Tuesday, April 10, 2012

காவல் கோட்டம் - வாசிப்பு அனுபவம்

காவல் கோட்டம் - வாசிப்பு அனுபவம்
      
                1500 பக்க நாவலை நான் மிகுந்த ஈடுபாடோடுதான் வாசித்தேன், வாசிக்கும் போது அதை பற்றிய நினைவாகவும் அதை பற்றீய சிந்தனையாகவும்தான் இருந்தேன், என்னைப்போல துவக்க நிலை வாசகனுக்கு வாசிக்க சிரமம் கொடுக்காத எளிய நடை , நாவல் முழுதும் நிறைந்துள்ள அரிய விபரங்கள், மதுரையைய் பற்றியும் கள்ளர்களை பற்றிய வரலாற்று சான்றுகள், மதுரை நகரையும் தாதணுர் கிராமத்தை பற்றிய விவரிப்பு, அங்காங்கே சிதறி கிடக்கும் தத்துவங்கள், வரலாற்று சான்றுகளை சம்பவங்களாய், இலக்கியமாய் சொன்ன விதம், மிக நூட்பமாக் வர்னிக்கப்பட்ட களவுகள், கள்ளர்களின் வாழ்வும் முறை பற்றிய விபரங்கள் இந்த நாவலை வாசிக்கும் சுவாரசியத்தை கொடுக்கிறது. 


             இந்த நாவலில் எனக்கு உடன்பாடு இல்லாத கருத்துக்கள் என ஒன்றும் இல்லை, இது ஒரு Status quo எழுத்து இதில் எந்த விதி மிறலும் இல்லை. மேலும் ஒரு நாவலை இப்படி எழுதிருக்கலாம் அப்படி எழுதிருக்கலாம் என்கிற தீர்ப்பிடும் அளவிற்க்கு நான் தகுதில்லாதவன். ஒரு இலக்கியத்தை வாசித்துவிட்டு சரி/தவறு என தீர்ப்பிடாமல் அதன் வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்வதுதான் சிறந்ததாக துவக்கநிலை வாசகனான எனக்கு படுகிறது

              தாதனூரை சார்ந்த எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள், ஒருவன் கூட இருக்கும் நிலையை பற்றி எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை, உண்மையில் அப்படிதான் எல்லோரும் இருந்துருப்பர்களா கண்டிப்பா இருக்க வாய்ப்பில்லை, மேலும் ஒரு சமுதாயா பார்வையாகவே இந்த நாவல் பார்க்கிறது நம்மளையும் அப்படிதான் பார்க்கசொல்லுதுஇந்த சமுதாய பார்வையாக இருப்பதால் தனிமனித விருப்பு வெறுப்பு எல்லாம் அவன் வாழும் சமுக்கத்தின் விருப்பு வெறுப்பாக இருக்கிறது போல சொல்லப்படுவது ஒருவித Utopian Societyக்கான கணவு போல இருக்கிறது.

           இன்றை விடவும் நேற்று நன்றாக இருந்தது எனும் ஒரு பொதுவான கருத்து நாம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. என்னை பொருத்தவரை  எழுதப்பட்ட சரித்திரத்தை எல்லாவற்றையும் சந்தேகமாக பார்க்கிறேன், அதற்க்குகான மாற்று சரித்திரம் சொன்னாலும் அதுவும் ஒரு வடிவம்தான், இதுதான் உன்மையா என்றால் தெரியவில்லை என்பதுதான் எனது முடிவு. இப்படி சந்தேகமாக பார்க்கும் போது சரித்திரம் தகவலை வைத்துகொண்டு பெருமையோ / சிறுமையோ அடையாது இன்றைய நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என நம்புகிறேன். காவல் கோட்டத்தில் இருக்கும் கறார் நடை ( நக்கல், கிண்டல் இல்லாத) வாசிக்கும் வாசகர்களை இதை ஒரு புதினமாக பார்காது , உண்மையான சரித்திரம் எனும் தோற்றத்தை அளித்துவிடும் போல தெரிகிறது. இது ஒரு புதினம் என வாசகர்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டுருக்கனும்

      கடைசியில் களவுகள் எல்லாம் கதையாய் மாறுகிறது, களத்தில் வீழ்ந்தவர்கள் பட்ட சாமியாக்கபடுகிறார்கள், காவல் முறை இன்று வெறும் கதைதான். ஆனாலும் மனிதர்கள் தொடர்கிறார்கள் கதையோடு இன்றுவரைஇலக்கியத்தில் நான் பார்ப்பது மனிதர்களை, வெவேறு மனிதர்களின் மனங்களும் முகங்களும்இந்த விதத்தில் நமக்கு வெவ்வேறு மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது காவல் கோட்டம்., ராஜாக்கள்,கள்ளர்கள், வேட்டைக்கார்கள், காவல்கார்கள், அரசியல்வாதிகள், ஆதிக்க சாதிகள், நர பலி செய்து கொள்ளும் பெண், எதிரியின் குரவளையை கடித்து கொல்லும் பெண், கொலை செய்யும் பெண், தாசியாக இருந்தும் தாது பஞசத்தில் சோறு போட்ட பெண், மாயாண்டி, சிண்ணான், டேவிட் சாம்ராஜ், களவுக்காரனை மரியாதை செய்யும் மிராசு, ஊருக்காக திருடும் கள்ளர்கள், ஆணின் பவுசை அடித்து நோறுக்கும் தாதனூர் பெண்கள் என நீண்டு கொண்டு செல்கிறது காவல் கோட்டம் அறிமுகப்படுத்தும் மனிதர்களின் வரிசை.

