Friday, May 24, 2013

எனது சூப்பர் ஹிரோவின் சாகச கதை 1 - லியோ வைரக்கண்ணு

 இந்த ஊரின் சூப்பர் ஹிரோக்களை அவரவர் வீட்டின் பூஜை அறைக்குள் சிறை வைத்திருப்பதால் உள் நாட்டு மக்கட்டி நடிகர்களை சூப்பர் ஹிரோக்களாக கற்பனை செய்து வருகிறார்கள், சிலர் மேல நாட்டு சூப்பர் ஹீரோக்களை நம்பி வருகின்றனர். இதை உடைக்கும் பொருட்டு எனது சூப்பர் ஹீரோ  லியோ வைரக்கண்ணு.

லியோ வைரக்கண்ணு  எனது சூப்பர் ஹிரோவின் சாகச கதை 1:
       லியோ வைரக்கண்ணு அப்போதுதான் சூரிய நமஸ்காரம் முடித்து, வீட்டுக்குள் வந்தான். எப்போதும் காலையில் சூரியன் உதிப்பதற்க்கு முன்பே குளித்து சூரிய நமஸ்காரம் செய்வது அவனது  அன்றாட வழக்கம்.  ஏதோ உடலுக்குள் சக்தி போவதை போல உணர்ந்து கொள்வான். சோலார் பேட்டரியில் சார்ஜ் ஏறுவது போல உடல் முழுதும் சக்தி பரவும், மூளை அபாரமாக சுறுசுறுப்போடு இருக்கும். சிறு வயதிலிருந்தே இப்படித்தான்.
        கடந்த சில ஆண்டுகளாக மனதை உருத்தி கொண்டிருக்கும் அந்த கேள்விக்கு இன்று பதில் கிடைக்குமா? யார் அது? அல்லது எது அது? என்று யோசித்து கொண்டிருக்கும் போது, லியோவின் மோதிரம் அதிர்வு கொடுத்து, மோதிரத்தை கண்களால் பார்த்து ஒரு முறை இமைத்து,மோதிரத்தை சுவற்றை நோக்கி காட்டினான் லியோ வைரகண்ணு.
         
