Monday, May 27, 2013

பாலா எழுதி கொண்டிருக்கும் நாவலுக்கான எனது விமர்சனம்:


சாலை அங்கேயேதான் இருக்கும் – ஒரு பார்வை

       
  நாவல் வெளியிட்ட பிறகு அதை வாசித்து விமர்சனம் செய்வதுதான் முறை, இந்த முறையை மாற்றி, நன்பர் பாலா அவர்கள் எழுதிகொண்டிருக்கும் புதிய நாவலான சாலை அங்கேதான் இருக்கும் எனும் நாவலுக்கான விமர்சனம் இது.  அந்த நாவல் வெளிவரும் முன்பே கடந்த காலத்தில் எழுதியது.  டைம் மெசின் போல காலத்தை மாற்றி போட்டு செய்யப்படும் சிறிய சோதனை.  

              நாவல் எப்போது எனது கைகளில் வரும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்து பல தடங்களுக்கு பிறகு எனது கைகளில் கிடைத்தது, எடுத்ததும் இருந்த வேலைகளை எல்லா விட்டுவிட்டு வாசிக்க துவங்கினேன்.
       முதலில் கட்டற்று பயனித்த நாவலுக்குள் அவ்வப்போது என்னை உள்ளே இழுத்தது, இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் அல்ல, அன்றாடம் நாம் பார்க்கும் பழகும் பாத்திரங்கள்தான். இந்த பாத்திரங்களின் படைப்பு புதியதாக இல்லையென்றாலும் அவை செய்யும் செயல்களும்  நம்மை உருத்தாது நம்மை போலவே அமைத்திருப்பது வாசிக்க சுகமாக இருக்கிறது.  நாம் வாழும் சமுகம் அதன் போலித்தன்மைகளை இவ்வளவு அருமையாகவும் வெளிப்படையாகவும் யாரும் சொல்லிருக்க முடியாது. இருத்தலின் வலிகளை இந்த நாவலின்  நாயகன் “பகடையின்” வாழ்க்கை சித்தரிப்பின் மூலம் நாம் வாழ்ந்து பார்க்கலாம்.

          ”பகடை” -  காலம் ஆடிய சதுரங்க விளையாட்டால் உயிர் மட்டும் தனது உடமையாக வாழ்ந்து வருகிறான், அவனுக்கு இருக்கும் வலிகள், ஏக்கங்களை சொல்லிருப்பது கண்களில் கண்ணிர் வர வைப்பதாக இருக்கிறது. இந்த வலியை எழுத்தில் கொண்டுவந்து நம்மை உறைய வைத்துவிடுகிறார் பாலா. பகடையின் வாழ்வியல் சோகம் இந்த வாழ்க்கையின் அபத்தம், அதன் அர்த்தமின்மையை வெகு சுலபமாக சொல்லிய பாலாவுக்கும் எனது முத்தங்கள்.
            கலாச்சார அறம் சார்ந்த அனல் தெறிக்கும் வசனங்கள் நாவல் முழுவதும் நிரம்பி இருப்பது மனதிற்க்கு இதமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது. அவற்றில் சில.

1.    பாவை கஸ்டம்பரை வெளியே அனுப்பிவிட்டு குளித்து விளக்கு ஏற்றி குங்குமம் வைத்து கொண்டாள். அதுவே அவளது வாடிக்கையான செயலகளில் ஒன்று.
2.   மை டியர் பாவை ஓடிப் போய் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் ஆனால் உண்ணை இனிமேல் தொடுவதற்க்கு முன் இந்த கோவிலில் கல்யான செய்து கொள்கிறேன்.
இப்படியான வசனங்கள் அருமையோ அருமை. இதிவே இந்த நாவலை உண்ணதப்படுத்துகிறது.

