Monday, June 24, 2013

எனது சூப்பர் ஹிரோவின் கதை 9 : உங்களால் கண்டிப்பாக சூப்பர் ஹிரோவை உருவாக்க முடியாது. வாசகரின் கடிதம்.


 எனது சூப்பர் ஹிரோவின் கதை 9 : உங்களால் கண்டிப்பாக சூப்பர் ஹிரோவை உருவாக்க முடியாது.  பதிவர் நன்பர் பிச்சைக்காரன் கடிதம்.


 அன்புள்ள மெரின்சோ
             உங்கள் சூப்பர் ஹிரோ கதையை வாசித்தேன், உங்களது கதைக்கு உங்கள்  நன்பர் எழுதிய விமர்சனத்தையும் வாசித்தேன். ம்ம்ம்ம் என்ன சொல்ல. அந்த விமர்சனத்தின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிந்திருந்தது.
  
     "அந்த அசாத்திய துணிச்சல்தான் அவரை இந்த லியோ வைரக்கண்ணு என்கிற சூப்பர் ஹீரோ  கதாபாத்திரத்தை படைக்க உதவியிருக்கிறது.”
      ” தமிழில் இப்படி ஒரு யோசனை நிச்சயம் வரவேற்கத்தக்கது மற்றும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்று!”

                     இருந்தாலும்  உங்களின் சூப்பர் ஹிரோ முயற்ச்சி ஊத்திக்கிச்சி என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். இருந்தாலும் சொல்கிறேன் உங்களால் கண்டிப்பாக சூப்பர் ஹிரோவை உருவாக்க முடியாது.
                உனது மிடில்க்ளாஸ் அனுபவத்தை வைத்து நீங்கள் சூப்பர் ஹிரோ உருவாக்க நினைப்பது மிகவும் காமடியா இருக்கு. என்ன அனுபவம் உன்னிடம் இருக்கிறது என இந்த கதையை எழுத ஆரம்பித்தாய்? மொழி மட்டும் தெரிந்தால் படைப்பாளி ஆகிவிட முடியாது எனபதை எப்போது தெரிந்துகொள்ள போகிறாய் நன்பா.
                 சூப்பர் ஹிரோவின் இந்த முயற்ச்சிக்கு வேண்டுமென்றால பாராட்டலாம், அதை தவிர்த்து இந்த கதை தொடரின் ஒத்த வரி கூட எனக்கு பிடிக்கவில்லை. உனது சூப்பர் ஹிரோவிடம் சாகசம் இல்லை, அவனிடம் துனிச்சல் இல்லை, வாசகனை அப்படியே கட்டிபோட்டு அவனோடு அவனாக அக முடிய்வில்லை. He sucks and get stucks dear. ஏதோ அறை குறை அறிவியல் யுத்திகளை கொண்டு பருப்பு கடைந்து கொண்டிருக்கீறாய்.
      இதோ கீழ்கானும் கேள்விகளுக்கு பதில் சொல் பார்ப்போம்
  • யாரும் இதுவரை  செல்லாத இடத்திற்க்கு தனியாக சென்றதுண்டா?
  • இதுவரை பழகாத நபரோடு கலந்து கொண்டு ஏதாவது ஒன்றை பற்றி விவாதித்ததுண்டா, செயததுண்டா?
  • முன்பதிவு இல்லாது பயனித்தது உண்டா?
  • வெள்ளம், புயல் இயற்க்கை அழிவுகள் போது தானாக சென்று உதவியது உண்டா?
  • மொழி தெரியாத இடத்திற்க்கு தனியே சென்று வந்ததுண்டா?
  • பங்கி ஜம், Rafting, marathon , trecking சென்றதுண்டா?
  • கேம்பிங் செய்ததுண்டா?
  • பச்சையாக மீனை சாப்பிட்டதுண்டா?
  • பாம்பை கையில் பிடித்ததுண்டா?
  • பாம்பு கறி சுவைத்ததுண்டா?
  • ஈசல் சப்பிட்டதுண்டா?
  • மாட்டின் கொட்டை, தோல் சாப்பிட்டதுண்டா?
  • சாப்பிடாமல் இருந்ததுண்டா?
  • திருடியது உண்டா?
  • விபச்சாரியின் சினேகம் உண்டா?
  • கடவுளிடம் வரம் கேட்காது  நட்பாக என்றாவது ஹெலோ சொன்னதுண்டா?

