Saturday, May 25, 2013

எனது சூப்பர் ஹிரோவின் சாகச கதை 2: லியோ வைரக்கண்ணு யார்?



இது லியோ வைரக்கண்ணு 20வது வயதில் நடந்த கதை இது

              சாமி நான் யார்? என்னை ஏன் இவ்வளவு நாட்களாக இந்த கோவிலில் சங்கிலியால் பினைத்து வைத்தனர்? நான் கிறுக்கனா? பேயால் பிடிக்கப்பட்டவனா? மன நிலை சரியில்லாதவனா? சொல்லுங்க சாமி என்றான்.
            நீ யார் என்பதை என்னால் சொல்ல முடியாது அது நீயாகவே கண்டுபிடிக்க வேண்டும்.  நீ யாராகவும் இருக்கலாம், ஆனால் அதை முடிவு செய்யப்போவது நீதான். ஆனால் உனக்குள் இருக்கும் அதீத சக்தி இப்போது உனது உடல் முழுவதும் பரவி கிடக்கின்றது. அதை உனது கட்டுக்குள் வைத்துக்கொள், அதை பிறர் நலம் காக்க பயன்படுத்து என அறிவுரை வழங்கி, ஆசிர்வதித்து கோவிலை விட்டு அனுப்பி வைத்தார் பூசாரி.

       கோவிலுக்கும் வெளியே காலை எடுத்து வைக்கும்போது, அவனை நோக்கி ஒடி வந்தான் ஒரு நறி குறவன்.
 
       I think this Ring belongs to you என அவனிடம் ஒரு மோதிரத்தை காண்பித்து அவனின் விரல்களில் மாட்டிவிட்டான், இவன் இல்லை எனது மோதிரம் இல்லை என எவ்வளவோ மறுத்தாலும் விடாப்பிடியாக விரல்களில் மாட்டி விட்டு மறைந்து போனான். எவ்வளவோ முயன்றும் அவனது விரல்களிலிருந்து அதை அவனால் கழட்ட முடியவில்லை, சரி இருக்கட்டுமென ஆற்றின் ஓரமாக நடந்து தாமிரபரணி கடலில் கடக்கும் புண்ணைக்காயலுக்கு வந்தடைத்தான். அங்கிருந்த ஒரு கடலோர குகைக்குள் தஞ்சம் புகுந்தான். இரவில் விரலிருந்த மோதிரம் சினுங்கியது, அதை பார்க்கும்போது அதிலிருந்து ஓளி விசி ஏதோ ஏதோ பாஷையில் படம் காட்டியது. எதுவும் புரியாதவனாய் அதை கவனிப்பான். 5 வருடம் அந்த குகைக்குள்ளே இருந்து கொண்டு அவனும் அந்த மோதிரம் சொல்லித்தரும் பாடங்களையும் ஞான வியாக்கியானங்களையும் கேட்டு வந்தான். தான் யார் என்பதை தினமும் அந்த மோதிரத்தோடு கேட்டு பார்த்தான், பதில் எதிவும் தரவில்லை மோதிரம், அதற்க்கு பதில் ஏதாவது பாடம் பதிலாக வரும். மோதிரம் சொன்ன அந்தனை பயிற்ச்சிகளையும் செய்தான் ( என்ன பயிற்சி என்பதை அடுத்த பதிவில் எழுதுவேன்) தனது சக்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான், எல்லா விஞ்ஞான தத்துவங்களையும் அறிந்தான். ஆனால் இதெல்லாம் எதற்க்கு? நான் யார்? என்பது மட்டும் அவனுக்கு தெரியாமலயே இருந்தது.

   கடந்த ஒரு வாரமாக மோதிரம் எதுவும் சொல்லவில்லை, தனிமை உணர்ந்த லியோ ஊருக்குள் சென்றான், வேலைக்கு வருகிறாயா என ஒருவன் கேட்க்க அவனும் சரியென தலையசைத்தான். கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் வேலை. தலையசைத்து அடுத்த நொடி மோதிரம் அதிர்ந்தது, சிறிது மறைவான இடத்தில் சென்று மோதிரத்தை பார்த்தான்.