         இந்த நாவல் முன் வைக்கும் காதல், ஆன் பெண் உறவுகள் மிகவும் நாகரிகமாகவும் நளினமாகவும் இருக்கிறது. என்னதான் பாவை விபச்சாரியாக இருந்தாலும் அவனை காதலிக்கும் பகடை கடைபிடிக்கும் இந்திய பாரம்பரியம் தற்க்கால தமிழத்திற்க்கு தேவைபடும் அறம்.

   பாலாவிற்கு நக்கல் மொழி, நய்யாண்டிதனம் வெகு இயல்பாக வருகிறது. உதாரணம் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்த கையாயோடு சோடாவும் குடித்துவிடுவது வழக்கம் என  நக்கல் அடிப்பது, கோழியா? முட்டையா? எது முதல் எங்கிற கேள்விக்கு பகடையில்  நண்பன் கடப்பாறை சொல்லும் பதில்கள் எல்லாம் நக்கலின் உச்சம். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

 இந்த நாவல் முன் வைக்கும் சமுக அரசியல் முக்கியமானது, ஏழையான பகடையின் மீது ஆதிக்க சாதியினரும் பூர்ஷிவாக்களும் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் இந்த உலக்த்தில் எந்த அளவுக்கு வலியவர்களை மிதிக்கிறது இந்த சமுகம் என காட்டுகிறது.

 எடுத்து கையாண்டுள்ள விடயம் மிகவும் புதுமையாகவும் வித்தியாசகவும இருக்கிறது.  நசுக்கப்படும் ஏழை கொட்டி சிரிக்கும் பூர்ஷிவா என இன்றைய நவின இந்தியாவின் பூர்ஷீவாதனத்தை சாடுகிறது இந்த  நாவல்.

 முடிவாக இதை சொல்லி முடிக்க மனமின்றி முடிக்கிறேன். இந்த நாவல் சொல்லும் வதைகள், ரணங்கள், வேதனைகள் மற்றும் சோகங்கள் வைத்து பார்த்தால் இது சோககாப்பியம். இது சொல்லும் காதல், அந்த காதலுக்காக செய்யும் தியாகங்கள் அதை சொல்ல தெரியாது நடக்கும் அவலத்தை வைத்து பார்த்தால் இது காதல் காவியம்.  வாழ்க்கையின் நம்பிக்கையின்மை, இருத்தலின் சோகம் என மிக நேர்த்தியாக சொல்லிருப்பதை வைத்து பார்த்தால் இது எதார்த்த காப்பியம். இந்த நாவல் 2500 வருட கலாச்சார பின்னனிகள் அதை தாங்கிபிடிக்கும் தாய் தத்துவங்களை வைத்து பார்த்தால் இது தத்துவ நூல். தமிழ் மொழி நடையில் இதுவரை யாரும் காட்டிராத  நூண்ணுர்ச்சிகளும்  அதில் இருக்கும் கவிதைத்தன்மைகளை வைத்து பார்த்தால் இந்த சாலை அங்கேயே இருக்கும் எனும் நாவல் தமிழ் காவியம்.

      இது நாம் வாழும் வாழ்வின் அபத்தங்களை சொல்லும் அற்புத நூல்.


  பின்குறிப்பு: இல்லை நண்பா நாவலை படித்துவிட்டு உங்கள் விமர்சனம் வாசித்தேன், நீங்க சொல்வதற்க்கும் இந்த நாவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  நீங்கள் நாவலை வாசிக்கவே இல்லையென படுகிறது என்று நீங்கள் நினைத்தால் நாவல் வெற்றி என நினைத்துக்கொள்ளுங்கள். உண்மையில் இந்த கட்டுரையின் தோல்வியில்தான்  அந்த நாவலின் வெற்றியே இருக்கு.  ஏனென்றால் இந்த கட்டுரை அந்த நாவலின் ஒரு வார்த்தையை கூட வாசிக்காமல் எழதியதுதான். 

     எதிர்பார்த்ததை வாசிப்பதில் அப்படியென்ன சுகம் இருக்கமுடியும்? 

No comments:

Post a Comment