                You are  cheap, you are writing also cheap. How can you make a super hero dear. இதற்க்கெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லிவிடுவாய், வாய்ப்பு கிடைத்தால் செய்யு துடிக்கும் அந்த  அனுபவ பசி இருக்கிறாதா டியர் சூப்பர் டுபாக்குர் ஹிரோ.

              நீ இந்த கதைகளுக்காக எடுத்து வைத்திருக்கும் குறிப்புகளை பார்த்தேன் அதை பார்த்ததுமே எனக்கு தெரிந்துவிட்டது இது டுபாகுர் ஹிரோ கதையென.

                  உனது எண்ணமெல்லாம் ஜெனிப்பு, மரணம், இறுத்தல், வாதை, பிர்ம்பஞ்சம், போனறவைகள்தான். உனது உடலின் ஆற்றலை என்றும் உணர்ந்தவன் அல்ல, உனது ஆற்றலின் பெருக்கம் புரியாதவன் நீ. அதை வெளிக்காட்டி வித்தைகள் செய்ய தெரியாதவன் நீ. நேற்று எழுதியதை இன்று எழுத துடிப்பவன்,  நேற்று எதை படித்தாயோ அதையே என்றும் படித்து படித்து சிலாகிப்பவன் நீ. நேற்று இருக்கும் அதே முறைகளோடு வாழ பழகியவன் நீ. உனக்குள் சூப்பர் ஹிரோவின் சிறு சுவடு கூட இல்லாத போது எப்படி உன்னால் சூப்பர் ஹிரோ கதை எழுத முடியும். வேனுமென்றால் இருப்பின் வாதையை பற்றி ஃபேக்காக கதை எழுத முடியும்.
     
             இதோ இந்த கடிதம் கண்டு மனம் பேதலித்து போய் இருப்பாய், இனி எதுவும் எழுத முடியாதவன் நான் என உனக்குள் சொல்லிகொண்டிருப்பாய், இல்லை இப்படிதான் எழுத முடியுமென உனக்குள் சொல்லி என்னை நிராகரிப்பாய். இதன் எஸன்சை என்றும் பருக முடியாதவனாக இருந்துவிடுவாய். அதுவே உனது டெஸ்டினி டியர் ரைட்டர்.

 சியர்ஸ்

 பிச்சைக்காரன் 



  

      இதுவரை



  1.    http://nirmalcb.blogspot.com/2013/05/1.html 
  2.   http://nirmalcb.blogspot.com/2013/05/blog-post_25.html 
  3. http://nirmalcb.blogspot.com/2013/05/blog-post_31.html 
  4. http://nirmalcb.blogspot.com/2013/06/blog-post.html 
  5. http://nirmalcb.blogspot.com/2013/06/blog-post.html
  6. http://nirmalcb.blogspot.com/2013/06/5-author-is-dead.html
  7. http://nirmalcb.blogspot.com/2013/06/7.html
  8. http://nirmalcb.blogspot.com/2013/06/8.html 

1 comment:

  1. ஹெலோ ரைட்டர்... உன் ஹீரோதான் டுபாக்கூர் என நினைத்தேன்,,, நீ அதை விட டுபாக்கூராக இருக்கிறாயே... நான் அனுப்பிய மெயிலை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் ரொம்ப அசிங்கமாகி விடும்.. முழுக்க மறைத்தால் கருத்து சுதந்திரம் இத்தியாதி , மிடில் கிளாஸ் மனசாட்சி இத்தியாதி...எனவே மிடில் கிளாசுக்கே உரிய அரைகுறை துணிச்சல் மற்றும் அரைகுறை நேர்மையுடன் என் கடித்தத்தை கொத்து பரட்டோ போட்டு இருக்கிறாய்... நீயெல்லாம் சூப்பர் ஹீரோ கதை எழுதி நாங்கள் படிக்கணுமா... நேரம் !!

    ReplyDelete