Wednesday, March 20, 2013

இந்திய ஒப்பந்த கூலி தொழிலாளர்கள் – வியக்க வைக்கும் மன உறுதி:


இந்திய ஒப்பந்த கூலி தொழிலாளர்கள் – வியக்க வைக்கும் மன உறுதி:  


                1833 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஸ் அரசு அடிமை முறைக்கு முற்று புள்ளி வைக்க சட்டம் கொண்டு வைத்தது, ஆங்கிலேய அரசும் இங்கிலாந்து கம்பேனிகளும் உலகமெங்கும் பருத்தி, தேயிலை, கரும்பு எஸ்டேட்டுகள் வைத்து தொழில் செய்து கொண்டிருந்த காலம் அது. இந்த எஸ்டேட்டுகளில் ஆப்பிரிக்க கருப்பின அடிமைகளே வேலை பார்த்து வந்தார்கள், இந்த புதிய சட்டத்தால் அடிமைகளை வைத்து வேலை வாங்க முடியாத சூழலில்தான்  Indentured Labour அப்படிங்கிற ஒப்பந்த முறை கூலி தொழிலாளர் முறையை ஆங்கில எஸ்டேட் முதாலாளிகள் கொண்டு வந்தனர், இதன் படி முதலாளிகள் ஒரு ஒப்பந்தம் ஒன்று ஏற்ப்படுத்திகொண்டு வேலைக்கு ஆள்களை அமர்த்தல்லாம், சட்டபூர்வாக்கப்பட்ட கொத்தடிமை முறை.

         இந்த ஒப்பந்த முறைக்கு ஆள்கள் பெரும்பாலும் அன்று ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்த இந்தியாவிலிருந்து சென்றார்கள், ஆங்கிலேய முதாலாளிகள் பெரும் நகரங்களில் இப்படியான ஒப்பந்த கூலிகளை ஏற்ப்பாடு செய்ய எஜெண்டுகளை நியமித்தது, இவர்களில் வேலை எப்படியாவது (ஏமாற்றியோ அல்லது இப்படியான தேவை உள்ளவரகளை கண்டறிந்தோ) சிலரை ஒப்பந்த போட வைத்து வெளி நாட்டுக்கு  அனுப்புவது. இந்த ஏஜெண்ட் பெரும்பாலும் இந்தியர்கள்தான்.  
        கல்கத்தா, சென்னை, மும்பாய் போன்ற இடத்தில் இதற்க்கென டெப்போ அமைத்து அங்கிருந்துதான் உலகின் பல இடங்களுக்கு இந்த கூலி தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். ஒவ்வரு தொழிலாளரின் விபரங்களும் எழுதப்பட்டு முறைபடுத்தப்பட்டது, இந்த ஆவன குறிப்புகள் இன்று வரை இருக்கிறது. எந்த கப்பல், எந்த ஆண்டு,  கிழமை, தேதி, தொழிலாளரின் பெயர், அவரின் அப்பா பெயர் , எந்த ஊர் என எல்லா விபரங்களும்  இன்று வரை கிடைக்கிறது, கல்கத்தாவில்  டெப்போ இருந்த  Kidderpore என்ற இடத்தில் இந்த இந்திய தொழிலாளர்களுக்காக நினைவிடம் அமைக்கப்படிருக்கிறது.  Kidderpore உட்ப்பட. சென்னையில் டெப்போ எங்கிருந்தது என யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

         இந்த ஒப்பந்த கூலி தொழிலாளர்கள் ஜமைக்கா, பிஜி, செசல்ஸ் தீவுகள், தென் ஆப்ர்க்க்கா, ட்ரினாட் போன்ற மேற்க்கிந்திய தீவுகள் போன்ற பல நாடுகளுக்கு அனுப்பபட்டார்கள், கடலை வாழ் நாளில் பார்க்காதவர்களுக்கு அந்த கொடிய கடல் பயண அனுபவங்களை வாசிக்கும்போது அவர்களில் துயரம் இன்றும் நம்மை அசைக்கிறது. பலர் கப்பல் பயணத்திலே மரணித்த கதையும் உண்டு, இந்த கொடிய கடல் பயனம், மொழி தெரியாத வேற்று மாநில மக்கள், புதிய பழக்க வழக்கம், தனது கிராமத்தையும் தனது குடும்பத்தையும் தவிர யாரையும் அறியாத கிராமத்து மனிதர்கள், சாதி, மதம் சார்ந்த குறுகிய வட்டத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி மன தைரியத்தோடு இந்த கொடிய பயணத்தை மேற்க்கொண்டார்கள் என்பது வியப்பை தருகிறது. இவர்களின் பயனம் இன்று வரை மிக துல்லியமாக ஆவன படுத்தபட்டுள்ளது, இந்த ஆவனங்கள் மூலம் ஒவ்வரு மனிதர்களின் பயணத்தின் கதையும் அதற்க்கு பின்னால் இருக்கும் சோகம், ஏமாற்றம், கொடுமை மேலும் அவர்களின் மனதில் இருந்த நம்பிக்கைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
           இவர்களது அனுபவ கதைகளில் அவர்களது கொடுமையான நாட்க்கள் அதை கடத்திய அனுபவம், கொண்டாடிய கொண்டாட்டங்கள் இறக்கமான சூழலின் மனிதர்களிடம் இருந்த ஒற்றுமை சகிப்புத்தன்மை பாசம் நேசம் வாழ்வை முன்னெடுத்து செல்லும் நம்பிக்கைகளை பார்க்கமுடிகிறது. அதாவது கொடுமையான் நாட்க்களிலும் அவர்கள் சந்தோச நினைவுகளின் பகிர்வும் இருக்கிறது. இது இந்த கட்டுரையில் முக்கிய நோக்கம். 


