Friday, May 11, 2012

The White Ribbon:


The White Ribbon:  


         நன்பர் வருன் சொல்லி பார்த்த படம், இது ஒரு அஸ்ட்ரிய / ஜெர்மன் மொழிப்படம். சிறு குழந்தைகளின் வளர்ப்புக்கும் அவர்களது செய்கைகளுக்கும்  ஒரு நாட்டில் நடக்க போகும் முக்கியமான நிகழ்வுக்கும் உள்ள தொடர்பு என்ன  என்கிறதை சொல்லாது சிந்திக்க வைக்கிறது.

       படத்தில் வரும் ஒரு ஆஸ்ட்ரிய கிரமத்தில் வரிசை வரிசையாக சில வன்முறை நிகழ்ச்சி நடக்கிறது, கடைசிவரை அது யாரால் செய்யப்படுகிறது என சொல்லப்படவில்லை, பார்வையாளர்கள் மனதிலும் ஒரு யூகத்தைதான் ஏறப்படுத்துகிறார்.
 
 இதில் வரும் கிராமத்து குடும்பங்கள்,   சம்பிரதாயப்படி மிகுந்த கட்டுப்பாட்டாடு வளர்க்கப் படும் குழந்தைகள், மத போதனைகளை ராணுவ கட்டுப்பாடோடு அனுசரிக்க வைக்கும் வளர்ப்பு முறை, சிறு தவறு / சேட்டைகளை கூட கடுமையாக தண்டிக்கும் முறை என சொல்லிக்கொண்டு போகிறது இந்த படம்.

  •  வகுப்பறையில் சத்தம் போட்டு விளையாடும் சிறுமியை கடுமையாக தண்டிக்கும் பாஸ்டர்,
  •  குழந்தைகள் சாப்பிட காலதாமதமாக வந்ததால் அதற்க்கு தண்டனையாய் குடும்பம் முழுதும் சாப்பிடக்கூடாது என்கிற தணடனை.
  • மகனின் கையை கட்டிப்போட்டு தூங்க வைக்கும் பெற்றோர்,
  • தந்தையின் கைகளில் முத்தம் கொடுக்கும் பிள்ளைகள்.
  • பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இருக்கும் ஒரு abnormal Formal Relationship. 
  • Repression of Emotions. No Cry, No Laugh, No Hugh, No Kiss, No Sex, No informality, No kidding and No demonstration of Love and Joy, No Innocence and no celebration of Innocence.
  • Incest / Pedophile.  
  • Rejection Of Love.
  • Male Dominated Society.
  • Strict Discipline.
  • Feeling Of Pure in birth / Race.


    வண்முறை சமுதாயாமாகி விட்ட நமது தமிழ் சமுதாய சூழலில் இந்த படம் எனக்கு ஒரு புதிய Enlightmentஐ தருவதாக இருக்கிறது.
     இந்த படம் முதலாம் உலக போர் துவங்கும் சில மாதங்களுக்கு முன்பு நடப்பதாக காட்டப்படுகிறது, இந்த படம் துவக்கத்தில் வரும்  ஒரு வரிதான் க்ளு. ” இந்த கிராமத்தில் நடந்த விசித்திரமான நிகழ்வுகள் அவர்கள் நாட்டில் சில காலம் கழித்து நடந்த நிகழ்வுக்கான (இரு உலக போர்கள்) காரணத்தை அறிய உதவும் என்பதுதான்”.
     பாசிசம் என்ற அரசியல் முறை பலமான காலாச்சார பிண்ணனி கொண்டது, மதங்கள், சாதிகள், மொழிகள், கொள்கைகள், கோட்ப்பாடுகள் எனற பெயரில் மக்கள் விரோத செய்கைகளால் உருவாக்கப்பட்டு காலாச்சாரம் என்கிற பெயரிலும் / Counter Culture என்கிற பெயரிலும் மதங்கள் சொல்லும் பாவம் புண்ணியம், உடல்/மண கட்டுப்பாடு என்கிற பெயரிலும் மனித வாழ்வில் வன்முறை செலுத்தும் எந்த ஒரு செயலும் பாசிச அரசியல் முறைக்குதான் கொண்டு செல்லும்.      

   இந்த ஆஸ்ட்ரிய  கிராமத்து வன்முறை நிகழ்வுகள், குடும்பம் - மதம்குழந்தைகளை மிக அற்ப்புதமாக சொல்லி இவை எப்படி அந் நாட்டின் போருக்கு காரணம் என்பதை கண்டுப்பிடிப்பது பார்வையாளர்களின் பொறுப்பில் விட்டுவிடுவது சிறப்பு. பார்வையாளர்களுக்கு நீதி போதனை கூறி இம்சிக்காது, இதுதான் முடிவு என தீர்ப்பிடாமல் ஒரு சமுக பிரச்ச்னை பற்றிய சுய சிந்தனையை தொற்றுவிப்பதாக இருப்பது பாராட்டக் கூடியது.

  படம் முழுதும் பல குறியிடுகளும் இருக்கிறது, ஆஸ்ட்ரிய வாழ்வு, முதல் இரண்டாம் உலக போரின் பிண்ணனி தகவல் தெரிந்திருந்தால் இன்னும் ரசிக்கலாம். உதாரணம் தன்னை சூற்றி நடக்கும் விஸயங்களை கூர்மையாக பார்க்கும் சிறுவனாக கான்பிக்கபடுகிறான் ருடால்ஃப் ( ருடால்ஃப் - அடால்ஃப் பெயர் ஒற்றுமை). கிளியை கொன்று சிலுவை வடிவில் வைக்கிறாள் சிறுமி, White Ribbon - Symbol of Purity Like Hitlers Swastik, 

   சிறந்த படைப்பு அது சொல்லும் அல்லது சொல்ல நினைக்கும் கருத்துக்கு ஏற்ப்ப இருக்கும் அதன் சொல்லும் முறை. இந்த படம் ஒரு கருப்பு வெள்ளை படம், எந்த காட்சியிலும் ஒரு Life இல்லை ஒரு Emotions இல்லை, அதுதான் அவர் முற்ப்படுவது கூட. 

      வன்முறைகள் நாம் கொண்டுள்ள நம்பிக்கைகள் கலாச்சாரம் வாழ்வியல் முறைக்குள்தான் இருக்கிறது.

   The Movie Never ends, its keep going to infinity like a spiral. An important aspect of Postmodernism.It starts a dialogue within us.
    
   The most difficult part of life is to observe rather than to act. This movie challenges our observation on our actions with greater responsibilities.

                         “ Father is Piercing my Ear lobe"  - படம் பார்த்துவிட்டு இந்த டையலாக் உங்களை என்ன செய்தது என சொல்லுங்கள்.




Please Watch and comment Please. 

No comments:

Post a Comment