     மேலும் இந்த நாவலை வாசிக்கும் முன்பு கள்ளர்களை பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது, அவர்களின் தற்க்கால அரசியல் ஆதிக்கம் எனக்கு தெரியாது அதனாலே என்னால் அதிகம் ரசித்து வாசிக்க முடிந்தது. என்னை பொறுத்தவரை சரித்திரம் என்பதே ஆதிக்க சமுதாயம் தனக்கு தானே எழுதிக்கொள்ளும் ஒரு புதினம்தான் எனவே சரித்திரத்தை வைத்து எப்படி அரசியல் பண்ணுவது சரில்லையோ அது போலதான் புதினத்தை அரசியல் பார்வையில் பார்ப்பதும். உண்மையிலே இந்த நாவல் ஒரு அரசியல் பிண்ணனியில் எழுதப்பட்டாதா என்றால் அப்படி எனக்கு தோனவில்லை, மிகவும் கவனமாக யாரும் அரசியல் பன்னிவிடக்கூடாது என மிகுந்த அக்கறையோடு எழுதியாக எனக்கு படுகிறது.


     இந்த நாவலை வாசிக்கும்போது நானும் தாதணுர்காரனாய் மாறியது நிசம். நானும் களவுக்கு போனேன், காவல் காத்தேன், கொம்பூ ஊதினேன், கஞ்சி குடித்தேன். அந்த உண்ர்வை எனக்கு தந்ததுஅடுத்த முறை இந்தியாவிற்க்கு வரும் போது இந்த மனிதர்கள் வாழ்ந்த ஊரை, மண்னை பார்க்க ஆசை, சடச்சி பொட்டல், கருப்பன் கோவில், அரச மரம், ஆமனமலை, இதுவெல்லாம் உண்மையான இடங்களா என தெரியவில்லை, அப்படி உண்மையான இடம் இப்போது இருப்பின் புகைப்படத்தோடு எனது காவல் கோட்டத்தின் நினைவுகளை கண்டிப்பாக பதிவு செய்வேன்.

       கண்களுக்கு தெரிந்த மதுரை கல் கோட்டத்துக்குள் எத்தனையோ உணர்வுகள், கல் கல்லாகதான் இருக்கிறது அதற்க்குள் நம்பிக்கையை உணர்வை புதைத்துவைக்கிறான், தாதனூரின் இறுப்பின் ஆதாரமான அவர்களது காவல் கோட்டத்துக்குள் எத்தனை   நம்பிக்கைகள்! எத்தனை உணர்வுகள்! எத்தனை போராட்டங்கள். கல்லுக்கும் மனிதனுக்கும் ஒரே முடிவு! சிலருக்கு அது வளர்ச்சியின் துவக்கம், சிலருக்கு அது முடிவு. முடிவோ, துவக்கமோ தொடருது மனிதர்களின் கதை கதையாய்.   

    நாவலின் அனைகமான கதைகளை மனைவிக்கு சொல்லியாச்சி, நாவலை வாசிக்க எங்கள் அம்மாவிற்க்கு ஆசையை உருவாக்கியாச்சி. இதுக்கு மேல என்ன வேனும்.

 களவும் காவலும் தாதனூரின் இரட்டை பிள்ளைகள், கஞ்சியை உறுதிப்படுத்த காவலும், காவலை உறுதிப்படுத்த களவும் என்று விதி செய்துகொண்டார்கள்” 

    இதை பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.

3 comments:

  1. புத்தகம் வாசிப்பதோடு நில்லாமல் இத்போன்ற வாசிப்பு அனுபவத்தை பகிர்வது புதிதாக வாசிக்க உள்ளவர்களுக்கும் சரி, வாசித்த உங்களுக்கும் சரி ரீகால் செய்த மாதிரி இருக்கும். i like..

    ReplyDelete
  2. Thank you very much for the comment.

    ReplyDelete
  3. விமர்சனம் சார்பற்ற உண்மையான வார்த்தைகளாக தெரிவதால், நீண்ட நாளாக வாங்காமலிருந்த இந்த புத்தகத்தை வாங்கி படிக்கப் போகிறேன்.நன்றி.

    ReplyDelete