Wednesday, May 29, 2013

எனது சூப்பர் ஹிரோவின் சாகச கதை 3: இரயில் கவிழ்ப்பு சதி முறியடிப்பு – லியோ வைரக்கண்ணுவின் அடுத்த சாகசம்:


இரயில் கவிழ்ப்பு சதி முறியடிப்பு – லியோ வைரக்கண்ணுவின் அடுத்த சாகசம்:
 எனது சூப்பர் ஹிரோவின் கதை 3:
     இதை வாசிக்கும் முன் முதல் இரண்டு கதைகளை வாசிக்கவில்லை என்றால் இந்த சுட்டிகளில் வாசிக்கலாம், வாசிக்காமலும் இருக்கலாம், அது உங்க இஸ்டம்:

             லியோ சென்னையில் இறங்கிய இடம் செண்டரல் இரயில் நிலையம். எந்த தண்டாவாளத்தில் பிரச்சனை என்பதை கண்டுபிடிப்பது அவனுக்கு முதல் வேலையாக பட்டது. அவனது பையிலிருந்த சிறிய மல்டி மீட்டரை எடுத்து, அதன் இரு வையர்களில் ஒன்றை ஒரு தண்டவாள கம்பி மீதும் அடுத்த வையரை மற்றுமோரு தண்டவாள கம்பி மீதும் பொருத்தினான். மல்டி மீட்டர் 0 ஒம்ஸ் என சொல்லியது.  மீட்டரில் ஜிரோ காட்டினால் தண்டாவளங்களில் எந்த இடையுறும் இல்லாது சீராக இருக்கினறன என லியோ வைரகண்ணுக்கு தெரியும்,  இவ்வாறாக ஒவ்வரு தண்டாவளமாக அவனது மல்டி மீட்டரை வைத்து சோதனை செய்தான் லியோ வைரக்கண்ணு. இறுதியில் ஒரு தண்டாவாள பாதையை  பரிசோதிக்கும் போது மீட்டர் ஜிரோ காட்டாது, மீன் தடை இருப்பதாக காட்டியது. அதாவது மீட்டரிலிருந்து செல்லும் மின்சாரம் எங்கோ தடைப்பட்டு போகிறது, மீட்டர் காட்டிய மின் விசை எதிர்ப்பு அளவுமுலம் 3 மீட்டர் நிளத்திற்க்கு தண்டவாளம் கழட்டபட்டிருக்கு எனவும் முடிவுக்கு வந்தான். சதிகாரன் செயலால் ஏற்ப்பட போகும் உயிர்ழப்பை தடுக்க வேண்டுமே. அந்த மூன்று மீட்டர் அளவு எவ்வளவு பெரிய பேராபத்தை உருவாக்க போகிறது.  யார் அந்த சதிகாரன்? என சிந்தனையில் முழ்கியவாறே, பையிலிருந்த காரட்டை கடிக்க ஆரம்பித்தான்.

         வானத்தில் கழுகு ஒன்று  பறந்து வந்து கொண்டிருந்தது, அது உலகின் எல்லா கெட்ட வார்த்தைகளை சொல்லி யாரையோ திட்டி கொண்டு வந்தது. டியர் கழுகு, ஹலோ நீ வரும் வழியில் தண்டவாளம் பெயர்க்கபட்டுள்ளதை பார்தாயா? அப்படி பார்த்தாய் எனில் எந்த இடம் என சொல்ல முடியுமா என்றான் லியோ. போடா பேய்…கு…. என இன்னும் கேவலாமாக இவனை பார்த்து திட்டியது. 
        ஆமாம் நான் பார்த்தேன் ஆனால் சொல்ல மாட்டேன், எல்லோரும் செத்து போனால் எனக்கு சந்தோஷம் என்றது.

