Saturday, June 15, 2013

எனது சூப்பர் ஹீரோ கதை 8: லியோ வைரக்கண்ணுவின் ஆளுமை - வாசகர் கடிதம்

எனது சூப்பர் ஹீரோ கதை 8:  லியோ வைரக்கண்ணுவின் ஆளுமை - வாசகர் கடிதம்

      இதுவரை


  1.    http://nirmalcb.blogspot.com/2013/05/1.html 
  2.   http://nirmalcb.blogspot.com/2013/05/blog-post_25.html 
  3. http://nirmalcb.blogspot.com/2013/05/blog-post_31.html 
  4. http://nirmalcb.blogspot.com/2013/06/blog-post.html 
  5. http://nirmalcb.blogspot.com/2013/06/blog-post.html
  6. http://nirmalcb.blogspot.com/2013/06/5-author-is-dead.html
  7. http://nirmalcb.blogspot.com/2013/06/7.html


 அன்புள்ள மெரின்சோ
                  உங்களின் சூப்பர் ஹிரோ கதை முயற்சியை பார்த்தேன், பிடித்திருந்தது.  நானும் எனது சூப்பர் ஹிரோ உருவாக்குவதில் தோல்வி அடைந்துவிட்டேன், உங்களின் தோல்வியை இப்போதே என்னால் உணர முடிகிறது.  தோல்வியுற்றால் சிக்கிரம் இந்த தொடரை நிறுத்திவிட்டு வேறு வேலை பார்க்கலாம் என தோன்றும். நிறுத்துவதும் தொடருவதும் உங்கள் விருப்பம். இருந்தும் ஒரு சூப்பர் ஹிரோவின் ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என உங்களுக்காக நான் செய்த வரைபடம் கீழே உள்ளது.



                    உங்களின் வைரக்கண்ணு இப்படிப்பட்டவரா என தெரியாது ஆனால் இப்படி இருந்தால் மட்டுமே சூப்பர் ஹிரோவாக முடியும் என்பது எனது என்னம். இப்படிப்பட்ட ஆளுமை சாத்தியமா, அதை இந்த சமுகம் அனுமதிக்குமா, இந்த ஆளுமையோடு வாழும் சங்கடம் என்ன? போன்றவற்றை சொல்ல உங்களுக்கு அனுபவமும் அறிவும் இருக்கிறாதா என்று தெரியவில்லை. இருந்தும் ட்ரை செய்யுங்கள்.
                 பிறப்பிலே மட்டுமே சூப்பர் ஹிரோ சாத்தியம் என்கிற பாரம்பரிய சிந்தனையை தகர்த்து, ஏதோ கிறுக்கன் சந்தர்ப்ப சூழலில் சூப்பர் ஹிரோவாக்கியது என்னை அசைத்துவிட்டது. இதுதான் இன்றைய தேவை எனவும் படுகிறது. சூப்பர் ஹிரோவாக மட்டுமெல்ல சாதாரன மனிதனாக கூட இந்த ”பிறப்பு”  சார்ந்த உணர்வை அழித்து போட வேண்டுமென்பது எனது எண்ணம்.
                 எல்லாவற்றிர்க்கும் காரணம் வேண்டும், எல்லா விளைவுகள்  அர்த்தம் உள்ளது, அர்த்தம் இல்லாது ஏதும் இல்லை, காரிய காரணங்களோடு  மட்டுமே இந்த வாழ்க்கை அமைந்துள்ளது போன்ற சிந்தனை முறையை சந்தேகிக்கிறேன்.
      பிறப்புக்கும் இறப்புக்கும் அர்த்தம் கற்ப்பிக்கும் இந்த சிந்தனை முறை என்னை பொருத்தவரையில் கொழுப்பெடுத்த சிந்தனை என்பேன். இது பாலும் தேனும் ஓடும்  தேசத்தில் மட்டும்தான் தோன்றிருக்க வேண்டும்.

     இன்னும் உங்கள் கதை போக்கை வாசித்து எழுதுகிறேன்.

  இப்படிக்கு
  செ. தர்மகனேசன்
  தலைமை ஏட்டு
  தட்டார்மடம்

No comments:

Post a Comment