நீங்கள் இந்த கதைக்கு கண்டிப்பாக கதா நாயகியை அறிமுகபடுத்த வேண்டும், காதல்
இருந்தால் இன்னும் நல்லா வரும்.
பதில்:
ஆமாம் ஆசைதான், ஒரு அம்மா, இரண்டு
தங்கைகள், ஒரு மனைவியென வாழ்ந்த மிடில் க்ளாஸ் மனிதன் அவனுக்கு தெரிந்தவற்றை வைத்து காதல் கதை சொன்னால், தமிழ் பட காதல்
கதையாகதான் இருக்கும், டையலாக் எழுத தெரிந்தவன், தமிழை பிழையின்றி எழுத தெரிந்தவன்,
கோர்வையாக வாக்கியம் எழுத தெரிந்தவன், நடிக்க தெரிந்தவன், பெண்ணிய போராளி, கேமராவை
பிடிக்க தெரிந்தவன், வர்க்க போராளி, சினிமா எடுக்க தெரிந்தவன் ஆகியோர் படைத்த ஆக்கங்கள் காதலை அவமானபடுத்தியது போதாதா?
மேற்கூறிய திறன் இருந்தால் மட்டும் போதும் காதல் கதைகள் சொல்ல, அது எவ்வளவு
போலியாக இருந்தாலும் சரி என்றுதான் கடந்த 50 வருடங்களாக காதல் கதை என்கிற பேரில்
பார்த்தவைகள், படித்தவைகள், என்பதை மட்டும் மெரின்சொவின் கருத்தாகி இருந்தது
வெகு நாளாக.
இப்படியாக எந்த திறனும் இல்லை என்கிற
காரணத்தாலும், போலி தலைக்கணமும், வறட்டு திமிர்த்தனமும், ஒழுக்கமான மிடில்க்ளாஸ் ஜெண்டில் மேன்
வாழ்க்கையை வாழ்ந்தவனான மெரின்சோ காதல் கதை சொன்னால் அது இந்த சாகச கதையை விடவும்
மொன்னையாக இருக்கும் என்பது உண்மையிலும் உண்மை, எனவே இந்த வேண்டுகோளை நிராகரிக்க
வேண்டியுள்ளது.
ஆணின் உலகில் அம்மாவும் தங்கையும் மனைவியையும் தவிர எந்த பெண்களும் இல்லாத
இருப்பின் கதையில் மட்டும் என்ன பெண்ணின் தேவை.
அப்படிப்பட்ட தேவை இந்திய கலைபடைப்புகளில் இருக்க வேண்டிய அவசியமே அது
நிஜத்தில் இல்லை என்கிற நிலையால் வருவதுதான் என்பதை தெரிந்து கொண்டதால், காதலுக்கு
மதிப்பளித்து தெரியாதவற்றிலிருந்து விலகி இருந்து அதற்க்கு மதிப்பளிக்கும் முடிவு செய்துள்ளான்.
காதல் பற்றிய படைப்பை படைக்க ஒரு வித பித்த நிலை வேண்டும். அது இந்த
ஜெண்டில்மேன் லைஃப் ஸ்டைலில் சாத்தியமில்லை.
மெரின்சோ
No comments:
Post a Comment