      சரி கழுகார் இன்னிக்கி மூட் அவுட் போல என என்னி,  கழுகின் மூளையில் பதிந்த பிம்பங்களை ஹக் செய்திட வேண்டியதுதான் என கருதி, தனது கண்களால், கழுகின் மூளையின் நிலையை கண்டறிந்தான், அதன் அனுக்களின் வேகம் மற்றும் அதன் அதிர்வுகளை  கண்டறிந்தான், அதனோடு அவனின் கண்களின் காந்த அலைகளை ஒத்திசைவாக்கினான், கழுகின் முளை பாஸ்வோர்ட் கேட்க்க 123456 என அடித்தான், அது அவனை உள்ளே அனுமதித்தது, பாஸ்வேர்ட் கண்டுபிடித்த காலத்தில் இருந்து இன்று வரை இந்த 123456 ஐ விடவில்லையா புதிசா எதுவும் யோசிக்க மாட்டாய்ங்களா என அதன் முளையில் இருந்த விபரங்களை டவுன்லோட் செய்தான்.  டவுன்லோட்  செய்த பிம்பங்களை உள்ளங்கையில் படமாக ஓட்டி காட்டியது அவனது கண்கள்.
      கழுகு மூளைக்குள் கருமம்: 
          டவுன்லோட் செய்த படங்களை பார்த்து நொந்து போனான், ரெண்டு நிமிடம் கழுகு திட்டிய எல்லா கெட்டவார்த்தைகளையும் வைத்து இவனும் திட்டினான். ச்சே எத்தனையோ முறைகள் இருக்கும் போது இந்த கழுகு முளைக்குள் சென்று பார்க்கும் முறையை தேர்ந்தெடுத்ததை நினைத்து நொந்து கொண்டான். சூப்பர் ஹிரோக்கள் வாழ்க்கையில் இது ஒரு விதமான Occupational Hazardன்னு நினைந்து கொண்டான்.  இந்த கழுகுகளுக்கு கூர்மையான கண்களை கொடுத்து, அதற்கு உயரமாக பறக்கும் ஆற்றலையும் கொடுத்து, ஊரில் உலகில்  நடக்கும் எல்லா கருமங்களையும் பார்க்குபடி செய்துவிட்டதே இந்த இயற்க்கை என நொந்து கொண்டான். இதெல்லாம்  பார்த்து விட்டுதான் கண்ட மண்ட என திட்டி கொண்டு போகுதா. . இப்படியாக பிம்பங்களின் நடுவில் அவன் எதிர்பார்த்த விபரம் கிடைத்தது.



        பிங்கோ என சொல்லி, அதுக்குள் சென்றான். அது இருக்கும் டைம் லைனை வைத்து பார்த்து, கழுகின் பறக்கும் வேகத்தை கணக்கில் கொண்டு, தண்டாவாளம் சேதபடுத்தப்பட்ட இடம் இன்னும் 50 மைல் தூரத்தில் இருக்குமென கணக்கிட்டான்.
       

   இனி இங்கிருந்து அங்கு எப்படி செல்ல, கழுகின் மெமரி பதிவுகளை பார்த்து எங்கே நாமும் அப்படிப்பட்ட காட்சிகளை பார்க்க வேண்டி வருமோ? என என்னி, மண்ணுக்குள் பயணம் செய்ய முடிவு செய்தான்.

         இது வரை யாருக்கும் தெரியாத ஏன் டிஸ்கவரி சானல், ஜாக்ரபி சானலிலும் கூட சொல்லப்படாத ஒரு மிருகத்தை பற்றி இங்கு சொல்ல வேண்டி உள்ளது. இதுவே லியோ வைரகண்ணுவின் இன்றைய வாகனம். இந்த மிருகத்திற்க்கு இதுவரை யாரும் பெயர் வைக்கபடவில்லை, ஏனென்றால் பெயர் சொல் வினைசொல்லுக்கு பிறகுதான் கண்டுபிடிக்கபட்டதாம், பெயர் சொல் மனிதனின் மொழியாகத்தான் இருக்கவேண்டும் ஆனால் வினை சொல்லோ தேவ மொழி. வினைகளை உருவாக்கியவன் அவன் அதற்க்கு பெயர் வைத்தது நாம்.  இதுவரை யாருக்குமே தெரியாத விலங்கிற்க்கு எப்படி பெயர் இருக்க முடியும். வினைசொல் மட்டுமே இந்த உலகில் இருந்தால் நிறைய பிரச்சனைகளுக்கு ஏளிதாக தீர்வு கிடைத்திருக்கும். பெயர்சொல் இருப்பதாலே நாம் வினைகளை பார்க்காது பெயர்களை பிடித்து தொங்கிகொண்டிருக்கிறோம். பெயர்களை தாண்டி வினைகளுக்குள் செல்லவே முடிவதில்லை.  கண்டிப்பா வினை சொல்லுதான் முதலில் தோன்றிருக்க முடியும்.  வாசிக்கும் உங்களுக்கு என்னா தத்துவம்டா என நினைத்தால் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆனால்  நீங்கள்  சொல்லும்  நபர் டிக்ஸ்னரி ஆஃப் கசார் படித்திருக்கும் பட்சத்தில் இது அங்கிருந்து சுட்டது என தேவையில்லாமல் சண்டைக்கு வரலாம், ஜாக்கிரதை.


