலும் ஒரு புத்தக விமர்சகர் புத்தகத்தை  வாசிப்பதற்க்கும், என்னை போல ஒரு சராசரி வாசகன் வாசிப்பதற்க்கும் வித்தியாசம் இருக்கதான் செய்கிறது, இப்படி ஒரு தேர்ந்த விமர்சகர் மாதிரி ஒரு புத்தகத்தை, வாசிப்பது. ஒரு புத்தகத்தை வாசித்த பிறகு  அதை பற்றி சிறந்த முறையில் நண்பரகளோடு கலந்துரையாடுவது.  ஒரு நாவல் ஆசிரியரின் எழுத்தில் உள்ள nuance, touch, spirit பற்றி தெரிந்துகொள்ளவது, எப்படி?
  ஒரு சராசரி வாசகனால் இவை சாத்தியமா?  அனுபவம் மூலம் மட்டும்தான சாத்தியமா?
இந்த லிங்கில் http://www.litlovers.com/run-a-book-club/read-think-talk கானும் குறிப்புகள் கண்டிப்பா உதவியாக இருக்கும்.
இந்த குறிப்புகளில் இருந்து உங்களுக்காக,  தமிழில்
அடுத்தமுறை நாவல் வாசிக்கும் போது இந்த குறிப்புகள் அருகில் வைத்து வாசித்துபாருங்கள்.
                              
முதலில் நாவலில் உள்ள கதாப்பாத்திரங்களை அறிவதும் ரசிப்பது எப்படி:
·          கதாப்பாத்திரங்களின் நம்பகத்தன்மை என்ன? அவை வாசிக்கும் உங்களுக்குள் துடிப்பும் , உணர்வும் எழுப்புகிறதா?
·          கதையின் பாத்திரங்களின் குணஙகள் எப்படி: அனுதாப்பத்துக்குறியதா, ரசிக்ககூடியதா, புத்திசாலியா, சிந்திக்கவைக்கிறதா, அப்பாவியா , , களங்கமில்லாததா, புதியதாக இருக்கிறதா, பலவினமாக இருக்கிறதா, அல்லது வேறு மாதிரி இருக்கிறதா…
·          எந்த பாத்திரங்களில் உங்களை நீங்கள் பார்க்க முடிகிறது.
·          படைக்கபட்ட பாத்திரங்களின் சிந்தனைகள் / உனர்வுகள் என்ன, அவைகளை உங்களால் உனர முடிகிறதா? எப்படி உனர முடிகிறது? கதையில் சொல்ல படுகிறதா அல்லது அவைகளின் உரையாடல் / செயல் மூலம் உனர முடிகிறதா?
·         கதையில் கதாப்பாத்திரங்களின் வளரச்சி என்ன. அதாவது காதாப்பாத்திரங்கள் சிந்தனை செயலில் மாற்றம் இருக்குதா.

No comments:

Post a Comment