Monday, June 11, 2012

கூந்தங்குளம் பயணம் – பறவைகளின் நன்பன் பால் பாண்டியன் சந்திப்பு 1


கூந்தங்குளம் பயணம் – பறவைகளின் நன்பன் பால் பாண்டியன் சந்திப்பு 1
                         
          முதல் தர பறைவைகளை இரண்டாம் தர புகைப்பட கருவியோடு ஒரு முன்றாம் தர புகைப்படங்களை  நாங்கள் எடுத்துகொண்டுருக்கும் போது, யாரு நீங்க எந்த ஊரு இதுவரை நா பார்ததில்லையேன்னு ஒரு ஆள் எங்களிடம் அறிமுக படுத்திக்கொண்டார்.  நாங்க திருவெல்வேலின்னு சொன்னோம், அப்படியா நீங்க காலேஜா, ரிசேர்ச்சான்னு பெரிய பெரிய வார்த்தய போட்டாரு, நாங்க வந்து ஒரு டுபாக்குர்ன்னு சொல்லாம Ameature WIld Photographersனு சொல்லிவச்ச்சேன், அதுக்கு அவரு ஒரு அஞ்சி பேர் பெயர சொல்லி தெரியுமான்னு கேட்டாரு ஹி ஹினு பேச்சை மாத்த ட்ரை பன்னி தோத்து, அப்புறம் அவரே நான்தான் பால் பாண்டியன் உங்களுக்கு ப்றைவைகளை பற்றீ என்ன சந்தேகம் இருக்கான்னு கேட்டாரு, எதையாவத பற்றீ தெரிச்சாதானே சந்தேகம் வரும், பறவைகளின் பாஸை தெரிஞ்ச பாண்டியன் எங்க மவுன பாசை தெரிந்து போல ஒரு ஒரு பறைவகளை பற்றியும், அவரும் அவரின் காலம் சென்ற மனைவிய பற்றியும் அவர்கள் பறவைகளுக்காக செயத செயல்களையும் பற்றி சொல்லிகொண்டுருந்தார். சுமார் 100 பறைவகளின் பெயரை என்களுக்கு சொல்லிகாட்டினார், நமக்கு தெரிஞ்ச ரெண்டே பேரு ஒன்னு கொக்கு இன்னொன்னு நாரை, நாங்களும் தலையாட்டி வச்சோம். 


   திருநெல்வேலி பக்கத்தில் கூந்தங்குளம்னு ஒரு ஊர் இருக்கு இது ஒரு பறைவைகள் சரனாலையம்உலகெங்கும் இருந்து பறவைகள் இங்கு வந்து கூடு கெட்டிமுட்டையிட்டு குஞ்சி பொறித்து அவகளோடு மீண்டும் அவர்கள் வந்த இடத்தீ நோக்கி செல்லும்தை மாதம் அம்மாவாசைக்கு வர ஆரம்பிக்கும் அவை ஆடி அம்மாவாசை யோடு சென்று விடுகின்றனகூந்தங்குளம் ஒரு மிகச் சிறிய ஊர், பறவைகள் பல காலமாக இங்கு வருவதாகவும் இந்த பறவைகள் ஊரில் தங்கும் மாதங்களில் இந்த ஊரில் மேளம், வேட்டு, ஓலிபெருக்கிகள் இந்த ஊர் மக்கள் பயன்படுத்துவதுதில்லையாம்.

               பால்பாண்டி அண்ண்ணுக்கு இந்த ஊர்தான், அவர் இங்கு வரும்  பறவைகளை பற்றியும் உலகம்மெங்கும் இருக்கும் பறவைகளை பற்றிய விபரங்களை தனது விரல் நூனியில் வைத்துள்ளார். இவரை பற்றி யாருக்காவது தெரியுமா? அதிர்ஸ்டவசமாக இந்த முறை கூந்தங்குளம் செல்லும் போது அவரை பார்த்து பேச வாய்ப்பு கிடைத்தது. அருமையான மனிதர். .

 தொடரும்..........

2 comments:

  1. நிர்மல், தரமான நகைச்சுவையோடு திறம்பட எழுதப்பட்ட 'கூத்தங்குளம் பயணம்' மிக அருமை!. இந்த கட்டுரைக்கு சிறப்பே நிர்மலின் கை தேர்ந்த எழுத்துக்கள்தான். Why dont you write for weeklys and magazines?
    Dominic

    ReplyDelete
  2. Thank you the comment, actuallaa நிறைய விக்லி மேகஸின்ல எழுத சொல்றாங்க more over I like blog, you know you get freedom and we got more control.

    Thank you very much for your comment and for your visit.

    ReplyDelete