அப்பாற்ப்பட்டவர்கள்
வெற்றியின் ரகசியம்- Malcolm Gladwell -. Outliers: the story of success:
சாதாரண
மனிதர்களை விடவும் வாழ்வில் எல்லா வசதி வாய்ப்பை பெற்றவர்கள், அவர்கள் தேந்தடுத்த துறையில்
அசாத வெற்றி பெற்றவர்களை இப்படி அழைக்கிறார் Malcolm Gladwell -. Outliers: the
story of success என்னும் புத்தகத்தின் ஆசிரியர்.
outlier is an
observation that is numerically distant from the rest of the data. இதுதான் உண்மையான விளக்கம் அந்த பதத்தை வாழ்வின்
வெற்றி பெற்ற மனிதர்களுக்கு அளித்திருக்கிறார்.
அப்படி என்ன இந்த புத்தகத்தில் இருக்கு, இவர்
என்ன சொல்ல வருகிறார்னா, ஒரு மனிதன் வெற்றிக்கு திறன், கடின உழைப்பு, அயாராத உழைப்பு,
சிந்தனை திறன், செயல்படும் திறன், அதிர்ஸ்டம் போன்றவற்றை தாண்டியும் சில காரணிகள் இருக்கு,
அதை மேற்க்கு உலகம் பார்க்க தவறி விட்டது என்கிறார். உதாரணம் ஒருவர் மிலியனார் ஆவதர்க்கும்
அவர் பிறந்த வருடத்திற்க்கும் தொடர்பு இருக்கீறது, மிக சிறந்த ஐஸ் ஹாக்கி வீரனாக, கால்பந்தாட்ட
வீரனாக இருப்பதற்க்கும் அவர்கள் பிறந்த மாதத்திற்க்கும் தொடர்பு இருக்கு. சும்மா திறமை
அது இது என மட்டும் சொல்லி முடிச்சிற முடியாது என்கிறார்.
உதாரணம்
1:
உலக புகழ் பெற்ற ஐஸ் ஹாக்கி வீரர்கள் அதிகமான
வீரர்கள் ஜனவரி மாதத்திலும், அடுத்து பெஃப்ருவரியிலும் அடுத்து மார்ச்சிலும் பிறந்தவர்களாக
இருக்கிறார்கள். அது என்ன விஸேசம் இந்த மாதத்தில், ஜாதக பலன் கூடதலாக இருக்கிறதா, அப்படி
இல்லை, இதை தெரிய பள்ளி நாட்க்களிலிருந்து எப்படி ஒரு வீரன் உருவாகிறான் என்கிற சிஸ்டத்தை
புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். கனடாவில் விளையாட்டு வீரரின் வயது வரம்பு ஜனவரி
1லிருந்து கண்க்கிடப்படுகிறது, அதாவது ஜனவரி 1 1975 டு 31 டிசம்பர் 1975 வரை எப்போதும்
ஒரே தகுதி பிரிவில் விளையாடுவார்கள் – ஜீனியர் /சீனியர் அப்படி, இந்த முறை தகுதி பிரிவில்
எப்போதும் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களை
காட்டிலும் உடல் திறமை மற்றும் கற்றுகொள்ளும் திறம் அதிகமாக இருக்க கூடும் என்பதால்
இந்த ஜனவரி மாதத்தில் பிறந்த வீரர்களுக்கு
இன்னும் சிறந்த கிளப்புகளில் விளையாட வாய்ப்பும் அதன் மூலம் கிடைக்கும் பயிற்ச்சியும்
கள அனுபவங்களும் அதிகம்.
திறமையும் தகுதியும் தாண்டி பிறந்த மாதம் எப்படியாக
ஒருவரின் வெற்றியாளனாகவோ சாதாரனமானவனாக்வோ ஆக்குகிறது பாருங்கள். அப்படின்னா ஜனவரி
மாதத்தில் பிறந்த எல்லோரும் ஆகனுமேன்னு கேட்க்க கூடாது. இது ஒரு உதாரணம் –சொல்ல வரும்
கருத்து என்னவனில் ஒருவன் வெற்றி பெற்றுவிட்டால் ஓஹோ என தூக்கி வைத்து கொண்டாடுவது
அவனின் திறமையை மட்டும் வைத்து மதிப்பிடுவது சரியில்லை, ஒருவனின் வெற்றிக்கு பின்னால்
நமக்கு தெரியாத பல காரணிகள் உண்டு. இங்கு ஜனவரி மாதத்தில் பிறந்தவனுக்கு ஏற்ப்படும்
சந்தர்ப்பம் டிசம்பர் மாதத்தில் பிறந்தவனுக்கு கிடைப்பதில்லை, ஏனென்றால் டிசம்பர் மாதத்தில்
பிறந்தவன் எப்போதும் அவனை காட்டிலும் முதிற்ச்சி அடைந்த தகுதி பிரிவோடுதான் விளையாட
வேண்டியுள்ளது. இந்த தகுதி பிரிவுகளையும் முறைகளையும் நாம்தான் ஏற்ப்படுத்தியுள்ளோம்,
இந்த தகுதி பிரிவு வேறு மாதிரியாக இருப்பின் இன்னும் பல வீரர்கள் உலக அளவில புகழ் பெற்றூருப்பார்கள்.
