Celebrating Chaos - ஒழுங்கின்மையின் கொண்டாட்டம்
Double Slit Experiment அப்படின்னு
ஒரு சோதனை மிக புகழ் பெற்றதும், 20அம் நூற்றாண்டின் எல்லா சிந்தனைகளுக்கும் கருத்துரைக்கும், குவாண்டம் ஃபிஸிக்சுக்கும் மூல காரணம் எனலாம். ஏன்
பின் நவினத்துவத்துவ சிந்தனைகளுக்கு கூட காரணமெனலாம்.
அது
என்னப்பா சோதனை?
நான்
சொல்லபோகும் சோதனையை எளிய முறையில் விளக்குகிறது இந்த படம். http://www.youtube.com/watch?v=DfPeprQ7oGc
சோதனை 1:
சிறு
துகள்களை ( மஞ்சள் பொடி, சாய பொடி, …) இரு சிறு கிற்று வழியாக செலுத்தி, ஒட்டைகளின்
மறு பக்கத்தில் ஒரு வெண் நிற திரையை வைத்திவிடுவோம், செலுத்தபடும் மஞ்சள் பொடிகள் செலுத்தப்பட்ட
சிறு கிற்றுகளின் வடிவத்தில் மஞ்சள் நிறத்தில் திரையில் பதிவை ஏற்ப்படுத்தும். சரியா?
அதாவது இரு கோடுகள்.
சோதனை 1:
இப்போது அதே இரு கீற்றுகள் வழியாக உதுவத்தி புகையை அனுப்புவோம், அது எப்படிப்பட்ட
பதிவை திரையில் ஏற்ப்படுத்தும்? கண்டிப்பாக
இரு கீற்றுகள் வடிவத்தி இரு கோடுகளை
உருவாக்காது, அது வேறு விதமான வடிவத்தை ஏற்ப்படுத்தும். உதுவத்தியை போட்டோ ஃப்ரேமில்
வைத்தால் கண்ணாடியில் உதுவத்தி மாதிரியா தடம் பதியும்? நடுவில் அதிக கருப்பும் அதன்
இரு புறஙக்ளிலும் கருமை குறைந்து இருக்கும் வடிவத்தை காணலாமெல்லவா அது போல.
முதல்
சோதனையில் திரையில் உருவான பதிவு – பொருளின் அதாவது திட பொருட்க்கள் உருவாக்கும் பதிவு.
இரண்டாவது சோதனையில் உருவான பதிவு அலைகள் (
Waves) உருவாக்கும் பதிவு.
இந்த இரு சோதனைகளின் பயன்பாடு என்னவென்றால்
- ஏதாவது ஒன்றை அது பொருளா இல்லை அது அலையான்னு
கண்டுபிடிக்க திரையில் அவை ஏற்ப்படுத்தும் பதிவுகளை வைத்து கண்டுபிடிக்க முடியும். ஏது
உண்மை என்பதை நாம் அந்த பொருள் திரையில் ஏற்ப்படுத்தும் விளைவை வைத்து முடிவுக்கு வருகிறோம்.
இந்த Double Slit சோதனையின் முடிவு ஏற்ப்படுத்திய
அதிர்வலைகள் அதுவரை இதுதான், இப்படிதான் என்பதை
ஒருவேளை அப்படி இருக்கலாம், இல்லை இப்படியும் இருக்கலாம்னு மாற்றி நிறைய “லாம்களை” கொண்டு வந்தது.
சரி
இந்த Double split சோதனையை எலக்ட்ரானுக்கு செய்து பார்த்தால் எப்படி இருக்கும், எலக்ட்ரான்கள்
என்பது மிக மிக அளவிலும் இடையிலும் குறைந்த ஒரு பொருள்.
எலட்ரான்களை இந்த கீற்றுகளுக்குள் செலுத்தி அவை ஏற்ப்படுத்தும் திரை பதிவை வைத்து அது பொருளா? அல்லது அலையான்னு
கண்டுபிடித்துவிடலாம் என்கிற ஆசையில் சோதனை செய்தார்கள்.
முதலில் ஒரே ஒரு கீற்று வழியாக எலக்ட்ரானகளை செலுத்தினார்கள் அது ஒரு கோட்டை
பதித்தது, து ம்ம்ம்ம் அப்படின்னா எலக்ட்ரான்கள் பொருள்தானா, எதுக்கும்
இரு கீற்றுகளுக்குள் விட்டு பார்ப்போன்னு சோதித்தார்கள், அப்போது அது அலைகள் எற்ப்படுத்தும்
பதிவை திரையில் பதித்தது. இது என்னடா இப்படி இருக்கு, ஒரு தடவை அப்படியும் இன்னோரு
தடவை இப்படியும்ன்னு குழம்பினர். ஒரு ஒரு எலக்டரான்களாக விட்டு பார்த்தர்கள் அப்போதும்
அலையின் பன்பை ஏற்ப்படுத்தியது.
இந்த Double Slit சோதனை முடிவு ஏற்ப்படுத்திய அதிர்வலைகள் அதுவரை இதுதான், இப்படிதான்
என்பதை ஒருவேளை அப்படி இருக்கலாம், இல்லை இப்படியும்
இருக்கலாம்னு மாற்றி நிறைய “லாம்களை” கொண்டு வந்தது.
இந்த குழப்பம் விஞ்சான வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாக கருதபடுகிறது. இதற்க்கும் நமக்கும் என்ன தொடர்பு. அது உலக கருத்துருவாக்கத்தை
எப்படி பாதித்தது. பார்ப்போம்.
The act of observing something affects what you see. கவனிப்பு
கவனிக்கபடுவதை பாதிக்கிறது / மாற்றுகிறது.
ஒரே ஒரு எலட்ரான் இரு கீற்றுகள் வழியாக செலுத்தும்போது அது திரையில் அலைகள்
போல பதிவை ஏற்ப்படுத்தியது. அப்படின்னா எந்த எலட்ரான் எந்த கீற்று வழியாக போகுதுன்னு
அதன் போக்கை அவதானிக்க ஒரு கருவியை பொறுத்தினார்கள், இதுதான் இங்கு முக்கியம். இந்த
அவதானிக்கும் கருவி –இவர்தான் அடைசியில் ஹிரோன்னு இப்போதே சொல்லிவிடுகிறேன்.
இந்த எலக்ட்ரான் அவதானிக்கும் கருவி இருக்குபோது மீண்டும் பொருட்க்களின்
பதிவை திரையில் பதித்தது, அதாவது இரு கோடுகள் மட்டுமே. அதாவது அந்த கருவியின் அவதானிக்கும்
செயலால் அந்த எலக்ட்ரானின் குணம் மாறிவிட்டது போல தோற்றம் உருவாக்குகிறது.
இப்போது எது உண்மை? திரை பதிவை வைத்துதானே
இது பொருளா இல்லை அலையான்னு முடிவுக்கு வரனும். இப்போ எப்படியான? எந்த மாதிரியான? முடிவுக்கு
வர முடியும். இதுவே குழப்பத்தின் ஆரம்பம்.
முதலில் சொன்னேன் அல்லவா, சோதனையின்
விளைவை வைத்து முடிவுக்கு வரும் முறையில் இந்த அவதானிக்கும் கருவியின் செயல் மாற்றுகிறது.
அந்த ஒரு எலக்ட்ரான் எந்த கீற்று வழியாக செல்லும் என்கிறதை ஒரு தோராயமா வேனும்னா சொல்லாம்,
இதிலதான் போகும்னு சொல்லவே முடியாது, அப்படி சொல்லனும்னு அதை அளவிட நினைத்து கருவியை
வைத்தால் அது அதன் பண்மையே மாற்றிவிடுகிறது.. இது ஒரு தெளிவற்ற சூழலை உருவாக்கியது,
விஞ்சானமென்றாலே சரி / தவறு ன்னு கறாரா போய்கிட்டுருந்த நேரத்தில் இப்படியான குழப்பம்,
அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. God Don’t Play Dice ன்னு ஐன்ஸ்டின் இதை எதிர்த்தார்,
அதாவது இறைவன் ஒன்னும் சோளி உருட்டுபவர் இல்லை, இது சரி / இது தவறு எனதான் இருக்க வேண்டுமென்று
வாதாடினார். ஆனாலும் விஞ்சானம் குவாண்டம் உலகத்திற்க்குள் சென்றது. அதன்
பல்வேறு சோதனைகளின் முடிவில் இப்படியாக முடிவுக்கு
வந்தார்கள்.
Quantum mechanics shows:
1.
Reality is indeterminate. – உண்மை அறியமுடியாதாய் இருக்கிறது.
2.
The law of
excluded middle is false.- உண்மைக்கும் உண்மையின்மைக்கும் இடையில் இருப்பதை
நிராகரிப்பது சரி அல்ல.
3.
Observers create
reality. – பார்வையாளனே உண்மையை உருவாக்குகிறான்.
4.
World is governed
by chance. – உலகம் சந்தர்ப்பவசத்தால் ஆளப்படுகிறது.
முதலில்
சொன்னதுதான் மீண்டும் சொல்கிறேன், நாம் கானும்
விளைவை வைத்து மட்டும் முடிவுக்கு வர முடியாது, எனென்றால் நாம் காண்பது எனும் செயலால்
காணப்படுவது மாறக்கூடியது. பார்க்கும் பார்வையாளனே உண்மையை தீர்மானிக்கிறான், அப்படியெனில்
பல பார்வையாளர்கள் பல உண்மைகள், பல வடிவங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. குழப்பம், ஒழுக்கமின்மை
நிராகரிக்க முடியாதாக இருக்கிறது. இதுவே பின் நவினத்து சிந்தனையின் ஆரம்பம் என்று கூறலாம்.
ஒரு வேளை குழ்ப்பம், ஒழுங்கற்ற நிலைதான் இயற்க்கையோ என்னும் கேள்வியை என் முன்பு வைக்கிறது, ஒழுங்கற்ற நிலை எனக்குள் பதட்டத்தை ஏற்ப்படுத்துகிறது, எல்லாம் தவாறாகிவிடுமோ என்கிற பயத்தால் நிலையின்றி தவிக்கிறது. எது எதுவாக இருந்தாலும் இந்த ஒழுங்கின்மை செய்யும் அரசியல் நாம் நமக்காக உருவாக்கி கொண்ட ஒழுக்க நெறிகளின் தேவையை தேடிச்செல்ல வைக்கிறது, இன்னும் அதை இறுக பற்ற செய்கிறது, அதை அறம் அல்ல என கொள்வோர்களிடத்திலும் நேசம் பாராட்ட முடிகிறது, இதுதான் எனது அறம் என உரக்க சொல்லமுடிகிறது, யாரது நிர்பந்தமும் இல்லாமல் இதுதான் நான் என வாழமுடிகிறது. இந்த புரிதல் என்னை புரிந்தும், புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும், முடிந்தும் முடியாமலும் இருக்கும் என்னற்ற மனிதர்களிடம் பாசாங்கு இல்லாது வாழ வேண்டிய கட்டாயத்தை சொல்லிதருகிறது.
Co Existence with Different kinds of people and with different sets of Ideology is the only choice. ன்னு சொல்லிகொடுக்குது. அதுவே ஒழுங்கின்மையின் கொண்டாட்டாமகும்.
No comments:
Post a Comment