குழப்பங்களின் அறிவியல்: பட்டர்ஃப்ளை எஃபெக்ட்
Edward Lorenz ஒரு கணித அறிஞர், ஆனால் எப்படியோ பருவகாலங்கள் மற்றும் வானிலை கனிக்கும் துறையில் ஈடுபட்டு அதில் ஆராய்ச்சி செய்து வந்தார். எப்படியாவது பருவநிலைகள் மற்றும் வானிலைகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும் என லோரென்ஸின் முயற்ச்சி என்றும் தோல்வியில்தான் முடிந்தது. இப்படியான அவரது ஆராச்சியில் ஒரு நாள் அவரது simulator ஐ ஸ்டார்ட் செய்து காபி குடித்துகொண்டிருந்தார், அப்போழுது அவரது சிமுலேட்டர் கன்னாபின்னாவென முடிவுகளை வெளியேற்றியது, அரண்டு போன லோரன்ஸ்முதலில் அந்த சிமுலேட்டர் ஒடிகொண்டிருந்த கனினிதான் பழுதடைந்துவிட்டதென்று என்னினார், பின்னர் அவர் இந்த கன்னாபின்னாவிற்க்கு அவர் முதலில் சிமுலேட்டருக்கு கொடுத்த தவறான இன்புட் எண்தான் என்று கண்டுகொண்டார். ஆனால் அப்படியான தவறுதலாக கொடுத்த எண்ணிற்க்கும் சரியான எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் மிக மிக குறைவாக இருந்த போதும் முடிவுகள் அளவுக்கு அதிகமாக மாற்றி அமைக்க காரணம் என்ன? என்பதில் தொடங்கியதுதான் குழப்பங்களின் அறிவியல்.
CHAOS.கயோஸ் என்றால் குழப்பம், குழப்பம் என்றால் முன்னதாகவே தீர்மானிக்க முடியாத அடுத்த கணத்தின் நிலையை துல்லியமாக அறியமுடியாத நிலை. துல்லியமாக அறிந்துகொள்ளுதல் எனபதை அறிவியல் கோணத்தில் புரிந்து கொள்ளுதல் அவசியம். அதாவது 100% சரியாக அதன் நிலையை தீர்மானிக்க முடியாது நிலை. இப்படியான குழப்பம் நிலைதான் நமது சூழல், சுற்றுபுற சூழலின் சிறிய மாற்றம் அல்லது அதன் துவக்கம் அதன் முடிவை அதிக அளவில் மாற்றக் கூடியது என்றார்.
அறிவியல் என்றாலே கரார்தனம் , இருக்கு அல்லது இல்லை எனும் கருத்துக்கு எதிராக இப்படியான கண்டுபிடிப்பு பல வருடங்களாக அங்கிகாரமின்றி கெடப்பில் கிடந்தது. அவர் இப்படியான குழப்பம் முறையை உருவாக்கியும் காட்டிருக்கிறார். அப்படியான குழப்ப முறைக்கான ( அதென்ன குழ்ப்ப முறை, குழ்ப்பம் என்றாலே முறையற்றதெல்லவா?) வாய்ப்பட்டையும் உருவாக்கினார். இதோ கீழே இனைக்கப்பட்டுள்ள யூ ட்யூப் ல்ங்கை பாருங்கள் அதுதான் அவரது வாய்ப்பாட்டில் இயங்கும் ஒரு
குழப்ப முறை. http://www.youtube.com/watch?v=zhOBibeW5J0
ஒரு சக்கரம், அதில் கிழே ஓட்டை உள்ள பக்கெட்டுகள், மேலே இருந்து கொட்டும் தண்ணிர், தண்ணிர் பக்கெட்டை நிரப்பும்போது சக்கரம் சூழல ஆர்ம்பிக்கிறது ஆனால் அதன் சுழற்ச்சியின் அடுத்த கட்டம் யாரும் கணித்துவிட முடியாததாக இருக்கிறது. எனென்றால் தண்ணிரின் எடைக்கு ஏற்ப்ப வேகம் இருக்கும் அதே சமையம் வேகத்தை பொறுத்து பக்கட்டில் தண்ணிர் நிரம்புவது இருக்கும், இப்படியாக ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பதால் அதன் நிலையை துல்லியமாக கணக்கிடமுடியாதாக இருக்கிறது. அது வலது புறம் சுற்றலாம், இடது புறம் சுற்றலாம், மெதுவாக, வேகமாக, அதி வேகமாக, அல்லது சுற்றாமல் நிற்க்கலாம், முழு சுற்று சுற்றல்லாம் இப்படியான பல வாய்ப்புகளின் ஏதாவது நடக்கலாம் எது நடக்கும் அதன் அளவு எப்படியாக இருக்கும் என்பதை முன் கூட்டியே சொல்லவே முடியாததாக இருக்கிறது. இவரது ஃபார்முலாவை க்ராஃப் பேப்பரில் பதிவு செய்தால் அதில் வன்ணத்துபூச்சிக்கு நிகரான வடிவம் கிடைக்கிறதால் அதை பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என அழைத்தார். இதை கொண்டே அவர் சிறு வன்ணத்து புச்சியில் இறக்கையின் அதிர்வு புயலை உருவாக கூட செய்யும் என்றார்.
இப்படியான choatic systemதான் நமது சூழலும், எனவே அடுத்த முறை வானிலை அறிக்கையில் மழை வரலாம், வராமாலும் போகலாம் என்கிற பதத்தில் அர்த்தம் இருக்கு என்பதை உணர்வோம்.
இந்த கயாஸ் அல்லது குழப்ப முறை , ஒழுங்கின்மையாக தெரிந்தாலும் அதற்க்குள் ஒரு ஒழுங்கு இருக்கிறதாக சொல்கிறார்கள், அதாவது குழப்பமாகவே இருப்பது கணிக்கமுடியாதாதக இருப்பது மற்ற விஞ்சான விதிகளுக்கு உட்பட்டு இருப்பது போன்றவைகள் அவை. இப்படியான குழ்ப்ப முறை இயற்க்கையில் சாத்தியம் மேலும் இயற்க்கையின் பல முறைகள் இப்படியான குழப்ப முறையாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. குழப்பம் உள்ளது முறையற்றதல்ல அதே அதன் முறை.
No comments:
Post a Comment