Complacency : ஆங்கிலத்தில் இப்படி ஒரு வார்த்தை இருக்கிறது,
இந்த வார்த்தை ஒர் ஆண்டுக்கு முன்பு எனக்கு தெரிய வந்தது, நம்ம கூட வேலை பார்க்கிறவர் சொன்னார், This
accident happened because we are complacent ன்னு. அது என்னன்னு பார்த்ததில் சுவாரஸ்யமான
விசயங்கள் தெரிய வந்தது. ஆங்கில அகராதி இப்படியாக சொல்கிறது. ”an instance of usually unaware or uninformed
self-satisfaction”. தமிழில் சொல்லனும்னா
நாம் முழுமையாக அறியாமல் புரியாமல் நமக்கு
நாமே திருப்தியாக உணர்தல். இந்த complacency என்கிற
நிலையை அடையும் பயணம் சுவாரஸ்யமானதும் தவிர்க்க முடியாததுமாகவும் மனித மனதின் திறனாக
இருக்கிறது என்பதே எனது நிலை.
ஒரு வேலையை முதல் முதலாக நாம் செய்யும்போது அந்த
வேலையில் கவனம் நூறு சதவிதம் இருக்கும், அக்கம் பக்கத்தில நடக்கும் எந்த செயலும் நமது கவனத்தை ஈர்க்காது, நாம் அப்போது செய்யும் செயலாகவே இருப்போம். நாம் முதல் முதலில் பைக் ஓட்டியது, முதல் முதலில் சைக்கிள் ஒட்டியது,
பிரியாணி சமைத்தது, கேக் செய்தது முதல் முதலில் திருட்டுத்தனமாக படம் பார்த்தது வரை
எந்த வேலையிலும் நாம் முதல் முறை செய்யும் போது மிகுந்த சிரத்தையோடும் இருப்போம். அந்த
வேலையே வேலையாகி விட்டதென்று வைத்துகொள்வோம் பின்னர் அந்த சிரத்தை குறைந்து விடும்
இருந்து வேலை நடக்கும், நம்மால் ஏதோ ஒன்றை சிந்தித்து கொண்டு அந்த வேலையை செய்யமுடியும்,
பாட்டு கேட்டு கொண்டோ, போன் செய்து கொண்டோ வேலையை தொடர முடியும். பைக் ஓட்டி கொண்டே
இன்று அலுவலகத்தில் நடந்ததை பற்றி, படித்தது, பார்த்தது கேட்டது, வீட்டி நடக்க போவது
என பலவற்றை சிந்தித்தபடியே செல்ல முடியும். பல முறை வீட்டுக்கு வந்த பிறகு எப்படி நாம்
வந்தோம் என யோசித்து பார்த்தால் எதுவும் நினைவில் இருக்காது. இதை சாத்தியம் ஆக்குவது
நமது மனமே. இந்த திறன் இல்லையென்றால் நம்மால் ஒரு வேலை மட்டும்தான் செய்யமுடியும்,
அதுவும் ஒரே மாதிரியாக மட்டும்தான் செய்ய முடியும்.
இந்த திறனின் மறுபக்கம் என்னவென்று யோசித்தால்
எந்த பாதக விழைவுகளும் இல்லாமல் நாம் செய்து முடிக்கும் வேலையால் நமக்கு தரும் ஒரு முழுமையான திருப்தியான உணர்வு.
அந்த உணர்வின் விளைவு கவனகுறைவு. நாம் செய்யும்
வேலையின் உள்ள குறைபாடுகளை மறக்க செய்கிறது இதுவே சரி இதுதான் சரி என்கிறமாதிரியான
அகங்கார உணர்வு. புதியதாக அல்லது முதல் முறையாக
நாம் செய்யும் செயலில் பெரும்பாலும் விபத்துகள் நிகழ்வதில்லை மாறாக திருப்தியான உணர்வு
நிலை – Complaceny நிலையிலே விபத்துகள் நிகழ்கின்றன.
Complacency நிலையை அடையாமல் நாம் பல வேலைகளை செய்ய முடியாமல் போய்விடுவோம், வாழ்க்கை போர் அடிக்கும்
ஆனால் அந்த நிலை தரும் உணர்வோ ஆபத்தில் மாட்டிவிடுவாதகவும் பிடிவாத உணர்வை அளிப்பதாகவும்,
இதுவே சரியென திருப்தியான உணர்வை தருவாதகவும் இருக்கிறது.
No comments:
Post a Comment