Saturday, June 29, 2013

சாருவின் ”சிரோ டிகிரி” - சுவிஸ் இலக்கிய பரிசு கிடைக்கும்


”சிரோ டிகிரி” - சுவிஸ் இலக்கிய பரிசு கிடைக்கும்:
         எப்படி சொல்றது, இதுவரை சிரோ டிகிரி புத்தகம் எனது மேஜை மீதுதான் இருந்து கொண்டே இருக்கிறது, புத்தக அலாமாரிக்குள் சென்றதே கிடையாது. ஏனோ அது எனது பார்வையிலே இருந்தால் நல்லா இருக்கு. தோனும் போதெல்லாம் வாசிப்பேன். எனக்கு மிகவும் பிடித்த, எப்போதும் சிலாகித்து வாசிக்கும் நாவல் சிரோ டிகிரி, வித்தியாசமான கட்டமைப்பில் சாருவின் அற்புத மொழி நடையில் அமைந்த இந்த புத்தகம், தமிழ் புதினங்களில் மிக முக்கியமான ஒன்று.
         வாசகனின் அறிவுக்கு சவால் விட கூடிய படைப்பு இது, லேசில் உள்ள செல்ல முடியாது, ”இதுதான்” “இத பற்றியது” என சொல்லி இந்த புத்தகத்தை கடந்து போக முடியாது, முடிவில்லாத அனுபவத்தை தரக்கூடியது. சிரோ டிகிரிக்கு பிறகு  “Dictionary Of Khazars” தான் இப்படிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை தந்தது.
          சிரோ டிகிரியில் இருக்கும் ஸ்டைய்ல், கதை சொன்ன விதம் எல்லாம் அசர வைக்க கூடியது. இது சொல்லும் தத்துவங்கள், அதன் மீது வீசி எறிந்துவிட்டு போகும் விமர்சனங்கள், அதன் அங்கதம், மனித அவலம், காமம், பசி. செக்ஸை பற்றிய பளிர் பக்கங்கள் என சாருவின் எழுத்தில் மிளுரும் இந்த புத்தகம் என்னை பின் நவினத்துவம் ஹெடோனிசம் போன்ற சமாச்சாரங்களை அறிமுக படுத்தியது. மெட்டா ஃபிக்ஸன், De construction என பல வித அற்புத அறிவை தேடி கண்டுபிடிக்க உதவியது. இதில் வரும் தெனமெரிக்க எழுத்தாளர்களையும், இசை கலைஞர்களையும் பற்றி நூறு புத்தகம் எழுதலாம். எல்லாவற்றையும் ரெத்தின சுருக்கமாக , ஸ்டைய்லா சொல்லி கொண்டு போகும் இது.

          இதுவே சாருவின் எழுத்தில் மோகம் கொள்ள செய்தது. பின்பு அவரை பார்த்தும் பழகவும் வைத்தது. கடந்த முறை அவரை சந்தித்தபோது அவரிடம் சிரோ டிகிரி புத்தகத்தில்  ஆட்டோக்ராப் வாங்கிய அனுபவம் மறக்க முடியாது. 


              சிரோ டிகிரியையும் சேர்த்து மொத்தம் 11 புத்தகங்கள் இந்த விருது பெறும் பட்டியலில் உள்ளன.  இந்த Jan Michalski பரிசு, சுவிஸ் நாட்டில் உள்ள Jan Michalski எனும் அமைப்பினர் வருடா வருடம் உலக இலக்கிய எழுத்தாளர்களுக்காக வழங்கி வரும் பரிசு. இதன். பரிசு தொகை 50000 சூவிஸ் ப்ராங்க் அதாவது கிட்டத்தட்ட முப்பது லட்சம் இந்திய ருபாய்கள். இறுதி சுற்றுக்கு இந்த 11 புத்தகத்திலிருந்து டாப் 3 புத்தகங்கள் தேர்ந்தடுக்கபட்டும். அவற்றுள்  மிகச்சிறந்த புத்தகத்திற்க்கு இந்த பரிசு கொடுக்கிறார்கள். இறுதி சுற்றிற்க்கு வந்த  சிறந்த முன்று புத்தகத்தின் ஆசிரியர்களை கவுரபடுத்த Maison de l’Ecriture எனும் இடத்தில் மூன்று மாதம் தங்க வைத்து பெருமை படுத்துகிறார்கள்.
           சிரோ டிகிரிதான் என்னை இலக்கிய வாசிப்புக்கு இழுத்து சென்றது. அதுவே எனது சிந்தனை செயல் எல்லாவற்றையும் மாற்றி போட்டது, அதுவே சாருவின் எழுத்துக்கள் மீதும் அவர் மீதும் மோகம் கொள்ள வைத்தது. கண்டிப்பாக சிரோ டிகிரி இந்த பரிசை வெல்லும் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சாருவிற்க்கு இனி தொடர போகும் புகழுக்கு பாராட்டுக்கள்.
     இதுதான் http://www.rts.ch/video/info/journal-19h30/4871487-vd-la-maison-de-l-ecriture-de-montricher-ouvrira-enfin-ses-portes-fin-juin.html இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர்கள் மூன்று மாதகாலம் வாசம் செய்யக்கூடிய அழகான Maison de l’Ecriture அதாவது House of Writing/ Literature. ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் கட்டிருக்காங்களாம்.  இது என்ன, எப்படியான பயன்பாட்டிற்க்காக கட்டப்பட்டது எனபதை அறிந்துகொள்ள முடியவில்லை, அதற்க்கு மொழி தெரியவில்லை என்கிற காரணமா இல்லை இப்படியான ஒன்று இதுவரை பார்த்ததோ அறிந்திருக்கவோ இல்லை என்கிற காரணமா தெரியல. இது அறுங்காட்சியகமா, பொருட்காட்சி திடலா, நட்சத்திர ஹோட்டலா, பார்க், ரிசார்ட், என எது மாதிரியாகவும் இல்லை. 
        ’இதை பற்றி சாரு சொல்லி தெரிந்து கொள்ளவே ஆசை’
 Notes:
       அந்த 11 புத்தகங்கள் என்ன என்பதை இந்த லிங்கில் சென்று                   பார்க்கலாம்.  http://www.fondation-janmichalski.com/prix-jan-michalski/edition-2013/
1.   Mahmoud Dowlatabadi - Le colonel
2.   Janusz Glowacki  - Good night, Djerzi !
3.   Serge Gruzinski - L’Aigle et le Dragon : Démesure européenne et mondialisation au XVIe siècle
4.   Chan Koonchung  - Les années fastes
5.   Robert Macfarlane  - The old Ways : A Journey on Foot
6.  Charu Nivedita - Zero Degree
7.   Uday Prakash - The walls of Delhi
8.   Tiphaine Samoyault -  Bête de cirque
9.   Steve Sem-Sandberg - Les dépossédés
10.  Enrique Vila-Matas - Chet Baker pense à son art
11.  Chris Ware  - Building Stories
       

No comments:

Post a Comment