இடம்: தூத்துக்குடி, மழலையர் பள்ளி
 பிரச்சனை: குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் ப்ரேக் கோளாறு                                                         
                              அவசரம்
 என சுவற்றில் ஓளி பிம்பம் கதை சொல்லியது. விரல்களால் சொடுக்கி மோதிரத்தை அணைத்தான் லியோ.
     மனதில் ஒடிக்கொண்டிருக்கும் அந்த கேள்விக்கு இன்று இது மூலம் விடை கிடைக்குமா என்ற நம்பிக்கையோடு  வீட்டிலிருந்த பைக்கில் ஏறி பறந்தான். இந்த ஊர் இன்னும் சூப்பர் ஹீரோக்களுக்கு ஏற்றது இல்லை என சொல்லிகொண்டே  தலைக்கு மேல் இருந்த கரண்ட் வயர்களை தவிர்த்து பறந்து சென்றான் லியோ வைரக்கண்ணு.
    ஸ்பாட்டில் நின்று பார்த்தான், வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த வாகனம்,டிரைவரின் கண்களில் மரண பயம் தெரிந்தது, பிள்ளைகளுக்கு எந்த விபரமும் தெரியாது. சந்தோமாக பாடிக்கொண்டும் ஆட்டம் போட்டுக்கொண்டும் இருந்தார்கள். அணிந்திருந்த கண்ணாடியின் எடுத்துவிட்டு வண்டியை பார்த்தான். காரின்  பிம்பங்கள் வெறுங்கண்களுக்கு வந்தடைந்த நேரத்தை குறித்துகொண்டான், பின்னர் கண்ணாடி வழியாக கண்களுக்கு வந்த பிம்பம் எடுத்து கொண்ட நேரத்தை குறித்துகொண்டான். இந்த இரு வித்தியாசத்தை வைத்து 100 கி.மீ வாகனத்தின் வேகத்தை கணக்கிட்டுக் கொண்டான்.
என்னதான் சூப்பர் ஹீரோவாக இருந்த போதிலும் இயற்பியல் விதிகளுக்கு உட்ப்பட்டே இருக்க வேண்டியுள்ளதை நினைத்து சலித்து கொண்டான்.
     F&S  execute என Go கமெண்டை சொல்லிக்கொண்டு அவன் கண்களால் காரை ஸ்கேன் செய்ய அரம்பித்தான், பின் கண்களை இரு முறை மூடி திறந்து கருப்பு தார் சாலையை பார்க்க, அவன் கண்களில் இருந்து, சற்று முன் ஸ்கேன் செய்த காரின் உள் கட்டமைப்பை ஒளி பிம்பமாக ரோட்டில் அவன் முன்பு கக்கியது அவனது கண்கள். கைகளால் காரின் ஒவ்வொரு பகுதியாகத் தொட்டு உள்ளே சென்று எதில் பிரச்னை எனப் பார்த்து வந்தான், பழுதாகி போன ப்ரேக் சிலிண்டரின் மீது சிவப்பு நிறத்தில் அலாரம் அடித்துக்கொண்டிருந்தது,– Hydraulic Oil level critical Low என.
       ப்ரேக் சிலிண்டரில் ஒட்டை. அதன் வழியாக ப்ரேக் ஆயில் ஒழுகி போய்க் கொண்டிருந்தது. பிரச்சனையை கண்டுபிடித்ததில் மகிழ்ந்தாலும், இதை எப்படி சரி செய்ய போகிறோம் என்பது நினைத்து யோசித்தான். மோதிரத்திலிருந்து வந்து கொண்டிருந்த காரின் வெர்ட்சுவல் பிம்பத்தின் மீது ப்ரேக் சிலிண்டரை சரி செய்ய ஆரம்பித்தான் லியோ வைரக்கண்ணு.
     கண்களில் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டினான்அதன் உட்புறத்தை சூரியனுக்கு நேராக வைத்துசூரிய ஓளியை சிலிண்டர் ஓட்டை மீது வைத்து சூடாக்கி ஒட்டினான்அது குளிர்வதற்க்கு கண்ணாடியின் வெளிப்பகுதி மூலம் சூரிய ஓளியை ஒட்டிய பகுதி மீது காண்பித்து ஒட்டையை அடைத்தான். அதற்குள் தண்ணீரை நிரப்பினான். வெர்ட்சுவல் வாகனம் சரி செய்தாகிவிட்டது, இப்போது இதை எப்படி நிஜ காரோடு பசை இனைத்தல் செய்ய?
    ப்ரேக் இன்றி ஓடும் வாகனத்தின் அடுத்த ஐந்தாவது நிமிட  நிலை என்னவாக இருக்கும் மற்றும் வாகனத்தில் இருக்கும் கோடிக்கனகான அனுக்களும், மனிதர்களின் உடலின் இருக்கும் ஒவ்வரு அனுக்களும், மற்றும் அதன் துகள்களும் எந்த நிலை அம்சத்தில் இருக்கும் என்பதை கணக்கிட்டு, அதை போலவே உள் அம்சம் கொண்ட வெர்ட்சுவல் வாகனத்தை  நிஜ வாகனம் ஐந்தாவது நிமிடத்தில் வரக்கூடிய சாத்தியம் உள்ள இடத்தில் வைத்துவிட்டான் லியோ வைரக்கண்ணு.
       இது மிக முக்கிய தருனம், காரில் இருக்கும் ஒவ்வரு அனுவுக்கும் ஏற்ற நிலையிலே வெர்ட்சிவல் வாகனத்தின் நிலை இருத்தல் அவசியம், இல்லையென்றால் அது வாகனத்தை வெடித்து சிதறி அடித்துவிடும். இந்த கடைசி ஐந்து நிமிடங்கள் யாரும் எதுவும் செய்ய முடியாது, இனி நடப்பது நல்லதாக இருக்கட்டுமென அவனது பையிலிருந்த கேரட்டை எடுத்து கடித்து சாப்பிட ஆரம்பித்தான்.  நல்ல வேளை வாகனம் நெருங்கி சரியான நிலை அம்சத்தோடு சேர்ந்தது,  பசை இனைத்தல் சரியாக வேலை செய்தது. இருந்தாலும் கூட, வாகனத்தை சூற்றி ஒரு பிரளயம் வந்தது போல காற்றும் ஓளியும் சுத்தியது, சத்தம் ஏது கேட்க்கவில்லை. டிரைவர் ப்ரேக் பிடிக்க,  க்ரிரிரிரிர்ச்ச்ச்ச்ச்ச் என வண்டி நின்றது, நான்கு சக்கரங்களிலிருந்தும் தண்ணிர் ஆவியாகி சென்று கொண்டிருந்தது.

 வைரக்கண்ணுவின் கண்கள் பளிச் பளிச் என ஓளி கொடுத்து, குழ்ந்தைகளிடமிருந்து பறந்து சென்றான். குழந்தைகள் போகும் வண்டியின்  ப்ரேக் சிலிண்டரில் ஓட்டை யார் போட்டது, இதை செய்தவனுக்கும் அவன் தேடிகொண்டிருக்கும்  நபருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என என்னியப்படி.  

 அப்போது அவனது மோதிரம் அதிர்ந்து “ Welcome” என சினுங்கியது. பெயர் முகவரி இல்லாத அந்த வெல்கமை நினைத்து, தான் சந்திக்க விரும்பும் நபர் கிடைத்துவிடுவான் எனற நம்பிக்கை ஓளி அவனது சூப்பர் கண்களுக்குள் தெரிந்தது.


1 comment:

  1. இயற்பியல் விதிகளுக்கு உட்பட்ட சாகச கதை என்ற கான்சப்ட் அருமை,,, ஆங்காங்கு மிளிரும் நகைச்சுவை கதைக்கு பெரிய பலம்.... மீண்டும் ஒரு முறை படித்து பார்த்து சில எளிய எழுத்து பிழைகளை திருத்துங்கள்... பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகள் அபப்டியே இருக்கலாம்...

    ReplyDelete