லேண்ட் க்ருஸரும் ( Land Cruiser) கத்தார் இந்தியர்களும்:
பத்து வருடங்களுக்கு
முன்பு கத்தார் வந்த போது பார்த்து அசந்து போனது இந்த லேண்ட் க்ருஸரை பார்த்துதான்.
அப்ப இந்தியாவில் எனக்கு தெரிஞ்ச பெரிய வண்டி க்வாலிஸ், அதை விட பெரியதாகவும் வேகமாகவும்
போகும் இந்த லேண்ட் க்ருஸர் டோயோட்டா கம்பேனியின் SUV மாடல் கார்.
கத்தாரில்
அதிகம் கானப்படும் வாகனங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள அரேபியர்களின் விருப்ப வாகனம் இது.
பெரியதாக இருந்தாலும் அதன் தோரனை அம்சமாக இருக்கும் லாரி மாதிரியெல்லாம் பப்பரபன்னு
இருக்காது, கைகளுக்குள் அடங்கியது போலவேம் தோன்றும் ஆனாலும் பெரிய வாகனமே. இதன் வேகம் அசரவைக்கும். இது ஆஃப் த ரோட்டுக்கு ( Off the
Road) ஏற்ற வாகனமும் கூட, பாலைவனத்தில், மேடு பள்ளமான இடங்களில் சர்வ சாதாரனாமாக செல்லும்.
ஆனாலும் இதில் பயணம் செய்வது சொகுசாகவும் இருக்கும்.
வழி நெடுக
சிக்னலுக்காக பல வண்டிகள் ரோட்டில் காத்திருக்கும் போது, ரோட்டை விட்டு இறங்கி புழுதி
பறக்க குண்டும் குழியுமான மன்/கல் ரோட்டில் எல்லா வண்டிகளையும் முந்தி கொண்டு சென்று
சிக்னலின் அருகில் வந்து நிற்க்கும். கத்தார் நாட்டினர் அல்லாதவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் மத்தியில் இந்த லேண்ட் க்ருஸருக்கு என தனி மரியாதையும் அதன் பேரில் பயமும் உண்டு.
லேண்ட் க்ருஸரை
பற்றி சொல்லும்போது அரபிகளின் ட்ரைவிங் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ரொம்ப வேகமாகவும்
துனிச்சலாகவும் ஒட்டுவதில் அரபியர்களுக்கு ஈடு அவர்களே. வாகனம் ஓட்டுவதை சிறு வயதிலிருந்தே
Passion ஆக வைத்துருப்பவர்கள். அவர்களின் கைகளில்
இந்த லெண்ட் க்ருஸர், அப்புறம் என்ன அதகளம்தாம். அவர்கள் சிந்தனை செயல்களில் ரொம்ப குழ்ப்பமெல்லாம் கிடையாது, இதுவும் வாகனம் ஓட்டி ஓட்டி பழகிய பழக்கவழ்க்கமும் அவரகளது கார் ஓட்டும் திறனுக்கு காரணமென நினைக்கிறேன். Keep it simple.
சரி விஷயத்திற்க்கு
வருவோம். பத்து வருடத்திற்க்கு முன்பு கத்தாரில் இருக்கும் இந்தியர்களில் மிக மிக சிலரே
லேண்ட் க்ருஸர் வைத்திருந்தார்கள். லேண்ட் க்ருஸர் ரோட்டில் வருகிறதென்றால் கண்டிப்பாக
அதை ஓட்டிவருவது கத்தாரியாகதான் இருக்கும், இல்லை அது இந்தியராக இருந்தால் அந்த இந்தியர் வண்டியின் ஓட்டுனராக பணி செய்பவராக இருப்பார்.
