சாதி எனும் மாயை – பிகே முகர்ஜி எழுதிகொண்டிருக்கும் நூலிலிருந்து:
We don’t know what we Don’t know:
சாப்பிடும்
உணவு, பழக்க வழக்கம், பேசும் முறை, பெயர், குழந்தையின் பெயர், வீட்டுன் அலங்காரம்,
கல்யாணம், கருமாதி, காது குத்து, பார்க்கும் சினிமா, படைக்கும் படைப்புகள், கலை, கலை
ரசனை, கலாச்சாரம், வியாபாரம், வேலை, உடை, நடை, லொட்டு, லொசுக்கு என எல்லாவற்றிலும் சாதியின்
கூறுகளையும் அதன் சாயலையும் உள் அடக்கியதாகவே இருக்கும் போது சாதி இல்லையென எப்படி
சொல்ல முடிகிறது.
சாதி இருக்கு
அதுவும் ரெத்தம் சதை என ஒவ்வரு செல்லிலும் இருக்கிறது. சாதி இல்லாமல் இங்கு எதுவும் இல்லை.
சாதி இல்லை என்பது வெறும் காட்டு கூச்சல். எதுவுமே இங்கு சாதி இல்லாமல் இல்லை, பிறப்பு
முதல் இறப்பு வரை சாதிதான். அதுவே இங்கு வாழ்க்கை முறை அதுவே இது சரி அது தவறு என சொல்கிறது.
பெற்றோர் சொல்லும் அறிவுரை உற்றார் காட்டும் பரிவு தோழர்கள் சொல்லும் வழிகள் என எல்லாவற்றிலும்
சாதியின் சாயல் இல்லாது இல்லை. ஏதோ ஒரு விதத்தில் சாதிகளுக்குள் நம்மை அடகு வைத்து விட்டோம்.
அரசியலென்றால் எதுவும் செய்யலாம் என்கிற போது
தமிழனின் அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கும் சாதியை விட்டு வைப்பார்காளா. சாதிய அரசியலின்
பின்புலம் அதன் ஆராவாரத்திற்க்கான காரணம் சாதி வெறி அல்ல. நமது வாழ்வோடும், வாழ்வின்
முறையோடும் கலந்து போன சாதி எனப்படுவதுதான். ஆழமாக யோசித்தால் சாதி என்பதை பிரித்து
போட்டால் தமிழக மக்களின் ஆளுமை வெறும் ”ஜிரோ”. Deep void vacuum exist over there
with out Cast.
வாழும் சமுகத்தால் கட்டமைக்கபட்ட “ நான்” என்பதில் கண்டிப்பாக சாதியின் சாயல் இல்லாமல் இல்லை.
அப்படியெல்லாம் எனக்கு இல்லை என்பவர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் சாதியை பற்றி கிண்டல்
நக்கல் செய்து பாருங்கள், முடிகிறதா என, முடியவில்லை என்றால். ஏன் என யோசிக்கவும்.
இல்லாத ஒன்றை பற்றி ஏன் நம்மால் கிண்டலாகவும் நக்கலாகவும் சகஜமாகவும் பேச முடியவில்லை?
சாதி
வேறு நாம் வேறு அல்ல. நமக்குள் இருக்கும் சாதி உனர்வுதான் சாதி இல்லை சாதி இல்லை என
சொல்ல வைக்கிறது. அந்த உனர்வுதான் சாதியை பற்றி பேசினால் எனக்கு பிடிக்காது எனவும்
சொல்ல வைக்கிறது, நமது மனதின் ஆழத்தில் இருக்கு சாதி எனும் கட்டமைக்கப்பட்ட “நான்”தான்
அதை பற்றீய எதிர்ப்பை பதிவு செய்ய வைக்கிறது, அதை ஏதிர்த்து போராட வைக்கிறது, இப்படி
செய்வதாலே அதன் இருத்தலை நமக்குள் ஸ்திர படுத்தி கொள்கிறது. அப்படி சொல்லுவதாலும் செய்வதாலும்
”நான்” எனும் ஈகோவிற்க்குள் இருக்கும் சாதி உனர்வு புன்படாது பார்த்து கொள்கிறது. இது
ஒரு self Defence mechanisam போல. நமக்கே தெரியாமல் நமக்குள் நடக்கும் மாயை.
