Thursday, March 28, 2013

மஜ்லிஸ்: நட்பின் கூடாரம்


மஜ்லிஸ்:  நட்பின் கூடாரம்






      கத்தார் மற்றும் அரபு நாடுகளின் கலாச்சாரத்தில் ஒன்று இந்த மஜ்லிஸ். அரன்மனை மாதிரி பெரிய வீடு இருக்கும் ஆனால் அதற்க்கு முன் ஒரு சிறு கூடாரம் ஒன்றை கெட்டுவான் அரபி, இந்த கூடாரத்தின் பெயர்தான் மஜ்லிஸ். இங்குதான் அரபியர்கள் தங்கள் நன்பர்களோடு உரையாடுவதும் பொழுதை போக்குவதும், தொழில் முறை ஒப்பந்தங்கள் செய்வது, பஞ்சாயத்து கூட்டுவது, சம்பந்தம் பேசுவது எல்லாம்.  ஒவ்வருவரும் ஒரு மஜ்லிஸ் வைத்துகொள்வார்கள் இல்லை நன்பர்கள் கூட்டாக சேர்ந்து ஏதாவது இடத்தில் மஜ்லிஸ் அமைத்து கொள்வார்கள். பெண்கள் மஜ்லிஸும் உண்டு.
  இதில் டிவி கண்டிப்பாக இருக்கும், தரையில் உட்க்கார வசதியாக சமுக்காளம் தலையைனை இருக்கும், பேச்சினிடையில் சாப்பிட காவா எனப்படும் அரபி காப்பி பேரிச்சம்பழம் சிஸா எனப்படும் புகைக்கும் சாதனம் மற்றும் தின்பண்டங்கள் அவர்கள் வசதிக்கு ஏற்ப்ப அதை ஆடம்பரமாக வைத்து கொள்வார்கள். இதை மெயிண்டேன் பன்ன தனியாக ஆட்க்கள் இருப்பர்கள் இவர்களின் வேலை சாப்பிட ருசியா ஆக்கி போடனும் மஜ்லிசை கூட்டி பெருகி சுத்தம்மா வைத்து கொள்ளனும்.  

   இருபது வருடங்களுக்கு முன்பு ஏன் இப்போதும் நமது கிராமத்தை எடுத்துகொண்டால், மாலை நேரத்தில் ஆன்கள் அவர்களது நன்பர்களோடு சேர்ந்து ஊரின் ஒரு இடத்தில் கூடுவார்கள், அங்குதான் அன்றைய தினத்தில் நடந்த சம்பவங்கள், அனுபவங்கள், அரசியல்கள் என எல்லாம் பேசிக்கொள்வார்கள் , எங்க ஊரில் அதற்க்கு பெயர் சவுக்கை, சிலர் அவர்களுக்கென பிடித்த இடத்தை வைத்து கொள்வார்கள் சலூன், பெட்டி கடை, ஆற்று மனல், குட்டி சுவரு இப்படி பல பல, இந்த உரையாடல் முடித்த பிறகு இரவு வெகு நேரம் கழித்துதான் வீட்டிற்க்கு வருவார்கள் பிறகு சாப்பாடு தூக்கம், இப்போது ஃபேஸ்புக் போன்ற சோஸியல் நெட்வோர்க்குகளை ஆண்கள் தீவிரமாக நாடுவதிற்க்கு இப்படிப்பட்ட வரலாற்று உளவியல்  தேவை இருக்கலாம் (–யாராவது ஆராச்சி பன்னுங்க.). இந்த மஜ்லிஸீல் ஆன்கள் மட்டும்தான் பெரும்பாலும் எல்லா தினத்தன்றும் பாவிக்கிறார்கள். வியாழன் வெள்ளி கிழைமைகளில் இரவு முழுவது கூட அங்கே இருப்பார்கள், காப்பி, சாப்பாடு, பேச்சு, டிவி, சிஸா இப்படி இரவு முழுவதும் நன்பர்களோடு. என்னாதான் பேசுவாங்க அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
   
சரி இப்படி மஜ்லிஸ்ன்னு கெடந்தா வீடு, மனைவி, பிள்ளைகள் எல்லாம் எப்படி பார்த்துகொள்வது, அதுக்குன்னு சிறிய / உரிய நேரத்தை ஒதுக்கிகொள்கிறார்கள், வாரத்தில் ஒரு நாள் வெளியே கூட்டி போவது, படம் பார்ப்பது, ஸாப்பிங் அழைத்து செல்லுவது, பார்க், பிச்சுக்கு செலவது என, மற்றப்படி வேலை – மஜ்லிஸ் - நன்பர்கள் – வீடு.
   இந்த மஜ்லிஸ் கலாச்சாரம் நல்ல ஸ்ட்ரஸ் ரிலிவரா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லையென படுகிறது.

No comments:

Post a Comment