Monday, June 24, 2013

எனது சூப்பர் ஹிரோவின் கதை 10: மிடில்க்ளாஸ் எனும் வார்த்தையை வைத்து சல்லி அடிக்க வேண்டாம்.


  எனது சூப்பர் ஹிரோவின் கதை 10:  மிடில்க்ளாஸ் எனும் வார்த்தையை வைத்து சல்லி அடிக்க வேண்டாம்.

    அன்புள்ள பிச்சை,
               உங்கள் காரசாரமான கடிதம் பார்த்தேன், உங்களின் சீற்றம் புரிகிறது. சூப்பர் ஹிரோவின் எந்த சுவடும் இல்லாது கண்டிப்பாக சூப்பர் ஹிரோவை உருவாக்கமுடியாது. உங்களின் இந்த வாக்கியம் நீண்ட சிந்தனைக்குள் ஆளாக்கியது. ஒருவேளை இந்த சூப்பர் ஹிரோக்களின் ஆளுமை நம்மிடம் இல்லை அல்லது அது முழுமையாக இல்லை என்கிற காரனத்தால்தான் நம்மால் இன்னும் ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்க முடியாது இருக்கிறோமோ. எங்கு சென்றாலும் யாருக்காவது கீழ் வேலை பார்த்து அதையே நம்பி ஒரு வித க்ளார்க் ஆளுமையோடு வாழ்கிறோமோ என கூட சிந்திக்க வைக்கிறது.
     நன்பரே எனக்கு வந்த இன்னோரு கடிதத்தை உங்களிடம் காட்ட ஆசைப்படுகிறேன்.

 இதோ கடிதம் 


 மெரின்சோ
         மிடில் க்ளாஸ் பற்றிய உங்களின் புனைவும் அதில் பிச்சையை இழுத்து போட்டு நீங்கள் காட்டிய சாகசமும் சரி புதியதாக இருந்தது. அதுவும் இதுவரை நீங்கள் இருவரும் சந்தித்தது கூட இல்லையென தெரிந்தவுடன் இன்னும் வியப்பாக இருக்கிறது.
         இருந்தாலும் மிடில்க்ளாஸ் பற்றிய உங்களது சிந்தனையில் சில பிழைகளை சுட்டிக்காட்ட விழைகிறேன்.
           முதலின் மிடில்க்ளாஸ் என்பது சுதந்திர இந்தியாவின் பொருளாதர வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப்ப நாம் ஏற்ப்படுத்திக்கொண்ட ஒரு Comfort Zone. இந்த வாழ்வியல் முறையே கோடி மக்களை இன்று அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வைத்திருக்கிறது, இதுவே உலகின் மிக இளமையான தலைமுறைகளை உருவாக்கியது, இதுவே எந்த சிஸ்டமும் சரியில்லாத இந்த இந்திய நாட்டின் மக்கள் இன்னும் பாங்காய் வாழ் வைத்து கொண்டிருக்கிறது. நீங்க சொல்வது போல சாகச வாழ்க்கை வாழ்ந்தால் இன்று இந்தியாவில் பாதிக்கு மேல் உயிரோடு இருந்திருக்க முடியாது. காற்றொடு காற்றாய் கலந்து போயிருப்பர். .
         ஊழல், சுகாதர கேடு, எங்கும் பூசல், எதிலும் குழப்பம் இருந்தாலும் இந்த மிடில்க்ளாஸ் மெட்டாலிட்டியே இதை சகித்து கொண்டும் அதை எதிர்த்து கொண்டும் அதே  நேரத்தில் வாழ்க்கையை தொடர்ந்து கொள்ளவும் உதவியது. எனவே மிடில்க்ளாஸ் எனும் மாய வார்த்தைகளை கொண்டு உங்கள் இயலாமைக்கு காரணம் கற்ப்பிக்க வேண்டாம்.
         ஆம் மிடில்க்ளாஸ் Mind set was required but that should never taught or portrait be THE MIND SET OF India” .
          நான் கடிதம் எழுதியது மிடில்க்ளாஸ் எனும் மாயவார்த்தையை வைத்து இந்தியாவை எடை போட வேண்டாம், அதையும் தாண்டி சாதிக்கும் சிந்திக்கும் நிலையை நோக்கி செலுத்தும் எழுத்துக்களை எழுதுங்கள் என்பதை சொல்லுவதற்க்காகதான். சும்மா மிடில்க்ளாஸ் என சொல்லி சல்லி அடிக்க வேண்டாம்.

 தேங்க்யூ
 வினோத்

No comments:

Post a Comment