     புதிய உலகில் எப்படியான கடினமான உழைக்க வேண்டியிருந்தது, அங்கும் கங்கானிகளின் அராஜாகம் கண்முடித்தனமாக இருந்திருக்கிறது. அது வரை முகவரியாக இருந்த சாதி, மதம், கலாச்சாரம், மொழி சிறிது சிறிதாக கரைந்து வாழ்வியல் போராட்டமாகவே மட்டுமெ இருந்திருக்கிறது அவர்களது வாழ்க்கை. கூலிகள் பெரும்பாலும் ஆண்களாக இருந்தது மரபு சார்ந்த பாலியல் பழக்கவழ்க்கத்தை மாற்றியிருக்கிறது, சாதி கானாமல் போயிற்று, பெண்களின் என்னிக்கை சொர்ப்பமாக இருந்ததால் பெண் தனது விருப்பத்திற்க்கு ஏற்ற துனையை தேர்ந்தடுக்கும் புதிய முறை தானாக வந்தடைந்துவிட்டது, சில ஆராச்சியாளர்கள் இந்த ஒப்பந்த கூலி முறை  பெண்களை அன்றைய இந்திய மரபு சார்ந்த வழ்க்கையில் பிடியிலிருந்து தப்பிக்க வைத்து என எழுதிகிறார்கள். இதை வாசிக்கும்போது அன்றைய இந்தியாவில் கடைபிடித்து வந்த குழ்ந்தை திருமணம், சதி, விதவைகள், மாமியார்கள், கணவனின் கொடுமைகளை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். ஆன் பெண் விகதம் சமனற்ற நிலையில் ஏற்ப்படும் எல்லாவித விளைவுகளையும் சந்தித்து வாழ்க்கையோடு போராடி இருக்கின்றார்கள். 

       இந்த கூலி முறை வேலைக்கு சென்றவர்களின் ஒவ்வருவர் கதையும் வித்தியாசமாகவும் மனதை நெருடுவதாகவும் நாம் தூக்கிபிடிக்கும் நம்பிக்கைகளை சிறிது அசைப்பதாகவும் இருக்கிறதை பார்க்க முடிகிறது. குறிப்பாக சாதியெனும் முறை இன்றைய இந்திய வம்சாவெளியினரிடம் மிக குறைவாகவே கானப்படுகிறது, சாதி ஒழித்தல் அழித்தல் பற்றி பேசுபவர்களும் சிந்திப்பவர்களும் அந்த காலக்கட்டத்தில் இவர்களின் வாழ்க்கை முறைய உற்று கவனிக்க வேண்டு அது சாதியை பற்றிய புரிதலை இன்னும் விரிவாக்கும்.
           சாதியோ கலாச்சாரமோ அது  நமக்கு தரும் செளகரியம் குறையும் வரை அவைகளை மாற்றவோ அழிக்கவோ முடியாது என தோணுது.

       இவர்களின் இந்த பயணத்தை, இவர்களின் பாடுகள், புதிய உலகில் அவர்கள் வாழ்வியல் போராட்டத்தில் விட்டு கொடுத்த கலாச்சார முறைகளை புதியதாக வாழ கற்று கொண்ட விதம், இந்த பெரும் பயணம் சில மனிதர்களின் வாழ்வில் கொண்டு வந்த மாற்றம், அதில் உள்ள வலி, இந்த சூழலிலும் அவர்களின் கொண்டாட்டங்கள், உறவுகள், மகிழ்ச்சி தருனங்கள், மாற்றத்தை நோக்கிய நம்பிக்கை பயனம் என எதையும் எழுத்திலோ சினிமாவிலோ இதுவரை யாரும் சொல்லவில்லையென படுகிறது. ப்ரியட் சினிமா எடுக்கும் விருப்பம் கொண்டவர்கள் ட்ரை செய்யலாம். வெறும் கொடுமைகளை மட்டும் காட்டாது அந்த கொடுமையிலும் அவர்களின் மகிழ்ச்சி கொண்டாடங்களை சேர்த்து சொன்னால் சிறப்பாக வரும்.

2 comments:

 1. Thamizakththil atimaimuRai , a book written by a.sivasubramanian gives slaves history in tamilnadu,
  One more book I heard slavery in ancient India by dr.devraj Sanana .

  Hariharan

  ReplyDelete
 2. thank you annan.
  Thank you for your comments.

  ReplyDelete