Monday, August 5, 2013

தூத்துகுடி மாதா தேர் பவனி - மனித கொண்டாட்டம்

தூத்துகுடி மாதா தேர் பவனி - மனித கொண்டாட்டம்

இன்று தூத்துக்குடி மாதா கோவில் தங்க தேர் பவனி பார்த்தேன். மீனவ மக்களின் குல தெய்வமாகவும் அவர்களின் வரலாற்றின் சாட்சியாக விளங்குகிறது  இந்த மாதா கோவில் வரலாறு , தென்னக மீனவ மக்களின் வரலாறும் கூட. முத்தும் பவளம்  சங்கும் குளித்த தென்னக மீனவர்கள் கிறிஸ்துவம் தழுவியதால் அவர்கள் உள்ளடக்கிய வரலாறு மறக்கப்பட்டதாகவே இருக்கிறது.
     ஆதி பாண்டிய வமசத்தினரும் மீனாட்சி அம்மனை தெயவமாக வழிபட்டு வந்த மீன மக்களின் தாயாக விளங்குவது  இந்த மாதா. தூத்துகுடி சுற்றி உள்ள மீனவ துறைகளின் தலைமையாக இருக்கும் தூத்துக்குடியில் இன்று  நடந்த தேர் பவனி மிக சக்தி வாய்ந்த மீனவ சமூகத்தினரின் பறைசாற்றலாகவே இருந்தது. கிறுஸ்துவ / விவிலியம்   நம்பிக்கையில் இப்படியான சப்பரம் தூக்குவதும் தேர் பவனிகளும் அங்கிகரிப்படாத வழிபாடுகள் என்றாலும் அப்படி செய்யும்  முறையை மறுத்தோ எதிர்த்தோ கத்தோலிக்க திருச்சபை இருப்பதில்லை. இது கடவுளை கொண்டாடும் இந்த ஊர் கலாச்சாரம் என மரியாதை செலுத்துகிறது உண்ணிப்பாக கவனித்தால் இந்த தேர் பவனிகளில் எந்த பாதிரியாரும் ஈடுபடமாட்டார். ஆலயத்தில் திருப்பலி முடிந்தவுடன் அவரின் வேலை முடிந்துவிடும். பின்பு வரும் கொண்டாட்டங்கள் அந்த ஊர்/ மக்கள்/ சமுகம் சார்த்த கொண்டாட்டமாக இருக்கும். இந்த கொண்டாட்டங்களில் உள்ள Administration வேலைகளை சிறிது மேற்பார்வை பார்ப்பார் பாதிரியார்கள் அதை விடுத்து எந்த விதத்திலும் தலையிடுவதை பார்க்க முடியாது.

     இது ஒரு விசித்திரமான முறையாக இருந்தாலும். இதன் அரசியம் சமுக பின்னணி  ரசிக்கவும் பாராட்ட பட கூடியது.
 தாங்கள் நேசிக்கும் தாய் வழி தெய்வத்திற்கு அவர்களது தொன்று தோட்டு பாரம்பரிய முறையில் வணக்கத்தையும் நன்றியையும் செய்யும் உரிமையை - அந்த வெளியை அவர்களுக்கு அளிப்பது இந்த செயல்.  மேலும் இப்படியான தேர் பவனிகள் ஆண்மிகம மட்டுமின்றி சமுக / ஊர்/ சாதிய  கொண்டாட்டமாகவும் இருப்பதை நாம் கான்கிறோம்.  
 / சமுகம் சாதிய மதிப்பிடுகள்தான் நமது வாழ்வாகவும் முறையாகவும் இருக்கும் படசத்தில் அதன் வீரியத்தை வெளிக்காட்ட இப்படியான கொண்டாட்டங்கள் இருந்திருக்கிறது இன்றும் இருந்து வருகிறது.

 இன்று தேர் சரியாக  12 மணிக்கு  மீண்டும் கோவிலுக்குள் வந்தது. இப்படிப்பட்ட திட்டமிடல் ஆச்சரியமாக இருக்கீறது இப்படியாக 12 மணிக்குள் தேரை அதன் இருப்பிடத்தில் சேர்த்த விதம்  என்னை மிகவும் கவர்ந்தது திசை தெரியா கடலுக்குள் படகை தீர்க்கமாக செலுத்துபவர்கள் அல்லவா இவர்கள் ,  கடல் அலையை எதிர்த்து பயணிக்கும் மன சக்தியையும் இன்று என்னால் காண முடித்து.
    கொண்டாட்டங்களில் பல்வேறு வடிவங்களை   உள்  அடக்கியது  சமுகம் நமது. அதன் பன்முகத்தன்மையை ரசிக்கவும் கொண்டாடவும் இன்று போல் என்று எனக்கு  மனம் இருக்க கடவதாக.

4 comments:

 1. When i worked in Tuticorin city 2005-2009 , never missed this festival.. Such. a wonderful crowd and so many fun games.. Remembrale days.. If u can notice most of the Hindu peopls comes than Christian People..

  ReplyDelete
 2. மண்சார்ந்த வழக்கத்தோடு வழிபாட்டுமுறை... இப்படி தாய் தெய்வ வழிபாட்டை கிறிஸ்தவத்தில் ஆரம்பித்தவர் வீரமாமுனிவர்.18 நூற்றாண்டில் திருச்சி மாவட்டத்தில் ஒரு கோவிலைக் கட்டினார், அந்த கோவிலின் தாய் ‘மரியாள்’க்கு பெரியநாயகி எனப் பெயரிட்டார். அந்த ஊர் திருக்காவலூர் என் மாறியது. தமிழ்ப்பண்பாட்டில் தாய்த்தெய்வ வழிபாட்டை உணர்ந்ததால் இந்த நடைமுறையை கொண்டுவந்திருப்பார் போல.

  ReplyDelete
  Replies
  1. Thank you very much for your comments

   Delete
 3. Good article Nirmal. பெங்களூரிலும் இதுபோல் தேவிமாதா, தேரில் பவனி வருவதை சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete