Monday, September 2, 2013

ரிச்சர்ட்ஸ்,பாப் மார்லி மற்றும் உசைன் போல்ட்:

ரிச்சர்ட்ஸ்,பாப் மார்லி மற்றும் உசைன் போல்ட்:

  இளைமையிலே மேற்க்கு இந்திய தீவுகள் கிரிகெட் அணியினர் மீது திராத மோகம் கொண்டுள்ளவனாக இருந்திருக்கிறேன் என இப்போழுது தெரிகிறது. கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் அண்ணன்மார்கள் நிறைய பேர் மேற்கு இந்திய அணியினரை ரசிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். கிரிக்கெட் அதிகம் பார்க்கபடுவதை காட்டிலும் அதை பற்றி கேட்டல், வாசித்தல் மற்றும் பேசுதலே அதிகமாக இருந்த அந்த போழுதுகளில் இப்படியான ரசனை எனக்கு வந்திருக்க கூடுமென நினைக்கிறேன்.
      ரிச்சர்ட்ஸ், க்ளைவ் லாய்ட், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், அண்டி ராபர்டஸ், ஜெஃப் டுஜான், லேரி ஹோல்ம்ஸ், ரிச்ஜி ரிச்சர்டசன், கோர்டன் க்ரிண்ட்ச், மைக்கல் ஹோல்டிங், கஸ் லோகி என வாழ்வில் என்றும் மறக்க முடியாத பெயர்களாகிவிட்டன. மால்கம் மார்ஷலின் பவுளிங் ஆக்‌ஷன் இன்று வரை எனக்குள் இருக்கிற்து என்பது எனது பவுலிங் அக்‌ஷனை பார்த்தவுடன் கண்டுபிடித்துவிடலாம்.

 இவர்கள் மூலம்காவே கருப்பு மீது ஒரு ஈர்ப்பு, கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த வீரியம் அதன் வேகம் அதன் திறன் என கருப்பு மனிதர்களிடம் நீங்காத ஈர்ப்பை கொண்டு வந்துள்ளது. கருப்பு அழகிளே அதிகம் என்னை ஈர்க்கிறார்கள். கருப்பு மயக்கத்தை கொடுக்கிறது. இப்படியாக கருப்பு மனிதர்கள் என்னை ஈர்க்க தவறுவதில்லை.
            எனக்கு பிடித்த கருப்பு மனிதர்கள் ஆளுமைகளை வரிசை படித்தினால் ஆப்ரிக்கா வரை சென்று வருகிறது. ஆனாலும் கரிபியன் மனிதர்கள் மனதுக்கு மிக நெருங்கிவிடுகிறார்கள். இதோ இன்று ஜெமைக்கா ஒட்டபந்தை வீரக்ளின் ரசிகன், உசைன் போல்ட் மற்றும் ஷெல்லி ஆன் ஃபெரெஷியர் விருப்பமான 100 மீட்டர் ஓட்ட பந்தைய வீரகள். அதற்க்கு நிகராக எத்தியாப்பியாவை சார்ந்த விளையாட்டு வீரர்களை பிடிக்கிறது. எத்தியாப்பியா பெண்கள்தான் உலகிலே மிக அழகானவார்களாக தோன்றுகிறார்கள். பிற்ப்பாடு எத்தியோப்பியாவிற்க்கும் மேற்கு இந்திய தீவிற்க்குமான நெருக்கத்தை படித்து அறிந்து அசந்துவிட்டேன்.
                   இசையென்றாலும் பாப் மார்லி அப்படி மனதோடு ஓட்டிவிட்டார், ஜமைக்கா தந்த இசை கடவுள் பாப் மார்லி, குரலின் வசிகரம் கிறங்க செய்கிறது. இன்னும் புதிய செய்திகளையும் சரித்திரங்களை அறியும் போதெல்லாம் இந்த கருப்பு அழகர்களும் அழகிகளும் அசத்திவிடுகிறார்கள்.
 ஒரு வேளை நானும் அவர்களின் ஒருவனாக இருந்திருக்க கூடுமோ எனவும் தோனுது. கிரிக்கெட் என்றாலும் சரி இசையென்றாலும் சரி ஓட்ட பந்தையம் எனறாலும் சரி அதில் ஒரு வீரியமும் துள்ளலும் இருக்கும் இவர்களிடம் இது இதுவரை பார்த்திராத வித்தியாசமான ஸ்டைய்லை கொடுத்துவிடுகிறது என நம்புகிறேன், அந்த தூள்ளல் என்னை ஆச்சரியபடுத்துகிறது அதன் பெருமிதம் போலித்தனமாக இல்லாததாக தோன்றுகிறது. ஒரு வேளை இந்த துள்ளலும் வீரியமும் நம்முள் குறைவாக இருப்பதால் வந்த ஈர்ப்பா என்றும் தெரியவில்லை.


        இதோ ஒரு எத்தியோப்பி வீராங்கனை நீண்ட தூர ஒட்ட பந்தையத்தில் வெற்றி கொள்கிறாள், அதோ உசைன் போல்ட் அவனது ட்ரெட் மார்க் வெற்றி குறீயிடை கூட்டத்தினரை பார்த்து காட்டுகிறான். சிலிர்ப்பை தரும் தருனங்களாக இருப்பது ஆச்சரியபடுத்துகிறது. அந்த ஆச்சரியத்தோடு பாப் மார்லி சடை முடிகளோடு பஃபலோ சோல்ட்ஜர் என தனது ராஸ்தாஃபெரி பாதையை பற்றீயும் கருப்பின அடிமைத்தனத்தை பற்றி பாடுகிறான்.5 comments:

 1. I really like u r article man. In fact you are talking about the same desire I have on the Caribbean cricketers and bolt. But the only different is I like Veronica cambell instead of Fraser. Thanks boss.

  ReplyDelete
 2. Good One...Good to see my thoughts in paper! Love their natural flair whether in sports or entertainment!

  ReplyDelete
 3. Thank you for your visit and for giving comments. Your comments mean Lot to me.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. Nirmal you must have heard Boney M. unforgettable. Voice of Liz Mitchell of Boney M. And almost all of their songs. Fine post. Viv Richards, CH Lloyd, Jeff Dujon, Andy Roberts, Malcom Marshall, Greenidge, Roy Fredricks, They are my heroes. On their last visit to Chepauk I had gone. Cant forget that day. Incidentally one churner called Gavaskar scored his 32/33 century. I dont remember that. Bcause I went for bidding farewell to my heroes.

  ReplyDelete