சாதி என்பது மக்களின் அடையாளமாகவும் வாழ்வியல் முறையாகவும்
இருக்கும் பட்சத்தில் சாதி இல்லை, சாதி உனர்வில்லை சாதி வெறி இல்லை என்பது அதி பயங்கர
தீவிரவாதம்.
எல்லா சாதிய சண்டை கலவரம் பிரச்சனைகளுக்குள்ளும்
நமக்கே தெரியாத வாழ்வியல் சிக்கல் இருக்கும். அதை
கண்டு கொள்வதும் அதை களைவதும் கடினமென்றாலும் அதை செய்யும் வரை சாதி சாதி என சொல்லிகொண்டு
வாழ்க்கையை ஜல்லி அடித்து கொண்டு ஒட்டலாம். கண்டுபிடித்து கொல்ல முடியாத நச்சு பாம்பிற்க்கு பதில் ”பாம்பு”
என பேப்பரில் எழுதி அதை போட்டு நசுக்கி கொன்று அல்லது கொல்வது போல பாவ்லா காட்டி கொண்டு
இருக்கலாம். சாதி இல்லை என சொல்லி சப்பை கட்டுவதை காட்டிலும் சாதியை தாண்டி பிரச்சனைகளை
தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அல்லது நம்மால் சாதியை தாண்டி யோசிக்க முடியவில்லை என்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.
The End
பின் குறிப்பு:
இந்த பிகே முகர்ஜி யார்ன்னு தேடி கண்டுபிடிக்க
முயற்ச்சி செய்தால் பயன் ஒன்றும் கிட்டாது. எனென்றால் அது நீங்களாக இருக்கலாம் உங்கள் பக்கத்தில் இருப்பராக இருக்கலாம் கூட ஏன் நானாக கூட இருக்கலாம், என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால்
அது தேவை இல்லாத ஒன்று.
முட்டாள் தனமான பதிவு என சொல்ல மாட்டேன், ஆனால் நேர் பொருள் கொண்டால் நம்மை முட்டாளாக்கி விடும் பதிவு. தம் சாதியை இழிந்தால் கோவம் வருமா? எனக்கு வந்ததில்லை, நானே வசைந்துள்ளேன். என் வாழ்வில் சாதியின் கூறு இல்லை என சொல்லமாட்டேன், ஆனால் குறைந்து விட்டது, சடங்கும் சம்பிரதாயமும் மாற்றியமைக்கப்பட்டு விட்டன. பிறந்த போது மொட்டையும் அடிக்கவில்லை, காதும் குத்தவில்லை, பள்ளியில் சாதிச் சான்றிதழ் ஏதும் கொடுக்கவில்லை, குல தெய்வமும் கோயிலும் போய் பல ஆண்டுகளாகுகின்றன, இத்தனைக்கும் எந்தையும் தாயும் நாத்திகர்கள் இல்லை. இன்று என் சாதி என்ன என்பதையே நினைத்தும் பார்ப்பதில்லை. முடியும் என்றால் எல்லாம் முடியும், வேறு சாதியில் மட்டுமே மணப்பேன் என வீட்டில் உறுதியாக சொல்லியும் விட்டேன். சோற்றில் உப்பிட்டு உண்ணும் எந்த ஆண்மகனுக்கும் சாதி வேண்டாம், உழைப்பும், அறிவும் போதும்.
ReplyDeleteஅன்புள்ள நிரஞ்சன், உங்கள் கருத்துகளுக்கு நன்றி. பதிவை சரியாக புரிந்து கொண்டுவிட்டிர்கள் கண்டிப்பாக நீங்கள் சாதியை கடந்துவிட்டிர்கள் என தோனுகிறது.
Delete