           சரி நம்ம விலங்கிற்க்கு வருவோம், அக்ட்சுவலா இது விலங்கே அல்ல, இது மட்டுமல்ல  நாம் விலங்கு என சொல்லுவது அனைத்தும். உன்மையிலே ஆதி மனிதர்கள் கண்டுபிடித்த இயந்திரங்கள்தானாம், ஆதி மனிதனின் இயந்திரம் இன்றளவுக்கும் பழுதின்றி ஓடிக்கொண்டிருப்பதை விஞ்ஞான மூளை ஏற்றுகொள்ளுவதில்லை ஆதாலால் அதை கடவுள் படைத்தார் என சொல்லி கொண்டிருக்கிறார்கள். இந்த ரகசியத்தை புண்ண்ணைக்காயல் கடல் குகையில் அவனது மோதிரம் சொல்லி கொடுத்தது.


          இந்த ஆதி மனிதனின் இயந்திரமான மன் விழுங்கியை பிடித்தான் பியோ, மன் விழுங்கி எந்த மன்னுக்குள் இருக்கின்றதோ அதே நிறத்தில் இருக்கும், அது மிக வேகமாக மன்னில்  நிச்சல் அடிக்க கூடியது. அதை பிடித்து மண்ணுக்குள் சென்று, அது மண்ணை அதனுள் உள்ளே விழுங்கி அதன் பின்புறம் வழியாக துப்ப துவங்கியது, துப்பும் எதிர் விசையின் காரணமாக அது முன்னே செல்ல ஆரம்பித்தது, மிக வேகமாக அது மண்களி குடைந்து ( பழக்க தோசம்), மண்ணை தின்று பேண்டு முன்னேறியது. போகும் வழியில் சில கல்லரைகள் வழியாக சென்றது எல்லோரும் சந்தோசமாக இருப்பதாகவே பட்டது, லியோ வைரக்கண்ணுவிற்க்கு.
      இரயில் தண்டவாளத்தை சதி செய்து அந்த முன்று மீட்டர் நிள கம்பி மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பதை பார்த்த லியோ அதை கையோடு  எடுத்து கொண்டான், குறிப்பிட்ட இடம் வந்தது மன் விழுங்கியின் ஆசன தூவாரத்தை கையால் மூட அது வேகம் குறைந்து நின்றது, மண்ணிலிருந்து வெளியே வந்து கையில் வைத்திருந்த  தண்டவாள துண்டை பொருத்தி சரி செய்தான் லியோ. இரயில் அவனை கடந்து சென்றது ஆபத்தின்றி.
     சாப்பிட்டுவிட்டு மிஞ்சிய குடல் ஃப்ரை, இரல் ரோஸ்ட் போன்ற அய்டங்களை கேரி போக்கில் போட்டு அதை இரயிலிருந்த ஒருவன் தூக்கி எறிய அது வைரக்கண்ணுவின் முஞ்சில் சபக்கென கொட்டியது. ஷிட் என சொல்லி முகத்தில் வழிந்த ஷிட்டுகளை துடைத்துகொண்டிருந்தான். அப்போது மோதிரம் சினுங்கி மெசேஜை காட்டியது.

       சூப்பர் லியோ – நினைத்ததை விடவும் சிறப்பா செய்கிறாய். அவர்களும் கூட உனக்கு பரிசாக நான் நினைப்பதைவிடவும் சிறப்பாக செய்கிறார்கள். வாழ்த்துக்கள். இப்படிக்கு உன்னை படைத்த இருட்டுயோலி.

         யாரு இந்த  இருட்டுயோலி இவனுக்கும் எனக்கும் என்ன உறவு. இவனை எப்படி பார்க்க, இந்த இருட்டுயோலியிடமே தன்னை பற்றிய எல்லா விபரங்களும் கிடைக்கும் என்று நம்ப துவங்கினான், அவனை கண்டுபிடிப்பதே அடுத்த வேலை என நினைத்துகொண்டு மண்விழுங்கியை பிடித்து மண்ணுக்குள் சென்றான். 10 வயதில் அந்த தாமிரபரணீ கரையோற கிராமத்தில் இருந்த செல்போன் டவரில் கட்டப்பட்ட நினைவின்றி கிடந்த தருனம் நியாபகத்தில் வந்தது அவனுக்கு. நான் யார்? நான் யார்? என முனு மூனுத்து கொண்டே இருந்தான்.

 சாகசங்கள் தொடரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment