Friday, June 14, 2013

எனது சூப்பர் ஹிரோவின் கதை -7: குறிப்புகள்


எனது சூப்பர் ஹிரோவின் கதை -7: குறிப்புகள்

       Author is dead என ஆனப்பிறகு கதைக்கான குறிப்புகளை சொல்லுவதாக முடிவெடுத்து, எடுத்த குறிப்புகள் உங்கள் பார்வைக்காக. 

 லியோ வைரக்கண்ணுவை பற்றி அவன் இருந்தாக சொல்லப்படும் கோவில் ஆவனங்களில் கண்ட குறிப்புகள்:

                     அப்போது அவனுக்கு வயது 18, ஊரின் ஓரத்தில் செல் போன் டவரில் கட்டிபோடப்பட்டிருந்தாகவும், சில சமயம் அவன் பைத்தியக்காரன் போல ஆகிவிடுவதாகவும் அதனால் ஊரில் நிறைய பிரச்சனைகள் ஆகின்றது எனவும், இனி இவனை இந்த ஊரில் வைத்திருந்தால் தாங்காது என கருதி, இந்த கோவிலில் சேர்ந்து அவனை குணப்படுத்த வேண்டி சேர்ந்தனர். மிகவும் ஆக்ரோஷமாக இருந்து கொண்டிருந்தான் அவன். அவன் திடிர் திடிரென மிகுந்த பலம் கொண்டு சீறுவான், அப்படியான நிலையை அடையும் போது அவனது கண்களின் கரு விழி அவனது வெள்ளை நிறத்தோடு கலந்துவிடும். அதிலிருந்து விசித்திரமான ஓளி வெள்ளம் பெருக்கெடுக்கும். அதனால் அவனது கண்களை கட்டிப்போட்டோம். அது  நல்ல பலனை தந்தது. கண்கள் கட்டப்பட்டு, ஓளியின்றி இருந்துவந்தான், அவனின் மொட்டை முடிகளின் உள் புறத்திலிருந்து லேசர் கதிர் போல ஓளி விச ஆரம்பித்திருந்தது,

  தலையில் இருந்து விசும் ஓளி இரவில் பார்க்கும் போது பெட்ர்மாக்ஸ் லைட் மேண்டிலை தலையில் கவிழ்த்தது போல இருக்கும். – என அந்த குறிப்பில் இருக்கிறது.
       பிறகு  அவனது ஓளி விசும் மொட்டை தலைக்கும் தலப்பாகையை கொண்டு முடினார்களாம். கண்களிலும், தலையிலும் விசிய ஒளிகள் அவனது உடல் முழுக்க பரவ ஆரம்பித்தது, ஒரு வித ஓளி ஆடையை அவன் உடுத்தியது போலவே காட்சி அளித்தான். பிறகு சில காலம் கழித்து அவனை காலையிலும் மாலையிலும் மட்டும் கண்களின் கட்டுகளை அவிழ்த்தோம். கண்கள் அமைதியாகவும் தீர்கமாகவும் இருப்பதாக உணர்ந்தோம். இவ்வாரு அவன் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்க ஆரம்பித்தான்.இது கருப்புயோலியை பற்றிய குறிப்பு:
               கருப்புயோலியை பற்றிய இந்த குறிப்பு அந்த ஊர் மக்களிடம் இருந்து எடுத்தது. இந்த ஊரில் பிறந்த கருப்புயோலி, மிகவும் கடின உழைப்பாளி, சிறு வயதிலிருந்தே வேலைக்கு செல்லும் கட்டாயம் இருந்தபடியால், அவனும் ஊரில்கிடைக்கும் சிறு சிறு வேலைகளுக்கு சென்று வருவான். அப்போழுதுதான் அவர்கள் ஊரில் செல் போன் டவர் ஒன்றை நிறுவும் வேலை நடந்தது, இவனும் அந்த வேலையில் சேர்ந்தான். சிறுக சிறுக கட்டப்பட்ட செல் போன் டவர் இறுதியில் முக உயர கோபுரமாகியது. பிரமிக்க வைக்கும் அந்த உயரம் கருப்பு யோலிக்கி ஆச்சரியமும் அந்த உயரமான கோபுரத்தின் உச்சியை அடைந்துவிடவும் தோனியது. செல் போன் டவர் நிறுவிய பிறகு அதை செயல்பட ஆரம்பித்தபிறகு ஒரு  நாள், அதன் மீது ஏறினானாம். மேலே சென்றவன் இன்று வரை கிழே வரவில்லை. கீழ் இருந்து பார்த்தவர்கள், அவன் தீடிரன்று கத்தியதாகவும், அதை தொடர்ந்து பீங்….பீங்…….. என  பற்க்களும் காதுகளும்க் கூசும் அளவுக்கு ஒரு விதமான ஓலியை கேட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அவன் மேலயும் இல்லை, கிழயேயும் வரவில்லை. அந்த ஊர் மக்கள் இன்றுவரை அவன் அங்கு சாமியாக இருக்கிறான், இந்த ஊரை காக்க என சொல்லிகொள்கிறார்கள். அந்த செல்போன் டவரில் கட்டப்பட்டு இருந்துதான் இந்த லியோ வைரக்கண்ணையும் கண்டுபிடித்தார்கள். இன்று வரை இந்த கருப்பு யோலியை யாரும் கண்டது இல்லை, அவனை  டவர் சித்தன் என்றும் டவர் சாமியென்று நம்புகிறார்கள். சிலர் அவனை செல்போன் டவரில் இருக்கும் மைக்ரோவேவ் ஜெனரெட்டரிலிருந்து வெளிவரும் கதிர்விச்சில் கலந்து போயிருப்பான் என்றும் நம்புகிறார்கள்.

  இந்த குறிப்பை பற்றிய மெரின்சோவின் கருத்து: 
                          இந்த குறிப்பை வாசித்தபிறகு எதை நம்புவது என தெரியவில்லை. யார் எப்படிப்பட்டவன் யார் சாமி, யார் கெட்டவன் எனறும் புரியவில்லை. இப்போதிக்கு உருவம் அற்றவன் கருப்புயோலி, உருவம் உள்ளவன் லியோ வைரக்கண்ணு. ஒருவேளை கருப்புயோலி எனும் சாமியின் பக்த்தனாக இருந்த லியோவிற்க்கு அற்ப்புத சக்தி அளித்து அவனை உருவாக்கிருக்கலாம்.  இல்லையென்றால் கதிர் வீச்சில் அலைக்கற்றையாக மாறிய கருப்புயோலியின் திடப்பொருள் வடிவம் லியோவாக இருக்கலாம்.
 இவர்கள் ஏன் இப்படியாக இருக்க வேண்டும், இவர்களின் தேவை என்ன என்பதை எப்படி இந்த கதாபாத்திரங்களுக்கு தெரியாதோ அதுபோலவே எனக்கும் தெரியாது.
          கருப்புயோலி செல்போன் கதிரியக்கத்தினால் அலைகற்றையாக மாறி பல சாகஸங்களை செய்திருக்கலாம் ஆனால் அவனை யாரும் உணராமல் போகவே ஊரில் கிறுக்கனாக திரிந்த லியோ வைரக்கண்ணுவை பிடித்து அவனுள் அவனின் சக்தியை அளித்து சாகசங்களை தொடர்கிறான் எனவும் வைத்துக்கொள்ளல்லாம்.
   
    யோசித்து பார்த்தால் இதுதான் உலகத்திலே அதி பயங்கர சஸ்பன்ஸ் தொடராக இருக்கும்போல, என்ன முடிவு, என்ன ஆகப்போகுது என்பதை வாசகன் மட்டுமெல்ல எழுதுபவனுக்கு கூட தெரியாது போலயே?.
                  இது கதையின் போக்கை மாற்றி ஆமைந்துகொண்டே இருக்கிறது, எனென்றால் இது ப்ளாக் கதை தொடர். ரியல் டைமில் எழுதும் தொடர் கதை, இந்த கதைக்கு கிடைக்கும் பின்னுட்டம், விமர்சனங்கள் கூட கதையின் போக்கை மாற்றும். அப்படிப்பட்ட விமர்சனம் ஒன்றை உங்கள் பார்வைக்கு, 
            http://verppulukkal.blogspot.in/2013/06/blog-post_13.html

 இது பாலா எழுதியது, இந்த விமர்சனம் எப்படியாக மாற்ற போகீறது எனபதை பொருத்து இருந்து பார்ப்போம்.

           உங்களுக்கு இந்த இருவரை பற்றிய குறிப்புகள் கிடைத்தால் அனுப்புங்கள் அது கூட மாற்றலாம். அல்லது மாற்றி எழுதிக்கொள்ளல்லாம் – ” மாற்றி எழுதிக்கொள்ளலாம்” எனும் பதத்தை எழுதி முடித்ததும் கலக்கிட்டா மெரின்சோ என சொல்லிக்கொண்டான்.
        

மாற்றங்கள் தொடரும்………

No comments:

Post a Comment