Tuesday, March 19, 2013

ஏதேச்சையாக நடப்பதில்லை விபத்துகள் – (1)


ஏதேச்சையாக நடப்பதில்லை விபத்துகள் – (1): 
      தீ விபத்தோ, சாலை விபத்தோ, கெமிக்கல் ரிபைனரியில் நடக்கும் விபத்துகளோ, அனு உலைகளில், நமது வீடுகளில், வாகனத்தில், சமையல அறையில் என எந்த விபத்தும் ஏதேச்சையாக நடப்பதில்லை.
 All Accidents are preventable. இந்த வாசகத்தை முதல் முதலில் நான் வாசித்தபோது எந்த முட்டாள் இப்படி எழுதியது என நினைத்தேன்.   இந்த அமேரிக்க கம்பேனியில் இருக்கு கிட்டத்தட்ட எல்லா இந்தியர்களும் இந்த முட்டாள் வாசகத்தை மனதுக்குள் சிரித்து கொண்டு வேலை செய்தோம். விபத்துகள் நடந்து கொண்டு இருந்தன, ஆமாம் இப்படியெல்லாம் நடப்பது சகஜம்தானே, என்பதுதான் எங்களின் மன நிலையாக இருந்தது. இதை உணர்ந்த மேனஜ்மேண்ட், இதை மிகவும் தீவிரமாக வலியுறுத்தியது, அதாவது முதன்மை மேலாளர் கம்பேனியில் வேலை செய்யும் 1000 தொழிலாளர்களை நேருக்கு நேர் சந்தித்து இதை பற்றி எடுத்துரைத்தார், அதை பற்றிய எங்களின் கருத்துக்களை கேட்டார், அவரின் அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்தார். ரொம்ப சிம்பிளா ஒன்னு சொன்னார், இந்த தொழிற்ச்சாலை அதில் இயங்கும் இயந்திரங்கள் அதை பாவிக்கும் முறை எல்லாம் இறைவன் செய்ததா, இல்லையே நாம்தானே செய்தோம், நாம்தானே இயக்குகிறோம் அப்படிப்பட்ட இந்த Man Made சின்ஸ்டத்தில் விபத்து மட்டும் எப்படி தவிக்கமுடியாதாகும் என்பதே எல்லோருடம் அவர் கேட்ட கேள்வி.  மேனஜர் இதை சொல்லிவிட்டு இதை நம்பாமல் இங்கு வேலை செய்ய முடியாதுப்பான்னு ஒரு பேப்பரில் கையேழுத்தும் வாங்கிட்டார்.


      இந்த All Accidents are Preventable அப்படிங்கறதை நம்பனும்னா என்ன அர்த்தம்?
       சிம்பிள், ஒரு விபத்து தானாக நடக்கவில்லை, தெய்வ செயலால் நடக்கவில்லை நாம் ஏற்ப்படுத்திய சிஸ்டம் மற்றும் மனிதர்களின் தவறுதலால் நடக்கிறது என்பதை நம்புவதுதான்.
     விபத்து நடக்காமல் தடுக்க கூடிய வழிமுறைகள் இல்லாமல் இருக்கலாம், இருந்தும் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம், எல்லாம் இருந்தும் அந்த வேலையை செய்யக்கூடிய மனிதர்கள் அந்த வழிமுறையை பின்பற்றாத காரணமாக இருக்கலாம். இதை ஆராய்ந்து சரி செய்வதுவிட்டால் அப்படிப்பட்ட விபத்துகள் ந்டக்க வாய்ப்பே இல்லைதானே என்பதை நாங்களும் நம்பிகிறோம் இப்போது.
    தொழிற்ச்சாலை பாதுகாப்பு ( Industrial Safety) பற்றி சிறிதளவு வாசித்தும் படித்தும் அதை என்றாடம் நினைவில் வைத்து வேலை பார்ப்பவன் என்ற முறையில் இதை பற்றி தொடர்ந்து எழுதலாம் என இருக்கிறேன்.
       ஒரு விபத்து நடக்கும் முன்பு அங்கு பல Near Misses, அதாவது தலைக்கு வந்தது தலைபாகையோடு போன நிகழ்ச்சிகள் நிறைய நடந்திருக்கும், சில Incidents அதாவது தலைப்பாகையையும் தாண்டி தலைக்கு கூட வந்திருக்கும் ஆனால் பலத்த அடி ஏற்ப்பட்டிருக்காது து ஏதோ கொஞ்ச நேரம் வலித்திருக்கும் அல்லது சின்னதா சிராய்தல் ஒரு சின்ன பேண்டேஜோடு நின்னுருக்கும், நம்ம கும்மிடுகிற சாமி காப்பாத்திடிச்சின்னு சொல்லிட்டு வேலையை பார்த்திருப்போம்.
  இந்த பல , சில நடந்த பிறகுதான் ஒரு விபத்து நடக்கிறது. இந்த பல Near Miss சில Incidentகளை கூர்ந்து கவனிக்கும் திறன் இருக்கு பட்சத்திலும் அதை தவிர்க்க மாற்று வழிமுறைகளை புகுத்தி அதை செயல்படுத்துவதிலேயே விபத்தற்ற பணி சாத்தியமாகிறது. அதாவது விபத்து நடக்கும் வரை காத்திருக்காது Proactive ஆக இருந்தால் மட்டுமே.



 ஒரு உயிர் இழப்பு நடக்கும் முன்பு எவ்வளவு விசியங்கள் நடக்கின்றன என்பதை காடுகிறது இந்த பிரமிட். அடியில் இருக்கும் சமாச்சாரங்களை நீக்க வழி முறைகளை மேற்க்கொண்டால் உயிர் இழப்பை தவிர்க்கலாம் என்பது விஞ்சான முறை, அனுபவ முறை உண்மை.

No comments:

Post a Comment