லிங்கன் : அரசியல் தலைவர்:
லிங்கன் படம் பார்த்தாச்சி,
படு ஸ்லோ படம், பொறுமையா பார்க்க வேண்டியுள்ளது, 13வது சட்ட திருத்த மசதோவை எப்படி
மக்களவையில் லிங்கன் வெற்றி பெற வைக்கிறார் என்பதே கதை. 13வது சட்ட திருத்தமென்பது
அடிமைத்தனத்தை ஒழிப்பதற்க்கான அரசியல் சாசன திருத்த மசோதா ஆகும். இந்த சட்ட திருத்தத்தை
கொண்டு வர குறுக்கே நிற்க்கும் 20 ஓட்டுக்களை எப்படி சேகரிக்கிறார், எந்த வகை முறைகளை
எப்படி கையாள்கிறார், இதை சொல்ல முயல்வதே லிங்கன் படம். லிங்கன் அமேரிக்க ஜனதாதிபதிகளில்
தெய்வ நிலைக்கு கொண்டு செல்லப்பட்டவர், நமது காந்தியடிகள் போல ஆனால் அவரை மனிதராக பார்க்க
வைக்கிறது இந்த படம்.
லிங்கன் என்கிற அமேரிக்க ஜனாதிபதியின் அரசியல் சாதுரியம்,
தான் நம்பு ஒரு உண்மைக்காக பொறுமையாகவும் சாதுரியமாகவும் போராடும் திறனை படமாக்கிருக்கிறார்
ஸ்பில்பர்க். மக்களாட்சி எப்படி செயல்படுகிறது, எதிர் கருத்துக்கள் கொண்டவர்களை சாதுரியமாக
எப்படி ஜெயிப்பது, அதன் வலி அந்த வெற்றியின் மகிழ்ச்சி அதுவே லிங்கன்.
லிங்கனை தவிர
படத்தில் வரும் பல பாத்திரங்கள் நம்மை கவர்கிறது.
ஓவ்வருவரும் எப்படி இந்த சட்ட திருத்தத்ற்க்கு உதவுகிறார்கள், அவர்களை எப்படி லிங்கன்
உதவ வைக்கிறார், லிங்கனின் ஆளுமை எப்படியாக இருந்திருக்கிரது என்பதை அருமையாக உணர்வுப்பூர்வமாக சொல்லப்படுகிறது இந்த
படத்தில்.
முதலில் தியோடஸ் ஸ்டிவன்சன்,
இந்த
ஸ்டிவன்ஸ் நம்ம வைகோ மாதிரி பேச்சாற்றலில்
சிறந்து விளங்குபவர், கருப்பர்கள் அடிமைதனத்தை ஒழிப்பதில் மிக தீவிரமாக தன்னை அற்ப்பனித்து
கொண்டவர். கருப்பர்கள் அடிமைகளாக இருந்த காலத்திலே அவர்களுக்கான ஓட்டுரிமை சம உரிமைகளை
பற்றி பேசி கிலி ஏற்ப்படுத்துகிறார். இவரை எப்படி லிங்கன் சமாளிக்கிறார், இவரை வைத்தே
அடிமை ஓழிப்பு சட்ட திருத்தத்தை கொண்டுவருகீறார், என்பது ஒவ்வரு அரசியல் தலைவருக்கும்
இருக்க வேண்டிய திறனாக நான் பார்க்கிறேன்.
சிலர்
அடிமை சட்டம் ஒழிக்கப்படவேண்டும் என நம்புகிறார்கள் ஆனால் கருப்பர்களும் வெள்ளைக்காரனும்
சமம் எனப்படும் வாதத்தை எதிர்க்கிறார்கள். ஸ்டிவன்ஸ்னோ எல்லா மனிதர்களும் சமம் என முப்பது
ஆண்டுகளாக போராடிவருகிறார். இவரும் லிங்கனின் கட்சியை சேர்ந்தவர்தான் , இவரின் பேச்சாலே
சிலர் இந்த சட்ட திருத்தத்தை ஏதிர்க்கிறார்கள். இவரை எப்படி தனது சாதுரியமான ஆனால்
உண்மையான பேச்சால், ஸ்டிவன்சனின் கொள்கை பிடிப்பில் தற்க்காலிகமாக மாற்றங்களை கொண்டு
வருகிறார். கடைசியில் அவர் மக்களவையில் பேசும்போது இப்படியாக சொல்கிறார்.
I do not
hold with equality in all things, only with equality before the law. இது இந்த 13வது சட்ட திருத்த வெற்றிக்கு முக்கிய
காரணமாகிறது. இங்கு அவரின் சுய மதிப்பிடுகளை தற்காலிகமாக சிறிது இறக்கி வைத்து அடிமை
ஒழிப்பு சட்டத்தை கொண்டு வர உதவுகிறார்.
ஸ்டிவன்சனுக்கும் லிங்கனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்
அற்ப்புதம், சாதுரியம் மற்றும் மதி நூட்ப்பம் கொண்ட அரசியல் தலைவர் என நாம் அறிந்து
கொள்வது இந்த உரையாடல் பகுதியில்தான்.
Stevens: You know that the inner compass that
should direct the soul towards justice has ossified in white men and women,
north and south unto uselessness through tolerating the evil of slavery. White
people cannot bear the thought of sharing this country's infinite abundance
with Negroes.
அதற்க்கு லிங்கனின் பதில்: A compass, I learnt when I was surveying, it
will point you True North from where you are standing, but its got no advice about
swamps and deserts and chasms that you will encounter along the way. If in
pursuit of your destination, you plunge ahead,, heedless of obstacles, and
achieve nothing more than to sink in a swamp. Whats the use of knowing true
North?
//அவரை மனிதராக பார்க்க வைக்கிறது இந்த படம்.//
ReplyDeleteமிக மிக உண்மை!
இது வரை இவரைப் பிரமிப்புடனே நோக்கினேன்.இப்படம் பிரமிப்பைத் தகர்த்தது. இவர் மனிதனாக வாழ்ந்துள்ளார். அதிலும் குழந்தையை உப்பு மூட்டை தூக்குவது- அவர் அன்பான மனிதரென்பதற்கு எடுத்துக்காட்டு.
படம் மெதுவாகச் சென்றது உண்மை! ஆனால் ஒரு போப்பாண்டவர் போல் இருந்த தலைவர்.
அதனால் அதிரடியாக எடுக்கமுடியவில்லையோ?
இப்படியும் மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள்...ஆச்சரியமாக உள்ளது. இவர் உண்மையான குரல் இவ்வளவு மென்மையானதா?
எனக்கு அவர் ஒரு பாதிரியார் போல் தான் தெரிந்தார்.
// யோகன் உங்கள் கருத்துக்கு நன்றி.
ReplyDelete