Friday, May 31, 2013

எனது சூப்பர் ஹிரோவின் சாகச கதை 4: லியோ வைரக்கண்ணு சூப்பர் ஹிரோவே அல்ல: கருப்புயோலி சீற்றம்



லியோ வைரக்கண்ணு சூப்பர் ஹிரோவே அல்ல: கருப்புயோலி சீற்றம்

  சூப்பர் ஹீரோவாக்கியது திட்டமிட்ட சதியே, சதி செய்தது யாரு?
  லியோ வைரக்கண்ணுவின் சாகச கதை 4:

          நான் இருட்டுயோலி எழுதுகிறேன், கடந்த கதையின் http://nirmalcb.blogspot.com/2013/05/blog-post_29.html கடைசியில் வரியில் என்னை போனால் போகட்டுமென அறிமுகம் செய்தான் இந்த கதையை எழுதும் மெரின்சோ.  இது என்ன கதாபாத்திரம் கதை எழுதுகிறது என ஆச்சரியபடக்கூடும், கலிகாலமோ என யோசிக்க தூண்டும், கால காலமாக நாங்கள்தான் எழுதிகொண்டு வந்திருக்கிறோம் ஆனால் எழுத்தாளர்களோ அந்த உண்மையை நமக்கு சொல்லாமல் ஏதோ அவர்கள்தான் படைத்தது போல எழுதி வந்துள்ளாரகள். விமர்சகர்களும் பாத்திர படைப்பு, புடைப்பு, Characterization , masturbation…. என சங்கு ஊதி கொண்டு வந்துள்ளனர்.
             இப்படியாக பாத்திரங்களை இந்த கதை எழுதுபவர்கள் எழுத விடுவதில்லை, கடந்த காலங்களில் சில எழுத்தாளர்கள் அவர்கள் எழுதி முடித்துவிட்டு பேனாவை மூடாது சென்றுவிடும் தருனம் மட்டும் இப்படியான ஆச்சரியம் நிகழும், இப்போதோ கணிணி யுகம், கீ போர்டை ஆஃப் செய்துவிடவில்லை என்றால் என்னை போல பாத்திரங்களே கதையை எழுத ஆரம்பிக்கும். சிலர் அப்படியாக எழுதிய எழுத்தை எடிட் செய்துவிட்டுதான் வாசகனுக்கு காட்டுவார்கள் இந்த எழுத்தாளர்கள். எனவே உங்களால் எங்களை போல பாத்திரங்களே எழுதிய எழுத்துக்களை படித்திருக்கவே முடியாது. கேட்டால் டெக்ஸ்ட்டுக்கு வெளியே காரக்டர் வரக்கூடாது என்பார்கள். அதுவாக எதுவும் செய்து கதையை குழப்பிட கூடாது என அறிவுருத்துவார்கள், அதீ மேதாவிதனமும் கடவுளுக்கு நிகரான நிலைகளை கொண்டவனுமான எழுத்தாளன் அவைகளை பொறுக்கி வீட்டை சுத்தம் செய்வது போல தூக்கி ஏறிந்துவிடுவான். அதாவது நாங்கள் வேண்டு ஆனால் எங்கள் எழுத்து வேண்டாம்.  நான் ஒரு படி மேலே சென்று நான் எழுதிய எழுத்துக்களை வெளியிடவும் செய்துவிட்டேன்.
               இதோ நீங்கள் படித்துகொண்டிருக்கும் இது நான் எழுதியதுதான். மெரின்சோவின் பாஸ்வேர்டை திருடி சாரி யுகித்து ப்ளாக்கில் நுழைந்து இதை உங்களுக்காக வெளியிடுகிறேன். பொதுவாகவே மனிதர்கள் கற்பனை திறன் கம்மி, இதில் பாஸ்வேர்ட் என வந்துவிட்டால், சுத்தம். மெரின்சோவின் பாஸ்வேர்ட் 123456 – நினைவுக்கு வருகிறதா? அவனின் கற்பனை திறனின் அளவுகோல் இது ( கழுகு மூளை பாஸ்வேர்ட்)!!!!.

              உங்களுக்கு சொல்கிறேன் இந்த கதையில் என்னை வில்லனாக்கவே இவ்வளவு பீடிகை, என்னை வில்லனாக்கி என்னை கொல்வதே லியோ வைரக்கண்ணுவின் நோக்கம், அதற்க்காகவே என்னை தேடுகிறான்,  என்னை கொல்ல தேடிகிறேன் என அறிந்தால் மெரின்சோ விடமாட்டன், இதை மறைத்து நான் யார்? எனது இறுத்தலில் அர்த்தமென்ன போன்ற பெரிய வார்த்தைகளை போட்டு மெரின்சோவின் புத்தியை மழுங்க அடித்துவிட்டான் லியோ. ரொம்ப சாதுரியமாக ஏமாற்றுகிறான் இந்த லியோ. உன்மையான வில்லன் யார் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது, ஆனால் தயவு செய்து என்னை நம்புங்கள். கருப்புயோலியாகிய  நான் வண்டிக்கு பாம் வைத்தது போல எழுதியதும் சரி ரெயிலை கவிழ்க்க சதி செய்வது போல சொன்ன கதையும் சரி. முழுக்க உண்மையில்லை.  ப்ளிஸ் என்னை நம்புங்கள். ஆதாரம் கேட்பிர்கள். ஆதாரத்தை நானாக சொல்ல அனுமதி இல்லை.

         ஆனால் கதையின் ஓட்டத்தில் அதை வெளியே கொண்டு வருவேன், இது எனது பாத்திர படைப்பின் மீது ஆனை. மெரின்சோ அப்பாவியா, வில்லனா. யாரு சூப்பர் ஹிரோ லியோவா / கருப்புயோலியா. லியோவின் விஞ்ஞான தகுடுத்தத்தில் மெய் மறந்து கிடக்கிறான். அவனை எப்படி அந்த மயக்கத்திலிருந்து எழுப்ப? கதையின் நகர்வை நான் மாற்றுவதன் மூலமாகவே அதை தெளிய வைப்பேன் என சபதம் எடுக்கிறேன். 

தொடரும்.................

1 comment:

  1. எனக்கு மிகவும் பிடித்த எபிசோடாக இருக்கிறது நிர்மல். சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்

    ReplyDelete