இன்றும் இங்கு வாழும் இந்தியர்களும் கூட லெண்ட் க்ருஸரை வாங்கி பயன்படுத்திகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு டயோட்டோ கோரோலா அல்லது நிசான் சண்ணி இதுவே இந்தியர்களின் விருப்ப வாகணம், ஆனால் இன்று இந்த நிலை மாறி . லேண்ட் க்ருஸர், போன்ற SUV வாங்கி கலக்கிறார்கள். இந்த நாட்டில் லேண்ட் க்ருஸர் ஒருவனுக்கு அளிக்கும் முகவரி அலாதியானது. மேலும் அந்த வண்டியின் பயணமும் சுகமான அனுபவமே. அப்புறம் முக்கியாமானது ரீ சேல் வேல்யு. அவ்வளவு பழசானாலும் இதற்க்கு மார்க்கட்டில் நல்ல ரேட். இந்தியர்கள் இதை வாங்குவதற்க்கான முக்கிய காரணம் இது.
புதுசா லேண்ட் க்ருஸர் வாங்கிய எனது நன்பரின் கதையோ சற்று வித்தியாசமாக இருந்தது. ஒரு நாள் அவர் பார்க்கிங்க் செய்துவிட்டு காரிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அங்கிருந்த ஒரு ஆள் அவரை பார்த்துவிட்டு யாரு இந்த வண்டியின் ஓனர், நல்ல மனிதர் போலயே, ட்ரைவருக்கெல்லாம் நல்ல ட்ரஸ் கொடுத்திருக்கிறார் என சொல்லிருக்கிறார். இதை சொன்ன ஆள் இன்னோரு லேண்ட் க்ருஸரின் ட்ரைவர். அவர் இவரையும் ட்ரைவராக நினைத்து பேசிருக்கிறார். அடுத்த ஒரு மாதத்தில் நன்பர் வண்டியை விற்றுவிட்டு, கொரோலா வாங்கிவிட்டார்.
இப்படி கஸ்டப்பட்டு காசு போட்டு வண்டிய வாங்கினாலும் இங்குள்ள அரபியர்களிடம் உள்ள எண்ணம் இந்தியர்கள் லேண்ட் க்ருஸர் வாங்க மாட்டார்கள் என்பதுதான் அல்லது வாங்க முடியாது என்பதுதான், எனவே இந்தியன் ஓட்டி வரும் வண்டி கண்டிப்பாக அவர் வேலை செய்யும் அரபியனதாகதான் இருக்கும் என நினைத்துகொள்வார்கள். இந்த ட்ரைவர் பிம்மத்தை உடைக்கவும், வண்டியின் ஓனர் என நிறுவதற்க்கு படாதபாடு படுகிறார்கள். குறிப்பாக உடை. - கோடு போட்ட ஃபுல் கை சட்டை போடுவதில்லை, கண்களில் எப்போதும் கண்ணாடி அனிந்து கொள்வது, புகை பிடித்து கொண்டும், செல் போன் பேசிக்கொண்டும் வண்டியை ஓட்டுவது, வண்டியின் பின்புறத்தில் சிறிய இந்திய கொடி ஸ்டிக்கர் ஒட்டிகொள்வது, கோர்ட் போட்டு கொண்டு ஓட்டுவது, என பல......
இதை பற்றி எனக்கு தெரிந்த அரபியிடம் கேட்டேன், அவனும் ஆமாம் அதுதான் பெரும்பாலான அரபிகளின் நினைப்பு என்றான். மேலும் இந்த காரணத்தால்தான் நாம் இப்போது லெக்ஸசுக்கு மாறிவிட்டேன் என்றான். - புரியுதா?
லெக்சஸ் - டோயோட்டா லேண்ட் க்ருஸரின் ராஜ பரம்பரை வாரிசு. லேண்ட் க்ருஸரை காட்டிலும் இன்னும் விலை அதிகம் அதன் ஆற்றலும் அதிகம். கிழே உள்ள படத்தில் இருப்பது Lexus.
எப்படியோ ஸ்டேட்டஸ் மெயிண்ட்டேன் பன்னுவதன் பொருட்டு டயோட்டோ நிறுவனத்திற்க்கு நல்ல விற்ப்பனைதான்.
nice post nirmal.... really Land cruiser is an excellent one and same also for NISSAN PATROL OLD AND NEW NISSAN ARMADA
ReplyDeleteYes , they are the best drivers. Daring and Fast.
Delete