எனவே அவர்களில் வெற்றிக்கு நான் உருவாக்கிய சிஸ்டமும் காரணம் என்கிறார்.
உதாரணம்
2:
- Bill Gates, Microsoft Founder : October
28, 1955
- Bill Joy : SUN Co-Founder November 8, 1954
- Scott McNealy : SUN Co-Founder November 13, 1954
- Steve Jobs : Founder Apple. February 24, 1955
- Eric Schmidt: Google & Novell CEO:
April 27 1955
- Paul Allen: Microsoft Founder: January
21, 1953
- Steve Balmer Microsoft Founder: March 24, 1956
- Vinod Khosla SUN Co-Founder January 28, 1955
- Andy Bechtolsheim SUN Co-Founder September 30, 1955
மேல காட்டப்பட்ட எல்லோரும் மிக புகழ் பெற்றவர்கள், அவர்கள் பிறந்த வருடம்
1955. சுக்கிரன் உச்சத்தில் இருந்த வருடமா? பார்ப்போம் இன்னும். இந்த வருட பலனை தெரிந்துகொள்ள
சிறிது கம்பூட்டர் வரலாறு தெரியனும், 1970 வரை கம்பூட்டர் என்பது மிக பெரிய மிஸினாகவும்
இருவர் மட்டும் அதனோடு வேலை செய்யமுடிய கூடியதாக இருந்ததாம், 1970ல் தான் நூற்று மேற்ப்பட்டோர்
ஒரே நேரத்தில் ப்ரோக்ராம் செய்து பார்க்க முடிகின்ற நிலை உருவாகியதாம். 1970க்க் முன்பு
இருந்த நிலையை வைத்து எந்த உலக தர ப்ரோக்ராமரும் உருவாகிடமுடியாது. இந்த 1955ல் லிறந்தவர்களுக்கு
மட்டும் இந்த வாய்ப்பு முதல் முதலில் சரியான தருனத்தில் வருகிறது, சரியான தருனம் என்றால்
பள்ளியில் இருக்கும்போது இல்லையெனின் கல்லுரியில் நுழையும் போது, அதாவது வாழ்வில் மிக
முக்கியமான தருனத்தில் கிடைக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை அருமையாக பயன்படுத்துகிறார்கள்,
அதுவே அவர்களின் புகழுக்கும் இந்த சந்தர்பத்தை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதிலும்
இருக்கிறது இந்த சந்தர்ப்பம் எப்படி உதவியது என சிறிது நேரம் கழித்து பார்ப்போம்.
ஒரு துறையில்
விதவம் பெற 10000 மனி நேர பயிற்ச்சி தேவையாம், அது எந்த துறையாகினாலும் சரி, சங்கிதம்,
இசை, தொழில் நூட்ப்பம், கலை, நடிப்பு, கம்பூட்டர் என எதுவாகினாலும். இந்த 10000 மனி
நேர பயிற்ச்சி தேவை என்பதை அறியாதவர்கள் எப்படி சிறப்பை அடைந்தார்கள் என பார்த்தால்
ஒவ்வரு புகழ் பெற்ற மனிதர்களின் அந்த நிலைக்கு வந்தடைந்த பாதையை கவனிக்க வேண்டும்,
வெறும் திறமை மட்டும் அல்ல என்கிறார் மால்கம். பீட்டில்ஸ் இசை குழுவினர் புகழ் பெறுவதற்க்கு
முன்பு பல மணி நேரம் க்ளப்புகளில் வாசித்திருந்திருக்கிரார்கள் அதுவும் நான் ஸ்டாப்
க்ளப் எனப்படும் க்ளப்புகளில் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பும் அதில் அவர்கள் எடுத்த
பயிற்ச்சியும் அவர்களது புகழுக்கு முக்கியமான காரணம்.
1970அம் ஆண்டில் நூற்று மேற்ப்பட்டோர் ஒரே நேரத்தில்
ப்ரோக்ராம் செய்து பார்க்க முடிகின்ற சந்தர்ப்பம் கிடைத்து பில் கேட்ஸும் மற்ற கம்யூட்டர்
மில்லியனர்களும் அதில் வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது அவர்களுக்கு இந்த 10000 மணி
நேர பயிற்ச்சியை மேற்கொள்ள முடிவதாலேயே அவர்களால் இன்றைக்கு புகழின் உச்சியில் இருக்கிறார்கள்.
இப்படி சொல்லவதால் அவர்களின் திறமையையும் கடின
உழைப்பையும் குறைத்து மதிப்பிட்டதாக ஆகாது. அதையும் தாண்டி சூழலும் சந்தர்பங்களும்
பயிற்ச்சியும் அவரகளது இன்றைய நிலைக்கு காரணங்களாக இருக்கிறது அதையும் நான் பார்க்க
தவற கூடாது என்கிறார் மால்கம்.
No comments:
Post a Comment