லூசிபர் கதையும் கடல்
படமும்
லூசிஃபர், கபிரியல் மற்றும் ரஃபேல் இவர்கள்தான் கடவுளின்
வான தூதர்கள், இவர்கள் கடவுளின் எல்லா படைப்புகளை பாதுகாத்து வந்தார்கள், இவர்களில்
லூசிஃபர் மிகவும் திறமையும் அறிவும் அழகும் மற்று எல்லா ஆற்றலும் கொண்டவராக இருக்கிறார்
(ள்). கடவுளின் அன்புக்கு பாத்திரமாக இருக்கும் லூசிபருக்கு அதனாலேயே பெருமையும் செறுக்கும்
வந்துவிடுகிறது, மேலும் கடவுளின் புதிய படைப்பான மனிதனின் மேல் கடவுள் காட்டும் கருனையும்
அன்பும் பொறாமையை கொண்டுவருகிறது, இப்படிபட்ட பலவினமான படைப்பாக மனிதனை படைத்ததில்
உடன்பாடு இல்லாமல் போகிறது லுசிபருக்கு. இப்படியாக பொறாமை, செறுக்கு,பெருமை குணங்களால்
கடவுளின் சாபத்துக்கு ஆளாகி தேவலோகத்திலிருந்து துரத்தபட்டு பூமிக்கு தள்ளப்படுகிறார்.
கடவுளின் பலவீனமான படைப்பன நம்பும் மனிதனிடம் தனது வேலையை காட்ட துவங்கிறது லூசிபர்.
நல்லது என ஒன்று மட்டும் இருந்த நிலை மாறி லூசிபரின் வருகையால் தீமை எனப்படுவது பூமிக்கு
வந்து சேர்கிறது. கடவுளின் படைப்பான ஆதாம்
மற்றும் ஏவாளிடம் பாம்பு வடிவில் தீமையை கொண்டுவருகிறார், கடவுளின் படைப்பு எவ்வளவு
சாதாரானமானது என நிறுவுகிறார். இதுவே ஒரு நெடிய கதையின் ஆரம்பம். கடவுள் vs லுசிபர்(
சாத்தான்) விளையாட்டு அதில் வெற்றி தோல்வி என செல்கிறது மனிதனின் கதை. கடவுளின் எல்லா
திட்டத்தையும் தோல்வியுற செய்கிறான் சாத்தான், மனிதனும் அதற்க்கு துனை போகிறான் அல்லது
பலவினமாக இருக்கிறான்.
மனிதனின் மரனம் பற்றிய பயத்தில் வைப்பது, பாவத்திலிருந்து
மீள வழி இல்லாமல் செயவது இதுவே சாத்தானின் செயலாக இருக்கிறது. மரணத்தை எப்படி மரணம்
கொண்டு வெல்வது, பாவத்திலிருந்து எப்படி விபோசனம் கொடுப்பது, அன்பின் கடவுள் மனிதனுக்கு
தந்தது அவரின் ஒரே மகன். பாவத்தின் சின்னமான சிலுவையை கொண்டு பாவத்தை வென்ற கதை எல்லோருக்கும்
தெரிந்ததுதான். மண்ணிப்பு எனும் கருவியை கொண்டு பாவ விமோசனம் பெறுவதை மனிதனுக்கு தனது
பாடுகளாலும் ரத்தத்தாலும் மரணத்திலிருந்து உயிர்தெழுதலாலும் சாத்தானை மீண்டும் வெல்கிறார்
இறைவன்.
கடல் படத்தில்:
லூசிபர் - அர்ஜீன்
மற்ற வான தூதர்கள், மதம், ஒழுக்கம், சேவை - அரவிந்த சாமி.
அன்பு, கருனை, மண்ணிப்பு, மாசற்ற தேவன் - துளசி நாயர்.
மனிதர்கள் - கவுதம் கார்த்திக்.
சரிதானே?
முழுமையான பார்வை..பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDelete