Friday, April 5, 2013

ஸலாம் அலேக்கும் வா ரகமத்துல்லாஹி வா பராக்காத்


ஸலாம் அலேக்கும் வா ரகமத்துல்லாஹி வா பராக்காத்:

             வேலை நிமித்தமாக சில கத்தாரி அரபிகளோடு டெலிபோனில் பேச வேண்டியது வரும், ஹலோ என்றது அது அரபியென தெரிந்துவிடும், பதட்டம் ஆரம்பித்துவிடும்   நான் உடனடியாக மேட்டருக்கு போய்விடுவேன் அதாவது எப்போ வரும், அப்டேட் கொடுங்க, எவ்வளவு தர முடியும் என, பெரும்ப்பாலும் அவனது பதில் தெரியாது, உனக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு, உனக்கு எப்ப தேவையோ அப்போ இப்படியான ரூட் பதில்களாக இருக்கும்.
      அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக அவர்களது பழக்க முறைகளை நேரில் பார்த்தபிறகு இந்த நலம் விசாரிப்பு கலாச்சாரம் பிடிப்பட்டது.  நம்மூரில் நமக்கு ஏற்கனவே பரிச்சையமானவரை நலம் விசாரிப்பு செய்வோம், ஆனால் இங்கு அப்படியெல்ல முதலில் நலம் விசாரிப்பு அப்புறம்தான் கடமை வேலை எல்லாம்.  லிப்ட்டில் நின்னுகிட்டுருப்போம், உள்ளே நுழையும் நபர் ஸலாம் அலேக்கும்ன்னு நுழைவார்.  காருக்குகாக காத்திருப்போம் நம்மை கடந்து போகிறவர் ஸலாம் அலேக்கும்ன்னு சொல்லிட்டு போவார், இதற்க்கும் நம்ம பதிலுக்கெல்லாம் காத்திருக்கமாட்டார்கள். இந்த வணக்கத்துக்கு பதில் வணக்கம் சொல்ல தெரியாதவன் அரபியர்களை பொறுத்தவரை கலாச்சாரம் அற்றவர்கள். 
    எந்த அரபியாக இருந்தாலும் சரி முதலில் ஸலாம் அலேக்கும், என சொல்லி கொஞ்சம் டைம் கொடுத்தால் நாம கேட்கிற கேள்விகளுக்கு அருமையா பதில் சொல்லுவார்கள் கேட்க்காத கேள்விக்கும் சேர்த்து சொல்லுவார்கள்.  அவ்வளவு பவர்ஃபுல் இந்த நல விசாரிப்புகள்.
    ஒரு அரபி இன்னோரு அரபியை பார்க்குபோது கிட்டத்தட்ட 1/2 நிமிடத்திற்க்கு மேலே நலம் விசாரிப்பார்கள், அப்புறம் கட்டிப்பிடித்து மூக்கோடு மூக்கு சேர்த்து முத்தம் செய்து கொள்வார்கள். பார்க்கவே அருமையா இருக்கும். இப்படி செய்றதுனால அப்படியே அன்பே உருவானவர்கள் என அர்த்தம் இல்லை, இது ஒரு பழக்க முறை.  ஒரு அரபியிடமிருந்து உதவி தேவையென வைத்துகொள்ளுங்கள் நீங்க  அந்த உதவியை எவ்வளவு பணிந்து கேட்டாலும் அவனை பொறுத்தவரை நீங்கள் திமிர் பிடித்தவர் என அர்த்தம். மூக்கோடு மூக்கு முத்த செய்யாவிட்டாலும் அந்த சில வார்த்தைகள் முதலில் சந்திப்பவரை பார்த்து சொல்லியே ஆகனும்.
         ஸலாம் அலேக்கும் வா ரகமத்துல்லாஹி வா பராக்காத் –இதை தெரிந்த நபரிடம் சொல்லும்போது அப்படியே சும்மா இழுத்து சொல்லி கெட்டிபிடிப்பார்கள், தெரியாத நபர் என்றால் முகம் பார்த்து சொல்லுவார்கள். இதை சுருக்கி ஸ்லாம் அலேக்கும்ன்னும் சொல்லலாம், இந்த வணக்கத்திற்க்கு பிறகு கட கடவென  நல விசாரிப்பு வார்த்தைகள் வந்து விழும். எப்படி இருக்க, நல்லா இருக்கியா, அம்மா எப்படி, அப்பா எப்படி, குடும்பம் எப்படி,  என வெவ்வேறு நல விசாரிப்புகள் உண்டு. அந்த வார்த்தைகள் என்ன என்பதை கேட்டுவிட்டு சீக்கிரம் எழுதுகிறேன்.

3 comments:

  1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

    ReplyDelete