 
 இடம்: சென்னை
 பிரச்சனை: ரெயில் கவிழ்க்க சதி. சென்னை செல்லவும்
   அவசரம்

   சுவற்றில் மோதிரம் கதைத்தது.
   ஒன்றும் புரியாது திகைத்து எப்படி சென்னைக்கு போவது, நான் என்ன பறந்தா போவேன் என்ற கணம், சுவற்றிலிருந்த கண்ணாடியில் கிழேக்கே உதிக்கும்  சூரியனின் ஓளி பட்டு எதிரொளித்து அவனது கண்களுக்குள் சென்றது. புதிய சக்தி கிடைத்தது போல உணர்ந்தான். வானில் பறக்க அரம்பித்தான், மிகவும் கடினமாக இருந்தது அவனது, அந்த முதல் வான் பயனம் , மேலும், கிழும், எல்லா திசைகளிலும் திக்கு திசை தெரியாது பறந்தான், பறந்து கொண்டிருந்த காக்கை கூட்டம் இங்கேயும் நீங்க வந்திட்டிங்களா உங்க தொல்லை தாங்க முடியலடா சாமின்னு சொல்லிகொண்டு சென்றன, இவனுகளுக்கு இதே வேலையா போச்சி,ஆ ஊன்னா கெளம்பிருவானுவ என்றது ஒரு இளம் பெண் காகம், எந்த பட சூட்டிங் - புது நடிகரா என கேட்டது ஒரு குட்டி காகம், அனுமாரா என்று வினைவியது ஒரு கிழட்டு காகம், ஏதுக்குப்பா இந்த பொழைப்பு உங்களுக்கு என்றது முக்கு உடைந்து போன ஒரு காகம். எல்லா காகமும் கெக்கே கெக்கே புக்கே புக்கே என சிரிந்தது ஆனாலும் அவனுக்கு கா கா கா என்று மட்டுமே கேட்டது.   மரம், பறவைகள் மலைகள் மீதும் மோதினான். நேரம் செல்ல செல்ல பறக்கும் வித்தையை புரிந்து கொண்டான். இடது மற்றும் வலது கைகளை அசைப்பது மூலம் அவனது பறக்கும் பாதையை கட்டுக்குள் கொண்டுவந்தான். கால்களின் அசைப்பின் மூலம் வேகத்தை கட்டுக்குள் கொண்டுவந்தான். பறக்கும் வித்தை கை வசப்படுத்தினான்.


        சுகமாக பறந்து கொண்டிருந்த போது, கூட்ட கூட்டமாக வந்து கொண்டிருந்த வெளி நாட்டு பறவைகள், ஹாய் சூப்பர் ஹீரோ என அழைத்தது, அப்படின்னா என்னா எனறான், இது தெரியாதா, எங்கள் ஊரில் நிறைய சூப்பர் ஹிரோக்கள் இருக்கீறார்கள் அவர்கள் அதீத சக்தி கொண்டவர்கள், மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள் என்றது, ஓ அப்படினா நான் சூப்பர் ஹீரோவா, சரி அப்படியே இருந்தாலும் மக்களின்  பிரச்சனையை நான் ஏன் தீர்த்து வைக்க வேண்டும், அவர்களால் முடியாதோ என்றான். இந்த அளவுக்கு சிந்திக்கும் திறம் இல்லையென்றது அந்த வெளிநாட்டு பறவைகள். ஒவ்வரு பறவைகளும் அவர்களுக்கு பிடித்தமான சூப்பர் ஹீரோவை பற்றிய கதை சொல்லி சிலிர்த்தன. தானும் ஒரு சூப்பர் ஹிரோ என சொல்லிகொண்டு பறவைகளுக்கு :Bye” சொல்லிவிட்டு பயனத்தை தொடர்ந்தான். நாற்றம் மூக்கை துளைக்க விறுக்கென இறங்கினான் – சென்னையில்.

       தொடரும்…….

No comments:

Post a Comment