சுததிர தின டிவி நிகழ்ச்சிகளை முன் வைத்து ஒரு ...................
இந்த சுதந்திர தின நாளில் டிவி நிகழ்ச்சி அருமையாக இருந்தது, பட்டிமன்றம் சொல்லவே வேண்டாம் எப்போதும் அருமையாக இருக்கும் அதுவும் இந்த முறை தலைப்பு உண்மையிலே மிக சிறந்ததாக வைத்திருந்தது பாராட்ட பட வேண்டியது, பட்டிமன்ற பேச்சாளர்கள் பழைய முகங்கள்தான் என்றாலும் சலிப்பே இல்லை, புதியதாக வந்தவர்களும் பழையவர்கள் போன்றே பேசியது மிகுந்த நிம்மதியை தந்தது.. அப்புறம் கலை துறையினரில் பேட்டி எனக்கு பிடிகாவிட்டாலும் அதன் மெருகும் அதிகமாகியுள்ளதை ஒத்து கொள்ள வேண்டும். நடிகை அனுசியா, நடிகை திரிஷா, அமலா பால், ஹாஸ்னிகா போன்ற சமிபத்திய பிரபலங்கள் மட்டுமின்றி கடந்த கால நடிகர் நடிகைகளின் பேட்டியை இந்த சுதந்திர தினத்தில் சேர்த்தது புதியமாக இருந்தது. பேட்டிகளை வீட்டுக்குள் மட்டும் வைக்காமல், அவர்களது கார், தோட்டம், சினிமா செட், பீச் மற்றும் ரோட்டில் வைத்தது புதுமையாக இருந்தது. நடிகர்கள் / நடிகைகளை பொதுஜனங்களோடு சேர்ந்து கொண்டு கொண்டாடிய சுததிர தினம் இந்த நாளின் முத்தாய்ப்பாக இருந்தது. மிக்க நன்றீ.
சுததிர இந்தியாவில் பிரச்ச்னைகளை முன் வைத்து நடத்திய நானா நீனா அம்சமாக இருந்தது, இது இன்றைய தேவையாகவும் பட்டது. இப்படியான நிகழ்ச்சிகள் முன் வந்திருந்தாலும் புதியதாகவே தோன்றியது, பேசியவர்கள் எல்லோரும் அப்படியே நான் பேச வேண்டியதை பேசியதால் இன்னும் ஈர்ப்போடு பார்த்தேன்.
சுந்ததிர இந்தியாவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கிராமத்து கலைகள்தான், அதை வலியுறுத்த ஒலிபரப்பிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் உண்மையிலே சமுகத்தில் அதுவும் இந்த தலைமுறை சமுகத்தினரிடம் இந்த கலையை கொண்டு சேர்க்கும். இந்த முயற்ச்சியை பாரட்ட வார்த்தைகள் இல்லை, எனலாம்.
காமெடி நடிகர், வில்லன் நடிகர், குனசித்திர நடிகர், புதிய நடிகர், பழயை நடிகர், ஹிரோ நடிகர் பேட்டி மட்டுமின்றி புதிய இசை அமைப்பாளர், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்களின் பேட்டிக்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படியாக நிகழ்ச்சிகளில் டிவி ஒலிபரப்பில் பன்முகத்தனத்தை கொண்டு வந்தது - அந்த நாள் முழுவதுமாக டிவிக்கு முன்னால் உடகார வைத்தது என்றால் அது மிகை ஆகாது.
அதிலும் சின்ன திரை நட்சத்திரங்களின் வெளி நாட்டு கலை நிகழ்ச்சியை இந்த சுததிர தினத்தில் ஒலிப்பரப்பியது எங்களை போன்று தினம் அபிஸ் செல்லுபவர்களுக்கு எவ்வளவு வசதியாக இருந்தது என சொல்ல வேண்டியதில்லை.
இன்னும் நீண்டுகொண்டே செல்வதால், சுதந்திர தினத்தில் ஓலிபரப்பபட்ட திரைபடம் பற்றி சொல்லிவிட்டு முடித்துவிடுகிறேன், மிக சமிபகாலத்தில் வெளிவந்ததாக படங்கள் இருந்ததால், மிகுந்த ரசனையோடு பார்க்க முடிந்தது. இந்த படங்களை தியேட்டருக்கு சென்று பார்திருக்கலாம் என ஒரு நிமிடமும் கூட தோன்றவில்லை. உண்மையிலே மிகுந்த ரசனையான உற்ச்சாகமான சந்தோஷமான சுததிர நிகழ்ச்சிகளை கொண்டு அனைத்து தொலகாட்சிகளுக்கும் வந்தமைக்கு நன்றீ.
இந்த பதிவை சுந்ததிர தினத்திற்க்கு முன் பார்த்திருந்தால் அது கண்டிப்பாக Time Travel என எடுத்து கொள்ளவும். பிற்ப்பாடு பார்க்க நேர்ந்தால் மொக்கையென எடுத்து கொள்ளவும்.
வணக்கம்
ReplyDeleteமுற்கூட்டி பாரதத்தின் சுதந்திர நாள் அன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சி நிரலை தெரியப்படுத்தியமைக்கு மிக நன்றி உங்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Your perspective is excellent..
ReplyDeleteருபன் மற்றூம் நெஞ்சம் சொல்லுதே இருவருக்கும் எனது நன்றிகள்.
ReplyDelete