பண்டி சோர் - திருட்டு ராஸ்கல் :)
காவல்கோட்டம் நாவல் பற்றி எலக்கிய விமர்சகர்கள்
முன் வைத்த மொக்கையான வாதம் அது களவை கொண்டாடுது என்பது, பண்டி சோர் என அழைக்கப்படும்
தேவேந்திர சிங், இந்தியாவின் ஹைடெக் திருடன், அவனது திருட்டும் கொள்ளைகளும் மிக நூட்ப்பமான
முறையில் நடத்தபடும். உதாரணம் சமிபத்தில் கேரளாவில், புல்லட் ஃப்ரூவ் கண்ணாடி, அதி
நவின சென்ஸார்கள், கேமராக்கள் கொண்ட வீட்டில் புகுந்து லெப்டாப், மொபைல் மற்றும்
28 லட்சம் மதிப்பான வெளி நாட்டு காரை எடுத்து சென்று விட்டான். இந்த காரை பாஸ்வோர்ட்
போட்டுதான் ஸ்டார்டே செய்யமுடியுமாம். இப்படியாக அவனது திருட்டு சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும்
இருப்பதால் மக்கள் மனதில் பண்டி சோர் ஹிரோ அளவுக்கு பிரபலம்.
பண்டி
சோரை பற்றி பேச ஆரம்பித்தால் அவனை பற்றி தெரிந்தவர்கள், முச்சு விடாமல் பேசுகிறார்கள்,
அதிலிருக்கும் அவனது சாதுரியமும், திறமையும் எல்லாவற்றிர்க்கும் மேலாக அதிலிருக்கும்
வெகுளிதனத்தையும் பார்க்கலாம்.
டெல்லியில்
பிறந்த தேவந்திர சிங்கின் சிறு வயது கணவு ரானுவத்திலோ அல்லது சிபிஐ போன்ற நிருவனத்தில்
பணி செய்யவதே, வீட்டு சூழல் காரணமாக அக் கண்வு நிறைவேறாததால், மிக சாதிரியமாக பேசவும்
நட்ப்பாகவும் பழக கூடிய பண்டி களவை ஒரு பொழுதுபோக்காவும் வயிற்று பொழைப்புக்கும் செய்ய
ஆராம்பித்திருக்கிறான். அவனது காதலி அவனை விட்டு சென்ற பிறகு மிகுந்த மன உளச்சலுக்கு
ஆளாகி அந்த பிரிவின் துக்கத்தை அவன் நூட்ப்பாக திட்டமிட்டு திருடும் திருட்டிலே போக்கினானாம்.
ஒரு
முறை ஜெயிலில் இருக்கும்போது விடுதலை ஆக 15 நாட்க்கள் இருக்கும்போது தப்பித்துவிட்டான்,
அவனிடம் கேட்டதற்ற்க்கு எனக்கு தெரியல ஏனோ எனக்கு இன்னும் 15 நாட்க்களை அதில் கழித்து
விடுதலை ஆவதில் விருப்பம் இல்லை என்றானாம். இப்படி பல பல கதைகள் அவனை பற்றி.
Catch Me If You Can படத்தில் டிகார்ப்பியோவும் இப்படி
ஒரு திருடன் பாத்திரத்தில் நடித்திருப்பார். அட்டகாசமான படம். பண்டி சோர் நேற்று புனேவில்
பிடிப்பட்டானாம். அவனை வைத்து ஒரு ஹிந்தி படம் எடுக்கப்பட்டிருக்காம், Big Boss எனப்படும்
ரியாலிட்டி தொடரிலும் வந்திருக்கிறான். இந்தியா முழுதும் 500 கேஸ்கள் அவனது மேல் இருக்கிறதாம்.
இருந்தும் அவனது புத்திசாதுரியமான திருட்டுக்களுக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது
போல தெரிகிறது.
No comments:
Post a Comment