Sunday, May 6, 2012
எங்க ஊரு ருசி
எங்க ஊரு ருசி 1: எங்க வீட்டுக்கு அடுதாப்ல ஒரு நாராயண சாமி கோவில் இருக்கு. உலகத்திலே அசைவம் சாப்பிடும் நாராயண சாமி இங்கேதான் இருக்குன்னு நினைக்கேன். ராத்திரி பத்து மணிக்குதான் சமையல் ஆரம்பமாகும், காலையில மூனு மனிக்கு பந்தி, தேங்கா போடாமல் வெறும் சின்ன வெங்காயம், ஆட்டுக்கறி, சீற்கம், மல்லி வருத்த மசாலா போட்டு ஒரு புராதன குழம்பும், வாழக்காய், கத்தரிக்காய், குடல் போட்ட ஒரு அவியலும்தான் பிரசாதம். இது போக சாமிக்கு தனியா ஒரு ஸ்பெஸல் குழம்பும் உண்டு லக் இருந்தால் நமக்கு கிடைக்கும். காலையில மூனு மனியோ நாலு மனியோ கதவ தட்டி நமக்கு சாப்பாடு வந்துரும், பாசக்கார மக்கள். இந்த குழம்பின் சுவை வேறு எங்கும் கிடைக்காத ஒரு unique Taste. இங்கே படைக்கும் பலி ஆடோ, கோழியோ, காய்கறியோ எல்லா பாகத்தயும் பயண்படுத்த வேண்டும், ஒரு வேளை இதுதான் சுவைக்கு காரணமோ.
எங்க ஊரு ருசி 2:
நம்ம ஊர் கல்யாண வீட்டில் குண்டு குண்டா இருக்கும் இட்டிலி, பார்க்க அப்படி இப்படி இருந்தாலும் அதை உடச்சி போட்டு மணக்கும் சாம்மாரை தேங்கா சிரட்டை அகப்பையால ஊத்தி பிசஞ்சி அடிக்கும் மக்களோடு மக்களாய் சாப்பிட்டு பல காலம் ஆச்சி சாமியோ!!!!!!! இதுக்கு சைடுல தேங்கா சட்னி, கேசரி is Must.
எங்க ஊரு ருசி 3:
கருப்பட்டி காப்பிக்குள் முறுக்கு ஒடிச்சிப்போட்டு உற வச்சி குடிச்சா சூப்பர்.
இட்டிலி கட்டியான சட்டினி ருசியான ரெத்த பொறியல் - அடடா என்ன சுவை
எங்க ஊரு ருசி 3:
சவ்வு கறி தெரியுமா : ஆடு / மாடு தோல் வியாபாரம் எங்களது, ஆட்டின் உடலிலிருந்த்து தோலை உரிக்கும்போது தோலுக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய சவ்வை நீக்க வேண்டும், அப்படி நீக்கப்பட்ட சவ்வு வைத்து எங்கள் குடும்பத்தில் கறியாகவோ, பொறித்தோ சாப்பிடுவோம். பலரின் தொப்பைக்கு இதுவும் ஒரு காரணம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment