ஊரு ருசி:
எங்க வீட்டுக்கு அடுதாப்ல ஒரு
நாராயண சாமி
கோவில் இருக்கு. உலகத்திலே அசைவம்
சாப்பிடும் நாராயண
சாமி இங்கேதான் இருக்குன்னு நினைக்கேன். ராத்திரி பத்து
மணிக்குதான் சமையல்
ஆரம்பமாகும், காலையில மூனு மனிக்கு பந்தி, தேங்கா
போடாமல் வெறும்
சின்ன வெங்காயம், ஆட்டுக்கறி, சீற்கம், மல்லி வருத்த
மசாலா போட்டு
ஒரு புராதன
குழம்பும், வாழக்காய், கத்தரிக்காய், குடல்
போட்ட ஒரு
அவியலும்தான் பிரசாதம். இது போக...இது போக... சாமிக்கு தனியா ஒரு ஸ்பெஸல் குழம்பும் உண்டு லக் இருந்தால் நமக்கு கிடைக்கும். காலையில மூனு மனியோ நாலு மனியோ கதவ தட்டி நமக்கு சாப்பாடு வந்துரும், பாசக்கார மக்கள். இந்த குழம்பின் சுவை வேறு எங்கும் கிடைக்காத ஒரு unique Taste. இங்கே படைக்கும் பலி ஆடோ, கோழியோ, காய்கறியோ எல்லா பாகத்தயும் பயண்படுத்த வேண்டும், ஒரு வேளை இதுதான் சுவைக்கு காரணமோ.
பதநிரில் இரண்டு வகை உண்டு, காலை பதனி, மாலை
பதனி. காலை பதனி தெளிவா இனிப்பா இருக்கும், மாலை பதனி கலங்கலா சூண்ணாம்பு கலந்து சுவையோடு
இருக்கும் ( கள்ளிலும் இப்படி இருக்கா). பதனிக்குள் நீலம் மாம்பழத்தை சிறுசு சிறுசா வெட்டு போட்டு குடிச்சா
தேவ பிரசாதம் ( சரி அதுக்கு என்னாங்கிற). சிலருக்கு பதனிக்குள் நொங்கு போட்டு குடிக்க
பிடிக்கும் எனக்கு அவ்வளவு பிடிக்காது, நொங்கை
தனியா சாப்பிட்டாத்தான் சுவை அதிலும் அந்த துவர்ப்பா இருக்கிற வெள்ள கலர் மேல் தோடோடு
சாபிட்டால்தான் இன்பம். (துவர்ப்பிற்க்கும் தாதுபுஸ்டிக்கும் சம்பந்தம் இருக்காம் எக்ஸைலில்
உங்க தல சொல்லிருக்கிறார்).( அப்புறம் நொங்கில் வோட்கா இன்னும் ட்ரை பண்ணலயா?). மேக்காத்து
அடிக்க அடிக்க பதனி இனிப்பு கூடுமாம் ( ரொம்ப deepa எழுதுகிறாராம்!!!), பதனியை குருத்து
ஒலையில் செய்த பட்டையில் ஊத்தி கூடிச்சா ஒரு வகையான திருப்தி (திருடி குடிச்சா?), பதனி
கலசத்துக்குள் பல வித எறும்புகளும், தேனிக்களும் கிடக்கும் ரொமப சுத்தம் பார்க்றவங்க
குடிக்க முடியாது ( மேட்டுகுடிக்கு (பூர்ஸ்வாக்களுக்கு) ஆப்பு வைக்கிறாராம்), பண மரத்தில் இருந்து கிடைக்கும்
சல்லடை போன்று இருக்கும் கொழகாஞ்சியை வைத்துதான் இந்த தேனிக்களையும், எறும்புகளையும்
ஃப்ல்டர் பண்ணவாங்க ( the writer have in depth knowladgன்னு எழுதுவாங்க). மே மாசம்
லிவுக்கு எங்க பாட்டி ஊரில் சுவையான பதனி கிடைக்கும், அதிகாலையில் எழுப்பி பதனி குடிக்க
கொடுத்துவிட்டு தூக்கத்தை கண்டினியூ பண்ண செய்யும் எங்க ரெத்தின மணி ஆச்சியின் நியாபகம்
வருது (உங்க தொல்லகளை சிறுது நேரம் தள்ளி போட்டிருக்கு பாட்டி), பேரன் பதனியும் குடிக்கனும்
ஆனால் லிவில் நல்லா தூங்கனும், Somehow she is able to do both, that, it is
Magic. ( இடையில் இப்படிதான் ஆங்கிலத்தில் எழுதனும் அப்பதான் ஒரு Intellectual
Look கிடைக்கும்).
பதனி தந்த
மரமும் இல்லை ஆச்சியும் இல்லை, சுவையும் அன்பும் மட்டும் அடி நாக்கில் நியாமகமாய்
( ஒக்கமக்கா ஃப்லிங்லா வச்சி எழுதுறாண்டா).
சவ்வு கறி
தெரியுமா : ஆடு
/ மாடு தோல்
வியாபாரம் எங்களது,
ஆட்டின் உடலிலிருந்த்து
தோலை உரிக்கும்போது
தோலுக்கும் சதைக்கும்
இடையில் உள்ள
மெல்லிய சவ்வை
நீக்க வேண்டும்,
அப்படி நீக்கப்பட்ட
சவ்வு வைத்து
எங்கள் குடும்பத்தில்
கறியாகவோ, பொறித்தோ
சாப்பிடுவோம். பலரின்
தொப்பைக்கு இதுவும்
ஒரு காரணம்
No comments:
Post a Comment