Wednesday, June 12, 2013

எனது சூப்பர் ஹிரோவின் சாகச கதை 6: the Author is Dead.

எனது சூப்பர் ஹிரோவின் சாகச கதை 5: the Author is Dead.
  
     இதை வாசிக்கும் முன் முதல் நான்கு கதைகளை வாசிக்கவில்லை என்றால் இந்த சுட்டிகளில் வாசிக்கலாம், வாசிக்காமலும் இருக்கலாம், அது உங்க இஸ்டம்:


           எனது பாஸ்வேர்டை திருடி, இல்லை யூகித்து அவனது கருத்தை சொல்லிவிட்டான் கருத்துயோலி, அவன் எழுதியது சரிதான் அவனை வில்லனாக்கவே அவனை கொண்டுவந்தேன்.  ஒரு ஸ்ட்ராங் அண்டி ஹிரோ இருந்தால்தான் லியோ வைரக்கண்ணுவை இன்னும் சிறப்பாக காட்டமுடியும், அதுவே எனது கதையை விறுவிறுப்பாக செல்லவும் சாகசம் நிறைந்ததாகவும் ஆக்கும் என நம்பினேன், அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டான்.   நமது இதிகாச நாயகர்களும் சூப்பர் ஹிரோக்களும் வீட்டின் பூஜை அறையில் சிறைவாசம் புரிவதால், நமது ஊருக்கென்று ஒரு சூப்பர் ஹிரோ வேண்டுமெனும் நல்ல  நோக்கத்தில்தான் இந்த சூப்பர் ஹிரோ கதையை ஆரம்பித்தேன், இப்போது, அந்த ஆசையை பெட்ரோல் ஊத்தி கொளுத்திவிட்டான் கருப்புயோலி.

           இந்த கருப்புயோலி எனது நோக்கத்தை கண்டுபிடித்து விட்டான். இந்த கதை தொடர இருந்த இடத்திலிருந்து 90 டிகிரி கோணம் திரும்பி பயனிக்க வைத்துவிட்டான்.  இது எழுத்தாளனுக்கு ஏற்ப்பட்டிருக்கும் மிக இக்கட்டான சூழல், அவனே சிருஸ்டிகர்த்தா எனும் தளத்தை தகர்க்க முயற்ச்சி செய்யும் இந்த கதையின் கதாபாத்திரம். இந்த பாத்திரம் சொல்லவரும் கதை நான் நினைத்த கதையை மாற்றுகிறது. எனது படைப்பாற்றல் கேள்விக்குரியதாகிவிட்டது. இதை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென தெரியவில்லை. இதை நிகாரித்துவிட்டு எனது போக்கிலே தொடரவா, இல்லை அவனை ஆசிரியனாக ஆக்கிவிடலாம, தெரியவில்லை இந்த இரண்டு முடிவுகளுக்கு இடையில் இருக்கும் மற்றும்மொரு முடிவினை எடுக்க முடிவு செய்ய முடிவு செய்துள்ளேன். சிருஸ்டிக்கும் வேலையை விட்டுவிட்டு தொகுப்பாளானக மாற முடிவு செய்துவிட்டேன். இதன் மூலம் படைக்கும் ஆற்றலை வாசகனிடம் விட்டுவிட்டு, வெறும் தொகுப்பாளனாக முடிவு செய்துவிட்டேன்.

          இந்த கதைக்காக நான் எடுத்து வைத்திருந்த குறீப்புகளை இங்கே தொகுத்து தர முடிவு செய்துவிட்டேன், யார் சூப்பர் ஹிரோ என்பதை அந்த குறிப்புகளை உள் வாங்கி வாசிக்கும் வாசகனே முடிவு செய்துகொள்ளட்டும். From Now on - The Author is Dead.

      வாசிக்கும் நீங்களும் கூட உங்களுக்கு தெரிந்த குறிப்புகள் இருந்தால் அனுப்பலாம். 

 தொடரும்....


No comments:

Post a Comment