Thursday, May 23, 2013

பிரஹன்னளை: மிடில் க்ளாஸ்



பிரஹன்னளை: மிடில் க்ளாஸ்
           
"பிரஹன்னளை" - மகாபார கதையில் அர்ஜீனன் காட்டில் மறைந்து வாழும் போது சூட்டுக்கொண்ட பெயர். இதை எழுதியவர், கிருஸ்ணமூர்த்தி. இவர் எனக்கு பேஸ்புக்கில் பழக்கம், பல நாட்க்கள் அவரோடு உரையாடியிருக்கின்றேன். கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் இவர் எழுத்தாளராகும் அவரது பயணத்தின் முதல் பெரிய முயற்சி எனலாம். 
  இவரது http://www.kimupakkangal.com/ பக்கத்தில் அவரது குறுங்கதைகள், சிறு கதைகளை எழுதி வருகிறார். ஆதவன் , சாரு போன்ற அல்டர்னேட் ரைட்டிங்கை தைரியமாக கையாள முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நாவல் https://www.nhm.in/shop/100-00-0001-015-0.html தளத்தில் கிடைக்கின்றது.



           சரி இப்ப இந்த நாவலுக்கு வருவோம். இலக்கன பிழை, எழுத்து பிழைகள் இருக்குது, ஒருவேளை ப்ரூஃப் ரீடர் இல்லாம பதிப்புக்கு போயிருக்கும். அது முக்கிய குறைதான். அதை தவிர்த்து இந்த  நாவலில் என்ன இருக்கு என்பதை பார்ப்போம். சரி நாவல்னா எதாவது கருத்து சொல்லனுமா என்ன? அப்படியெல்லா தேவையில்லை என்கிற வாதத்தை ஏற்றுகொள்பவன் என்கிறதாலே பெரிய பிரச்சனை ஒன்றும் எனக்கு இல்லை.
             கிமுவின் எழுத்துக்கள் வாசிக்க எளிதா இருக்கு, ப்ரம்மம், ப்ரம்பஞ்சம், சித்தம், வெளி, காலம் அது இது என சொல்லி கதற கதற அடிச்சிருவாரோன்னு பயந்தேன், நல்ல வேளை அப்படியெல்லாம் அதிகம் இல்லை, அப்படி வரும் இடமெல்லாம் படிக்க கஸ்டமாதான் இருக்கு. ரொம்ப சுலபமா, தைரியத்த வரவழிச்சி எழுதியிருக்காரு. புதிய விசியமெல்லாம் இல்லை, நன்பனின் மரணம், காதல், பெற்றோர், அக்ரஹாரம், மாமிகள், அப்பா, அம்மா, நன்பர்கள் என சிம்பிளா இருக்கு.
          
                  எல்லோருக்கும் ஒரு  நன்பன் இறந்துபோயிருப்பான், அது வாழ் நாள் முழுவது மறக்கமுடியாததாக இருக்கும், அப்படிபட்ட சூழலில் எழுதியது நாவலின் முதல் பகுதி. அடுத்த பகுதி  கதையை சொல்லும்  பார்த்தசாரதியின் கதை.
        நாவலின் தலைப்பு முகமுடி / வேடம் எனும் கான்சப்டை சொல்லுவது போல இருந்தாலும் அதை கதைக்குள் சரியா சொல்லவில்லை என படுகிறது.
      சாதிய அடையாளத்தை அழிக்கவும் இந்த நாவலை எழுதியதாக சொல்கிறார், ஆனாலும் அதனுள் ஆழமாக பயணிக்கவில்லை நாவல்.
     மொழிக்கு உருவம் கொடுப்பதே இந்த ஆசிரியரின் முயற்சி என்று பார்த்தாலும் எந்த மாதிரியான உருவம் கொடுக்கப்பட்டது என்பது புலப்படாமல் இருக்கிறது.
    வாழ்க்கையை கொண்டாடமாக மாற்ற இன்னும் சாகஸம் வேண்டுமோ?
 சரி அது இல்ல, இது இல்ல, அப்படின்னா இது போலியா? அதுதான் இல்ல, ஒரு மத்தியதர வாழ்வியல் படைப்புக்கு சிறந்த உதாரணம். ப்ரஹன்னளை. இந்த விசியத்தை சொல்லியே ஆக வேண்டும், எனென்றால் அதுதான் எனக்கு முக்கியமா படுது. கிமுவின் எழுத்தின் திறனை வைத்து பார்த்தால், இன்னும் பெரிய பெரிய விசியங்களை சொல்லி, தான் இருக்கும் மத்தியதர வாழ்வியலில் இருந்து நிஜத்தில் செய்யாத விடைங்களை கற்பனையாக எழுதியிருக்கலாம், அல்லது அது தூக்கிபிடிக்கும் மதம், சாதி போன்றவற்றை பற்றி எழுதியிருக்கலாம் , அது கண்டிப்பா சாத்தியமான ஒன்றே இவருக்கு. இருந்தும் underplay செய்திருப்பது இந்த எழுத்துக்குள் நேர்மை இருக்கு எனப்படுது, ஆனால் என்ன, அந்த நேர்மை அவரது எழுத்துக்குள் ஏதோ தயக்கம் இருப்பது போலவும் காட்டிவிடுகிறது. அதாவது இன்னும் சொல்ல விரும்பும் விசியம் இருப்பது போல ஒரு மாயை, ஆனாலும் அதற்க்குள் செல்ல முடியாத சூழல். 

   இப்படி சொல்வது எளிதுதான், To do Trasngression is not easy என்பதை நாவலில் அவர் சொல்லவில்லையென்றாலும். Transgress பன்னுவது போல பாசாங்கு செய்யவில்லை என்பது எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. 
 பாசாங்கு செய்யவில்லை - Transgressம் செய்யவில்லை, Transgress செய்யவும் முயற்சியும் செய்யவில்லை, அதை கொண்டாவும் செய்யவில்லை, எதிர்க்கவும் செய்யவில்லை.-  அப்படின்னா,  இந்த நாவலின் எழுத்துக்களின் இடையில் இருப்பது “ தயக்கமா”. 

 பாராட்டுக்கள் கிமு.  நேர்மை தொடரட்டும்.
       தான் வாழும் சமுகத்தின் பிடியிலிருந்து வெளியே போக துடிக்கும் ஆனால் யார் மனதும் புண்படாது  வெளியே போக வழி தெரியாத பார்த்தியின் கதை.  பிருஹன்னளை.

4 comments:

  1. அருமையான விமர்சனப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. Thank you இராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  3. என் நாவலுக்கும் இதே மாதிரி பொத்தம்பொதுவா விமர்சனம் பண்ணுனா அம்புட்டுதான்....வந்து வெட்டுவேன். நடுவுல மானே தேனே எல்லாம் போடணும் பாஸ்.

    ReplyDelete
  4. பாலா ஏற்க்கனவே சொல்லிட்டேன் உங்க நாவலுக்கான விமர்சனம் ரெடி. அதையும் உங்க நாவலோடு சேர்த்து வெளியிடுங்கள். பின் நவினத்துவத்தின் முதல் முறையாக என சொல்லிக்கொள்ளலாம்.

    :)

    ReplyDelete